Ajithkumar Car Race: அஜித்தின் கார் பந்தயத்தில் ஆட்டம் போட்ட ஆதிக் ரவிச்சந்திரன்! வீடியோவைப் பாருங்க
அஜித்குமார் கார் பந்தயத்தில் ஈடுபட்டுள்ள பந்தய மைதானத்தில் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் ஆலுமா டோலுமா பாடலுக்கு உற்சாகமாக நடனமாடியுள்ளார்.

தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமாக திகழ்பவர் நடிகர் அஜித். அடிப்படையில் கார் மற்றும் மோட்டார் சைக்கிள் பந்தய வீரரான அஜித் தற்போது துபாயில் நடக்கும் கார் பந்தயத்தில் தனது அணியை பங்கேற்க வைத்துள்ளார். அஜித் கார் பந்தயத்தில் ஈடுபடுவதைக் காண அவரது ரசிகர்கள் துபாயில் குவிந்துள்ள நிலையில், இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன், அஜித்தின் செய்தித் தொடர்பாளர் சுரேஷ் சந்திராவும் அங்கு சென்றுள்ளனர்.
ஆட்டம் போட்ட ஆதிக் ரவிச்சந்திரன்:
துபாயில் கார் பந்தயம் நடக்கும் இடத்தில் அஜித் நடித்த வேதாளம் படத்தில் இடம்பிடித்த ஆலுமா டோலுமா பாடல் ஒலிபரப்பப்பட்டது. அதைக்கேட்ட அஜித் ரசிகர்கள் ஆடிப்பாடி மகிழ்ந்தனர். அப்போது, அங்கே இருந்த இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனும், அஜித்தின் செய்தித் தொடர்பாளர் சுரேஷ் சந்திராவும் உற்சாகத்தில் நடனம் ஆடினர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Adhik & Suresh Chandra Dancing 🔥😂#AjithKumarRacing
— Sri Ajith™ (@SriAjithOff) January 11, 2025
pic.twitter.com/QjLCNiRPuq
அஜித்தின் தீவிர ரசிகரான ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்தை வைத்து குட் பேட் அக்லி படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்துள்ள நிலையில், இந்த படம் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டமாக வெளியாக உள்ளது.
தொடர்ந்து குவியும் ரசிகர்கள்:
அஜித் மீண்டும் கார் பந்தய களத்திற்கு திரும்பியிருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இருப்பினும், கார் பந்தய பயிற்சியின்போது அஜித் விபத்தில் சிக்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. இருப்பினும் அவர் தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டாலும் அவர் வீரராக களமிறங்கமாட்டார் என்று இன்று அறிவிப்பு வந்தது. ஆனாலும், அவர் கார் பந்தயத்தில் இன்று ஓட்டினார். அஜித்திற்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.
உச்சநட்சத்திரமாக திகழும் அஜித் பொதுவெளியில் அடிக்கடி வராத காரணத்தால் அவர் எங்கேனும் பொதுவெளியில் தென்பட்டால் ரசிகர்கள் கூட்டம் கூடிவிடும். துபாயில் நடக்கும் கார் பந்தயத்தில் நடிகர் அஜித் பங்கேற்று இருப்பதால் அவரைப் பார்க்க அங்கு வசிக்கும் தமிழர்கள் தொடர்ந்து குவிந்து வருகின்றனர். அவர் ரேஸில் பங்கேற்கமாட்டார் என்ற தகவல் வெளியானாலும் அவரைப் பார்க்கவும், அவருடன் புகைப்படம் எடுக்கவும் ரசிகர்கள் தொடர்ந்து குவிந்து வருகின்றனர்.





















