தேசிய விருது வென்ற மதுர் பந்தார்க்கர் இயக்கும் புதிய படத்தில் ரெஜினா கசான்ட்ரா
தேசிய விருது பெற்ற இயக்குநர் மதுர் பந்தார்க்கர் இயக்கும் தி வைவ்ஸ் படத்தில் நடிகை ரெஜினா கஸாண்ட்ரா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்

ரெஜினா கஸாண்ட்ரா நடிக்கும் 'தி வைவ்ஸ்'
Rocket Boys, Jaat, Farzi, Kesari Chapter 2 போன்ற பிரபல ஹிந்தி வெப் சீரிஸ் மற்றும் திரைப்படங்களில் தனது துடிப்பான நடிப்பால் கவனம் பெற்ற ரெஜினா கசான்ட்ரா, இந்திய சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான மதுர் பந்தார்க்கருடன் புதிய படத்தில் நடிக்க தயாராக இருக்கிறார். இந்த புதிய திரைப்படம் "தி வைவ்ஸ்" எனும் தலைப்பில் உருவாகிறது.
உணர்வுமிக்க, சிக்கலான கதாபாத்திரங்களை நம்பிக்கையுடன் சித்தரித்து வரும் ரெஜினா, இந்த படத்திலும் ஒரு முக்கியமான கதாநாயகி வேடத்தில் நடிக்கவுள்ளார். இது அவருடைய திறமைகளை மேலும் வெளிக்கொண்டு வரும் ஒரு வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.
தேசிய விருது பெற்ற இயக்குநர் மதுர் பந்தார்க்கர், Fashion, Page 3, Heroine போன்ற படங்களில் பெண்களின் உணர்வுகளையும் வாழ்க்கை பாதைகளையும் மையமாகக் கொண்டு கதைகளை இயக்கி உள்ளார். தற்போது, தி வைவ்ஸ் மூலமாக மீண்டும் அதே பாதையைத் தொடர்கிறார். இந்தப் படம், பெண்களின் வலிமை, உணர்வுகளின் அடுக்கு அடுக்கான வெளிப்பாடுகள் மற்றும் தைரியமான பார்வைகளைக் கூறும் திரைப்படமாக இருக்குமென சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ரெஜினாவின் சகஜமான திரைநடிப்பு, மதுர் பந்தார்க்கரின் வலுவான கதை சொல்லும் பாணி ஆகியவை இணைந்து, தி வைவ்ஸ் என்ற திரைப்படத்தை எதிர்பார்க்கத்தக்க ஒரு முக்கிய படமாக மாற்றி உள்ளன.
Some stories aren’t meant to be easy — they’re meant to be told. The Wives is one of them. Honoured to be part of this under Madhur sir’s unfiltered, powerful lens.#TheWives @pranavjain27 @imbhandarkar @sonalikulkarni @Roymouni pic.twitter.com/H6FflM1ZsN
— RegenaCassandrra (@ReginaCassandra) July 16, 2025





















