Actor Sivakumar: காலில் விழுந்த மாற்றுத்திறனாளி... கன்னத்தில் முத்தமிட்ட நடிகர் சிவக்குமார்
சிவகுமாருக்கு சாவே கிடையாது. அவர் பல்லாண்டு வாழ வேண்டும். தெய்வம் அவருக்கு மேலும் பல வருடங்கள் வாழ ஆயுள் தர வேண்டும் சிவக்குமாரின் அம்மா புண்ணியவதி என்றும் சிவகுமார் கடவுள்தான் என மாற்றுத்திறனாளி புகழாரம்.

சேலம் மூன்று ரோடு அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற தனியார் பொழுதுபோக்கு மற்றும் கண்காட்சி நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக நடிகர் சிவகுமார் கலந்து கொண்டார். இதில் பல்வேறு சமூக ஆர்வலர்கள் மற்றும் சாதனையாளர்களுக்கு விருதுகள் மற்றும் நினைவு பரிசு வழங்கப்பட்டது. அப்போது சேலம் டால்மியா போர்டு பகுதியைச் சேர்ந்த பெருமாள் என்ற மாற்றுத்திறனாளிக்கு நடிகர் சிவகுமார் சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கினார். அப்போது மாற்றுத்திறனாளி சிவக்குமாரின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றார். தொடர்ந்து மாற்றுத்திறனாளிக்கு டைரியில் ஆட்டோகிராப் போட்டு வழங்கினார்.
இதையடுத்து மேடையில் பேசிய மாற்றுத்திறனாளி, சிவகுமாருக்கு சாவே கிடையாது. அவர் பல்லாண்டு வாழ வேண்டும். தெய்வம் அவருக்கு மேலும் பல வருடங்கள் வாழ ஆயுள் தர வேண்டும் சிவக்குமாரின் அம்மா புண்ணியவதி என்றும் சிவகுமார் கடவுள்தான். கிருஷ்ணர் போன்ற பல கடவுள் வேடங்களை போட்டுள்ளார் என குறிப்பிட்டு புகழ்ந்து பேசினார். இதையடுத்து சிவக்குமார் மாற்றுத்திறனாளிக்கு கன்னத்தில் முத்தமிட்டு வாழ்த்து கூறினார்.
பின்னர் நடிகர் சிவகுமார் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியது, "கஷ்டப்பட்டால் தான் பலன் கிடைக்கும். இதற்கு நிறைய உதாரணம் கூறலாம். 1946 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் முதன்முறையாக ராஜகுமாருடன் நடித்தார். இந்த படத்திற்கு கலைஞர் வசனம் எழுதியிருந்தார். இதுபோல எம்ஜிஆர் நடித்திருந்தால் மந்திரி குமாரி படத்திற்கும் கலைஞர் வசனம் எழுதி இருந்தார். வசனம் எழுதி சரித்திரம் படைத்தவர் கலைஞர் கருணாநிதி. இதுபோல நடிகர் எம்ஜிஆர் சாதனை படைத்தவர் உலக அளவில் நாட்டை ஆண்ட ஒரே நடிகர் எம்ஜிஆர் மட்டும்தான். ஒரு முறை எம்ஜிஆர் நடிக்க வந்தார். முதல் நாள் நடிக்க அழைக்கவில்லை. இரண்டாம் நாளும் அழைக்கவில்லை. இதுபோல 17 நாட்கள் மேக்கப் போட்டு காத்திருந்தார். ஆனால் அவரை நடிக்க அழைக்கவில்லை. அடுத்த நாள் போலீஸ் உடையில் இருந்த எம்ஜிஆரை நடிக்க கூப்பிட்டனர். அப்போது அந்த காட்சியில் சைக்கிள் தள்ளி கொண்டு
எம்ஜிஆர் போவது போல இருக்க வேண்டும். சைக்கிள் எங்கே என்று எம்ஜிஆரிடம் கேட்டனர். என்னிடம் சைக்கிள் இல்லை என்று கூறிய எம்ஜிஆர் தனக்கு வாய்ப்பு கிடைக்காமல் போய்விடும் என கருதி ரோட்டிற்கு சென்று அங்கு நிறுத்தி இருந்த சைக்கிளை எடுத்துக்கொண்டு வந்து நடித்தார். அப்போது சைக்கிளுக்கு உரியவர் அங்கு வந்து சைக்கிள் திருடன் எனக் கூறிவிட்டார். இதனால் பயந்த எம்ஜிஆர் சைக்கிள்காரரிடம் சென்று 17 நாள் காத்துக் கிடந்து விட்டேன் .
இப்போதுதான் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. சைக்கிள் தாருங்கள் என கேட்டு மீண்டும் நடித்தார். அந்த சைக்கிள் கொடுத்தவர் வேறு யாரும் இல்லை பராசக்தி படத்தை எடுத்த கிருஷ்ணன் தான். அந்த அளவிற்கு எம்ஜிஆர் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவர். 37 வருடம் கஷ்டப்பட்ட பின்னரே எம்ஜிஆர் நல்ல நிலைக்கு வந்தார். அவரது குடும்ப வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்பட்டு இருந்தார். அவருக்கு 19 வயதில் திருமணம் செய்து வைக்கப்பட்டது.
மலைக்கள்ளன், அலிபாபாவும் 40 திருடர்கள், நாடோடி மன்னன் போன்ற படங்கள் மூலம் வெற்றி பெற்றார் எம்ஜிஆர். பின்னர் தான் நாட்டை பிடித்தார். துன்பப்பட்டு முன்னுக்கு வந்தவர் எம்ஜிஆர் என்றார். அதுபோல சிவாஜியும் கஷ்டப்பட்டு இருக்கிறார். கலைஞர் கருணாநிதியும் கஷ்டப்பட்டு இருக்கிறார். மிகவும் முடியாத நிலையில் கலைஞர் இருந்தபோது அவரை சந்திக்க சென்றேன். அப்போது கலைஞரை சேரில் அமர வைத்திருந்தனர். அவரிடம் 1954 மனோகரா படத்தில் கலைஞர் எழுதி இருந்த வசனத்தை கூறினேன். அப்போது கலைஞர் கண்களில் இருந்து கண்ணீர் வந்தது. பின்னர் அவரிடம் ஆசி பெற்று திரும்பி வந்தேன்" என்று சிறப்புரையாற்றினார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

