கரூர் காவிரி ஆற்றில் மூழ்கிய நபரை மீட்டு சிகிச்சை அளிக்கும் ஒத்திகை பயிற்சி
காவிரி ஆற்றில் மூழ்கிய நபரை மீட்பது, மருத்துவ சிகிச்சை அளிப்பது குறித்து செயல்முறையுடன் ஒத்திகை பயிற்சி.
குளித்தலை காவிரி ஆற்றில் தேசிய பேரிடர் மீட்பு படையினரின் ஆற்றில் மூழ்கிய நபரை மீட்டு சிகிச்சை அளிக்கும் ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.
கரூர் மாவட்டம் குளித்தலை கடம்பன்துறை காவிரி ஆற்றில் சென்னை அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படை துணை கமாண்டர் ஸ்ரீதர் தலைமையிலான 32 வீரர்கள் வந்துள்ளனர். காவிரி ஆற்றில் மூழ்கிய நபரை எப்படி மீட்பது, மருத்துவ முதல் சிகிச்சை அளிப்பது குறித்து செயல்முறையுடன் ஒத்திகை பயிற்சி இன்று நடைபெற்றது. இதில் தீயணைப்பு வீரர்களும் கலந்துகொண்டு பள்ளி மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் காவிரியில் மூழ்கிய நபரை எவ்வாறு காப்பாற்றுவது, படகு சவாரியில் பாதுகாப்பு உறை கட்டாயம் அணிய வேண்டும் உள்ளிட்டவற்றை எடுத்துரைத்தனர்.
மேலும் விசை படகு ஒன்று ஆற்றில் கவிழ்ந்த்தை பேரிடர் மீட்பு படை குழுவினர் மோட்டார் படகு மூலம் ஆற்றில் தத்தளித்த நபர்களை மீட்டு அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கும் விளக்க ஒத்திகை பயிற்சி மேற்கொண்டனர். இந்நிகழ்வில் தீயணைப்புதுறை மாவட்ட அலுவலர் வடிவேல், மாவட்ட உதவி அலுவலர் கோமதி, முசிறி தீயணைப்பு நிலைய அலுவலர் கர்ணன், குளித்தலை காவல் ஆய்வாளர் உதயக்குமார் மற்றும் பொது சுகாதார துறையினர் மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டனர்.