100 நாள் வேலைத் திட்டத்தை குறைக்க ஊராட்சிகள் தரம் உயர்வா? சட்டசபையில் அமைச்சர் பரபரப்பு பதில்
தமிழ்நாட்டில் 100 நாள் வேலைத் திட்டத்திற்காக உள்ளாட்சிகள் குறைக்கப்பட்டு நகராட்சியில் சேர்க்கப்படுகிறதா? என்ற கேள்விக்கு சட்டசபையில் அமைச்சர் திண்டுக்கல் பெரியசாமி விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தலின் பதவிக்காலம் முடிந்த பிறகும் இதுவரை தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாதது ஏன்? என்று ஊரக உள்ளாட்சித் துறை அமைச்சர் திண்டுக்கல் ஐ. பெரியசாமி விளக்கம் அளித்தார்.
சட்டசபைக் கூட்டத்தொடர்:
அதில், சட்டசபையில் இன்று நடந்த கூட்டத்தொடரில் அவர் கூறியிருப்பதாவது, "உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு இந்த அரசு எப்போதும் தயாராக இருக்கிறது. உள்ளாட்சித் தேர்தல் நடத்தாமல் தனி அலுவலர்களின் பதவிக்காலம் நீட்டிப்பதாக சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் சொன்னார். 4 மாநகராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளது. அதில் 46 ஊராட்சிகள் உள்ளது. உதாரணத்திற்கு தூத்துக்குடியில் மாப்பிள்ளையூரணி என்று ஊராட்சி உள்ளது. மாப்பிள்ளையூரணி தூத்துக்குடியில் உள்ளது. அதில் மக்கள்தொகை 40 ஆயிரம்.
ஊராட்சிகள் குறைக்கப்படுமா?
திருவாரூர் நகராட்சியை எடுத்துக்கொண்டால் ஊருக்கு உள்ளேயே ஒரு ஊராட்சி உள்ளது. ஊராட்சிகள் உள்ள பகுதிகள் நகரத்தின் உள்ளேயே உள்ளது. 12 ஆயிரத்து 525 ஊராட்சிகள் உள்ளது. 100 நாள் வேலைக்காக ஊராட்சிகளை குறைத்து நகராட்சியில் சேர்க்கப்போகிறோம் என்ற அன்பழகனின் கருத்து தவறானது.
ஊராட்சிகள் பேரூராட்சிகளாக உயர்த்தப்படும்போது, பேரூராட்சிகள் நகராட்சிகளாக உயர்த்தப்படும்போது 395 ஊராட்சிகள் வருகிறது. பகுதியாக சேர்க்கப்படுவது 75 ஊராட்சிகள்தான் உள்ளது. 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை உள்ளாட்சித் தேர்தல் நடத்த வேண்டும் என்று சட்டம் இயற்றப்பட்டது. ஆனால், 94ல் நீங்கள் தேர்தல் நடத்தவில்லை. 96ல் கருணாநிதிதான் அந்த தேர்தலை நடத்திக்காட்டினார். 2011க்கு பிறகு நீங்கள் 11 முறை தனி அலுவலர்கள் காலத்தை நீட்டித்தது அ.தி.மு.க. ஆட்சி.
வார்டு மறுசீரமைப்பு:
நல்ல காரணங்களுக்காக மக்கள்தொகை அடிப்படையை காரணமாக வைத்து அவசியமான நகராட்சி, அவசியமான மாநகராட்சி. சென்னை, தாம்பரம் அருகில் உள்ள ஊராட்சிகளில் மக்கள்தொகை உயர்கிறது. மக்கள்தொகை விரிவடையும்போது அங்கே மறுசீரமைப்பு கண்டிப்பாக வேண்டும். அப்படி மறுசீரமைக்கப்படும்போது வார்டு வரையறை உறுதிப்படுத்த வேண்டும். இதை உயர்நீதிமன்றம் சொல்லியுள்ளது. தேர்தல் எப்போது வந்தாலும் அதைச் சந்திக்கக்கூடியவர் எங்கள் முதலமைச்சர்."
இவ்வாறு அவர் பேசினார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

