தஞ்சையில் மந்திரவாதி சொன்னதால் 6 மாத பெண் குழந்தையை நரபலி கொடுத்த பாட்டி
’’நள்ளிரவில் தூக்கிச்சென்று தண்ணீர் உள்ள மீன் தொட்டியில் அமுக்கி பலி கொடுத்துள்ளார். பின்னர் மறுநாள் காலை குழந்தை தொட்டியில் இறந்து கிடப்பதாக அனைவரையும் நம்ப வைத்துள்ளார்’’
தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினத்தை சேர்ந்தவர் நசுருதீன் (32), ஷாலிஹா (24), இவர்களுக்கு, 5 வயதில் ராஜூ முகமது என்ற ஆண் குழந்தை உள்ளது. இவரது இரண்டாவது குழந்தையான 6 மாத பெண் குழந்தை ஹாஜரா. ஹாஜரா அவரது வீட்டின் பின்புறம் உள்ள மீன் வைக்கும் நீர் நிறைந்த பிளாஸ்டிக் தொட்டியில், 16 ஆம் தேதி சந்தேகத்திற்கிடமான வகையில், இறந்து கிடந்துள்ளார். பின்னர், இது பற்றி எதுவும் விசாரிக்காமல், இறந்த குழந்தையை மல்லிப்பட்டினம் ஜமாத்துக்கு உட்பட்ட முஸ்லிம் மைய வாடியில் அடக்கம் செய்துள்ளனர்.
குழந்தை இறந்தால், ஷாலிஹா அழுது புலம்பியுள்ளார். இது குறித்து அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் தங்கமுத்துவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் சேதுபாவாசத்திரம் போலீஸில் புகார் அளித்தார். இதை அடுத்து நேற்று பட்டுக்கோட்டை தாசில்தார் கணேஸ்வரன், டிஎஸ்பி செங்கமலக்கண்ணன், குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுக்காப்பு டிஎஸ்பி ராஜ்குமார் ஆகியோர் முன்னிலையில், குழந்தையின் உடல் தோண்டி பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து போலீஸார் குழந்தையின் பெற்றோர்கள், உறவினர்களிடம் நடத்திய விசாரணையில், நசுருதீன் சித்தி ஷர்மிளா பேகம்(48), இவரது கணவர் அஸாருதீன்(50), வெளிநாட்டில் வேலை பார்த்து விட்டு, கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஊருக்கு திரும்பிய நிலையில், அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்பட்டு வந்துள்ளது.
தடையை மீறி போராட்டம் நடத்தியதாக முன்னாள் அமைச்சர் காமராஜ் உட்பட 600 பேர் மீது வழக்கு
இதையடுத்து, புதுக்கோட்டை மாவட்டம் கிருஷ்ணாஜிபட்டினத்தில், கேரளாவை சேர்ந்த குறி சொல்லும் மந்திரவாதியான முகமது சலீம் (48), என்பவரிடம் ஷர்மிளா பேகம், கடந்த சில நாட்களுக்கு முன்பு குறி பார்த்துள்ளார். அப்போது உனது கனவர் உடல்நலம் குணமடைய உயிர்ப்பலி கொடுக்க வேண்டும் என முகமதுசலீம் குறியுள்ளார். இதையடுத்து ஷர்மிளா பேகம், வீட்டை சுற்றி 20க்கும் மேற்பட்ட கோழி, ஆடுகளை பலி கொடுத்துள்ளார். ஆனாலும் தனது கணவர் உடல் நலம் சரியாக நிலையில், தனது அக்கா மகனான நசுருதீன் குழந்தை ஹாஜராவை, அவர்களுக்கு தெரியாமல், கடந்த 15 ஆம் தேதி நள்ளிரவில் தூக்கிச்சென்று தண்ணீர் உள்ள மீன் தொட்டியில் அமுக்கி பலி கொடுத்துள்ளார். பின்னர் மறுநாள் காலை குழந்தை தொட்டியில் இறந்து கிடப்பதாக அனைவரையும் நம்ப வைத்துள்ளதாக தெரியவந்தது. இது குறித்து சேதுபாவாசத்திரம் போலீஸார், ஷர்மிளா பேகம், அவரது கனவர் அஸாருதீன், குறி சொல்லும் முகமது சலீம் ஆகியோர் மீது கொலை வழக்குப்பதிவு கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
தஞ்சாவூரில் உள்ள மாநகராட்சி பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திடீர் ஆய்வு