Ajithkumar Car Race: கார் ரேஸில் இருந்து அஜித் விலகல்! சந்தோஷப்படவா? கவலைப்படவா?
துபாயில் நடக்கும் கார் பந்தயத்தில் இருந்து வீரராக விலகுவதாகவும், அணியின் உரிமையாளராக தொடர்வதாகவும் அஜித் அறிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகின் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட உச்சநட்சத்திரமாக உலா வருபவர் நடிகர் அஜித். அடிப்படையில் கார் மற்றும் மோட்டார் சைக்கிள் பந்தய வீரராக அஜித் உள்ளார்.
ரேஸில் இருந்து விலகிய அஜித்:
அஜித் துபாயில் நடக்கும் 24 எச் கார் பந்தய ரேஸில் பங்கேற்க பயிற்சி எடுத்து வந்தார். கார் பந்தய வீரராக மட்டுமின்றி அணி உரிமையாளராகவும் அஜித் இந்த பந்தயத்தில் களமிறங்கியுள்ளார். இதற்காக அவர் துபாயில் கடந்த சில நாட்களாகவே தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், அஜித் துபாயில் பந்தய களத்தில் பயிற்சியில் ஈடுபட்டபோது நூலிழையில் உயிர் தப்பினார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
விபத்திற்கு பிறகும் அஜித் தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். இந்த சூழலில், அஜித் அணியின் உரிமையாளராக மட்டுமே தொடர்வார் என்றும், அவர் பந்தய வீரராக களமிறங்க மாட்டார் என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. விபத்திற்கு பிறகு அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காரணம் என்ன?
அஜித்தின் இந்த அறிவிப்பு அவரது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தினாலும், அஜித் ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். ஏனென்றால் அஜித் சிறு வயது முதலே கார் மற்றும் பைக் பந்தயங்களில் பலமுறை பங்கேற்றுள்ளார். அந்த பந்தயங்களின்போது அவர் பல முறை விபத்திலும் சிக்கியுள்ளார். இதனால், அவரது உடல்நிலை மிக மோசமாக பாதிக்கப்பட்டும் உள்ளது.
இந்த சூழலில், தற்போது மீண்டும் அஜித் கார் பந்தயத்தில் ஈடுபட்டிருப்பது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும், விபத்தில் சிக்கிய அஜித்தின் வீடியோ ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. 53 வயதான அஜித்தின் உடல்நிலையை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
விபத்திற்கு பிறகு ரசிகர்கள் வேதனை:
அஜித் பங்கேற்காவிட்டாலும் அவரது அணி கார் ரேஸில் தொடர்ந்து பங்கேற்க உள்ளது. அஜித் அணியின் கார் ஓட்டும் வீரர்கள் பிரபல வீரர்கள் என்பதாலும், அவர்கள் அனைவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நடிகர் அஜித்குமாருக்கு நடிப்பைக் காட்டிலும் கார் மற்றும் மோட்டார் பந்தயங்களே முதன்மையான தேர்வாக இருந்து வந்தது. ஆனால், பின்னாளில் நடிப்பு முழு நேரமாகிவிட்டது. இருப்பினும் கிடைக்கும் நேரத்தில் அஜித் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வந்தார். ஆனால், அவரால் முழுமையாக பங்கேற்க இயலாத சூழல் கடந்த காலங்களில் ஏற்பட்டது. இதன் காரணமாகவே, அவர் இந்த முறை வீரராக மட்டுமின்றி உரிமையாளராகவும் பங்கேற்றார். விபத்திற்கு பிறகு ரசிகர்கள் பலரும் அஜித்தின் உடல்நிலையில் அக்கறை கொண்டு அஜித்தின் நலம் கருதி இதைத் தவிர்க்குமாறும் கோரிக்கை வைத்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

