மேலும் அறிய

பிரபல இயக்குநர் வேலு பிரபாகரன் காலமானார்.. சினிமாவில் பகுத்தறிவு.. வாழ்நாள் முழுக்க சர்ச்சை

நாளைய மனிதன், காதல் படங்களை இயக்கிய வேலு பிரபாகரன் இன்று காலமானார்.

நாளைய மனிதன், கடவுள் போன்ற படங்களை இயக்கிய வேலு பிரபகாரன் (68). உடல்நலக்குறைவால் காலமானார். தமிழ் சினிமாவில் பெரியாரிய கருத்துக்களை மக்களிடம் கொண்டு சேர்த்ததில் மிகப்பெரிய பங்கு இவருக்கு உண்டு. இவரது படங்கள் காமம், சாதி, மதம் போன்ற பிரச்னைகளை வெளிச்சம் போட்டுக் காட்டியதால் பரபரப்பை கிளப்பியது மட்டும் இல்லாமல், அவருக்கு தனி அங்கீகாரத்தை பெற்றுக் கொடுத்திருக்கிறது. 

காதல் கதை படத்தால் வந்த பிரச்னை

1989ஆம் ஆண்டில் வெளியான நாளைய மனிதன் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனவர் வேலு பிரபாகரன். இதைத்தொடர்ந்து சத்யராஜ் நடித்த பிக்பாக்கெட், பிரபு நடித்த உத்தமராசா, மோகன் நடித்த உருவம் போன்ற படங்களுக்கும் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்துள்ளார். பின்னர், அசுரன், கடவுள், புதிய ஆட்சி, புரட்சிக்காரன் போன்ற சமூகம் சார்ந்த கருத்துகள் நிறைந்த படத்தையும் இயக்கி நற்பெயரை எடுத்துள்ளார். நீண்ட இடைவெளிக்கு பிறகு 2009ல் இவரது இயக்கத்தில் வெளியான காதல் கதை திரைப்படம் மிகப்பெரிய சர்ச்சையை சந்தித்தது. காதல் கதை என்ற பெயரில் மிக மோசமான படம் என்றும் விமர்சிக்கப்பட்டது. ஆனால், இப்படம் வணிக ரீதியாக அவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.

காதல் திருமணத்தால் சர்ச்சை

இயக்குநர் வேலு பிரபாகரன் முதலில் ஜெயாதேவி என்பவரை திருமணம் செய்தார். அதன் பின்னர் 2017ல் 60 வயதில் தன்னை விட 25 வயது குறைவான நடிகை ஷிர்லே தாஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். காதல் கதை படத்தில் நடித்தபோது வேலு பிரபாகரனுக்கும் நடிகைக்கும் காதல் மலர்ந்தது. 60 வயதில் இரண்டாம் திருமணம் என சர்ச்சையானது. இதற்கு கடும் எதிர்ப்புகளும் கிளம்பின. ஆனால், அவர் காதலித்தோம் திருமணம் செய்தோம் என ஒரே வார்த்தையில் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். திருமணத்திற்கு பிறகு வேலு பிரபாகரன் ஒரு சில படங்களில் நடிக்க தொடங்கினார். 

வேலு பிரபாகரன் மரணம்

68 வயதான வேலு பிரபாகரனுக்கு கடந்த மாதம் மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், சென்னை காெட்டிவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.  வெண்டிலேட்டர் மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது.  மேலும் மருத்துவர்கள் எவ்வளவோ முயற்சித்தும் அவரது உடல் சிகிச்சைக்கு ஒத்துழைக்க மறுப்பதாகவும், அவரது உடல்நிலை மோசமாகிக் கொண்டே போவதாகவும் தெரிவித்தனர். இந்நிலையில், இன்று காலை 5.30 மணிக்கு சிகிச்சை பலனின்றி வேலு பிரபாகரன் காலமானார். மேலும், வளசரவாக்கத்தில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. அவரது மறைவுக்கு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
Jailer 2 Booking : ஜெயிலர் 2 முன்பதிவுகள் தொடக்கம்!
Jailer 2 Booking : ஜெயிலர் 2 முன்பதிவுகள் தொடக்கம்!
“நான் எப்போ தப்பா நடந்தேன்?” – முத்துக்குமரன் கேள்வி.. வஹிதா வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு!
“நான் எப்போ தப்பா நடந்தேன்?” – முத்துக்குமரன் கேள்வி.. வஹிதா வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு!
ஜெய் பீம் பார்த்து இயக்குநரை திட்டிய அம்மா...மணிகண்டன் பகிர்ந்த சுவாரஸ்ய நிகழ்வு
ஜெய் பீம் பார்த்து இயக்குநரை திட்டிய அம்மா...மணிகண்டன் பகிர்ந்த சுவாரஸ்ய நிகழ்வு

வீடியோ

Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்
TVK MLA Saravanan : ”பணத்தை வாங்கிட்டு மிரட்டுறாங்க” தவெக MLA மீது பகீர் புகார் வாலிபரின் வைரல் வீடியோ!
Uttarakhand iPhone theft :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay:
CM Vijay: "தமிழக மக்களுக்கு 100 சதவீதம் விசுவாசமாக இருப்போம்.." வெற்றி மகிழ்ச்சியில் விஜய் திட்டவட்டம்
Sivakrishnamurthy IAS : ‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
MK Stalin:
MK Stalin: "துரோகத்திற்கான இடைக்கால வெற்றி.. விஜய்யின் வீழ்ச்சி தொடக்கம்.." திமுக தோல்விக்கு மு.க.ஸ்டாலின் பரபரப்பு விளக்கம்
TVK:
TVK: "தேர்தல் தோல்வியை சமாளித்து திமுக எப்படி உருட்டும்?" நக்கல் செய்த தவெக!
ADMK: இரண்டாவது இடம்கூட இல்ல.. 3வது இடம்..! தொடர் சறுக்கலில் அதிமுக! என்னதான் செய்வார் இபிஎஸ்?
ADMK: இரண்டாவது இடம்கூட இல்ல.. 3வது இடம்..! தொடர் சறுக்கலில் அதிமுக! என்னதான் செய்வார் இபிஎஸ்?
Rajesh Lakhoni IAS : ’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி – டிக் அடித்த அமைச்சர்’ யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி' யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
TN Election Results 2026 LIVE: தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
TN Bypoll: மக்கள் ஏமாளிகள்? அம்பலப்பட்ட உண்மை, உற்சாகத்தில் விஜயபாஸ்கர்கள் - திருந்த வேண்டியது யார்?
மக்கள் ஏமாளிகள்? அம்பலப்பட்ட உண்மை, உற்சாகத்தில் விஜயபாஸ்கர்கள் - திருந்த வேண்டியது யார்?
Embed widget