சுவாமி வைத்தீஸ்வரா... 2026 -ல் அதிமுக ஆட்சி அமைய வேண்டும் - மனமுருகி வேண்டிய இபிஎஸ்
மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோயிலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுவாமி வழிபாடு மேற்கொண்டார்.

மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் அதிமுக பொதுச்செயலாளர் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த 7 -ம் தேதி கோயம்புத்தூரில் துவங்கிய சுற்றுப்பயணம் நேற்று மாலை மயிலாடுதுறை மாவட்டத்தில் மேற்கொண்டு பொதுமக்களை சந்தித்தார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் எடப்பாடி பழனிசாமி
முன்னதாக மயிலாடுதுறை மாவட்ட எல்லையான கொள்ளிடத்தில் அவருக்கு அதிமுக, பாஜக, தமாக மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து கொள்ளிடம் கடைவீதி, சீர்காழி புதிய பேருந்து நிலையம், ஆக்கூர் முக்கூட்டு, செம்பனார் கோயில், மற்றும் மயிலாடுதுறை பகுதிகளில் அதிமுக ஆட்சியில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் செய்யப்பட்ட திட்டங்களை பட்டியலிட்டும், ஆளும் திமுக அரசை விமர்சித்தும் பேசினார்.

வைத்தீஸ்வரன் கோயிலில் எடப்பாடி பழனிசாமி வழிபாடு
அதனைத் தொடர்ந்து இரவு மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோயிலில் தனியார் தங்கும் விடுதியில் தங்கி ஓய்வெடுத்தார். பின்னர் இன்று காலை அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான வைத்தீஸ்வரன் கோயிலில் ஸ்ரீ தையல்நாயகி உடலுறை வைத்தியநாத சுவாமி திருக்கோயில் வழிபாடு மேற்கொண்டார்.

சிறப்பு வரவேற்பு அளித்த கோயில் நிர்வாகம்
கோயிலில் எடப்பாடி பழனிசாமி 2026 தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டி சுவாமி அம்பாள் அங்காரகன் செல்லமுத்துக்குமார் சுவாமி சன்னதிகளில் சிறப்பு பூஜைகள் செய்து மனம் உருகி வழிபாடு மேற்கொண்டார். முன்னதாக கோயில் நிர்வாகத்தின் சார்பில் ஸ்ரீமத் திருநாவுக்கரசு தம்பிரான் சுவாமிகள் முன்னிலையில் பூரண கும்ப மரியாதை கொடுத்து வரவேற்பு அளித்தனர். தரிசனம் முடித்த எடப்பாடி பழனிசாமி அவரது மகன் மிதுன் மற்றும் அவரது உறவினர்களுக்கு கோயில் நிர்வாகத்தின் சார்பில் பரிவட்டம் கட்டி பிரசாதம் வழங்கினர். இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பவுன்ராஜ், சக்தி, ராதாகிருஷ்ணன் மற்றும் மாநில அம்மா பேரவை மாநில துணை செயலாளர் மார்கோனி உள்ளிட்ட பல நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Before You Go
Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்























