IPL Players Release: நோ கருணை.. வீரர்களை வெட்டிவிட தயாரான ஓனர்கள் - ஜொலிக்காத ஐபிஎஸ் ஸ்டார்களுக்கு கெட்-அவுட்
IPL 2026 Players Release List: அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன்னதாக நடைபெற உள்ள மினி ஏலத்திற்காக, ஒவ்வொரு அணியில் இருந்து கழற்றிவிடப்பட உள்ள வீரர்களின் விவரங்களை இங்கே அறியலாம்.

IPL 2026 Players Release List: ஐபிஎல் தொடரின் 10 அணிகளும் மினி ஏலத்திற்கு முன்பாக, கழற்றிவிட வாய்ப்புள்ள வீரர்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
ஐபிஎல் 2026 மினி ஏலம்:
ஒவ்வொரு ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிக்கு முன்னதாகவும், வீரர்களுக்கான மினி ஏலம் நடைபெறுவது வழக்கம். இதன் மூலம் பிரபலமான வீரர்கள் ஒரு அணியில் இருந்து மற்றொரு அணிக்கு மாறுவார்கள், இளம் வீரர்களுக்கு திறமையை நிரூபிக்க பெரிய களத்தில் வாய்ப்பு கிடைக்கும் மற்றும் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாத நபர்கள் ஒட்டுமொத்தமாக வெளியேற்றப்படுவது வழக்கமாகும். இது ஒட்டுமொத்த போட்டியின் தரத்தை உயர்த்துவதோடு, சுவாரஸ்யத்தையும் கூட்ட உதவுகிறது.
10 அணிகளின் இலக்கு என்ன?
அதன்படி, நடப்பாண்டிற்கான மினி ஏலம் வரும் டிசம்பர் மாதத்தில் நடைபெறலாம். ஆனால், அதற்கான அதிகாரப்பூர்வ தேதி ஏதும் தற்போது வரை அறிவிக்கப்படவில்லை. ஆனால், ஏற்கனவே 10 அணிகளும் தாங்கள் தக்கவைக்க உள்ள மற்றும் விடுவிக்க உள்ள வீரர்களின் பட்டியலை தயார்படுத்த தொடங்கிவிட்டன. மின் ஏலம் மட்டுமே என்பதால், பெரும்பாலான வீரர்களை அப்படியே தக்கவைத்துக் கொண்டு, பலவீனமான பகுதியை வலுப்படுத்துவதற்கு ஏற்ற வீரர்களை மட்டுமெ ஒவ்வொரு அணியும் தேர்வு செய்ய உள்ளது. அதன்படி, ஒவ்வொரு அணியும் விடுவிக்க உள்ள உத்தேச வீரர்களின் விவரங்களை இங்கே அறியலாம்.
லக்னோ விடுவிக்க வாய்ப்புள்ள வீரர்கள்:
- ஆர்யன் ஜுயல்
- மேத்யூ ப்ரீட்ஜ்க் (வெளிநாட்டு வீரர்)
- சமர் ஜோசப் (வெளிநாட்டு வீரர்)
- யுவராஜ் சவுத்ரி
- எம். சித்தார்த்
- மயங்க் யாதவ்
- மொஹ்ஷின் கான்
அதிகப்படியான வேகப்பந்து வீச்சாளர்கள் இருந்தாலும், அணி எதிர்பார்த்த முடியான முடிவுகளை எட்டமுடியவில்லை. குறிப்பாக பெரும் விலைக்கு வாங்கப்பட்ட மயங்க் யாதவ் மற்றும் மொஹ்ஷின் கான் ஆகியோரும் பெரும்பாலன போட்டிகளில் காயம் காரணமாக விளையாடவே இல்லை.
ராஜஸ்தான் விடுவிக்க வாய்ப்புள்ள வீரர்கள்:
- அஷோக் சர்மா
- க்ருணால் ரதோர்
- குமார் கார்திகேயா
- ஃபசல்ஹக் ஃபரூகி (வெளிநாட்டு வீரர்)
- க்வென மபாகா (வெளிநாட்டு வீரர்)
- டி ப்ரெடொரியஸ் (வெளிநாட்டு வீரர்)
மோசமான 2025 தொடரை எதிர்கொண்ட ராஜஸ்தான் அணி, அணியை வலுப்படுத்த தேவையான அனைத்து ஓட்டைகளையும் அடைக்க தேவையான நடவடிக்கைகளில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளது.
குஜராத் விடுவிக்க வாய்ப்புள்ள வீரர்கள்
- குமார் குஷக்ரா
- தசுன் ஷனகா (வெளிநாட்டு வீரர்)
- க்ளென் பிலிப்ஸ் (வெளிநாட்டு வீரர்)
- ஜெயந்த் யாதவ்
- கரிம் ஜனத் (வெளிநாட்டு வீரர்)
- கர்னூர் ப்ரார்
- இஷாந்த் சர்மா
- ககிசோ ரபாடா (வெளிநாட்டு வீரர்)
நடப்பு தொடரில் சிறப்பாக செயல்பட்டாலும், வெளிநாட்டு வீரர்களின் பங்களிப்பு என்பது பெரிய பலன் அளிக்கவில்லை. அதனை வலுப்படுத்தும் நோக்கில் மினி ஏலத்தில் செயல்பட குஜராத் அணி திட்டமிட்டுள்ளது.
கொல்கத்தா விடுவிக்க வாய்ப்புள்ள வீரர்கள்
- மணிஷ் பாண்டே
- ரோவ்மன் போவெல் (வெளிநாட்டு வீரர்)
- வெங்கடேஷ் ஐயர்
- லவ்னிஷ் சிசோடியா
- சேதன் சகாரியா
- ஷிவம் சுக்லா
- ஸ்பென்ஷர் ஜான்சன் (வெளிநாட்டு வீரர்)
24 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டும் எந்த பங்களிப்பும் அளிக்காத வெங்கடேஷ் ஐயர் உள்ளிட்டோரை வீட்டிற்கு அனுப்ப கொல்கத்த தீர்க்கமாக உள்ளதாம்.
பஞ்சாப் விடுவிக்க வாய்ப்புள்ள வீரர்கள்:
- ஹர்னூர் பன்னு
- ‘விஷ்ணு வினோத்
- ஆரோன் ஹர்டி (வெளிநாட்டு வீரர்)
- க்ளென் மேக்ஸ்வெல் (வெளிநாட்டு வீரர்)
- மிட்செல் ஓவன் (வெளிநாட்டு வீரர்)
- சேவியர் பார்லெட் (வெளிநாட்டு வீரர்)
நடப்பாண்டு போட்டியில் இரண்டாவது இடம் பிடித்த பஞ்சாப் பெரிய மாற்றமின்றி, எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாத வீரர்களை கழற்றிவிட முடிவு செய்துள்ளது.
டெல்லி விடுக்க வாய்ப்புள்ள வீரர்கள்:
- கருண் நாயர்
- ஃபாப் டுப்ளெசிஸ்
- அஜய் மண்டல்
- தர்ஷன் நல்கண்டே
- மாதவ் திவாரி
- மன்வந்த் குமார்
- திரிபுரானா விஜய்
- துஷ்மந்த சமீரா
- மோஹித் சர்மா
- டி. நடராஜன்
ஆரம்பத்தில் அடுத்தடுத்து வெற்றிகளை குவித்தாலும், மோசமாக போட்டியை முடித்த டெல்லி அணி மினி ஏலத்திற்கு முன்பாக பெரும் மாற்றத்தை காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை விடுவிக்க வாய்ப்புள்ள வீரர்கள்:
- ராகுல் திரிபாதி
- டெவோன் கான்வே
தீபக் ஹூடா
- ராமகிருஷ்ணா கோஷ்
- ஆர். அஸ்வின்
- விஜய் சங்கர்
- குர்ஜப்னீத் சிங்
- ஸ்ரேயாஸ் கோபால்
- கம்லேஷ் நாகர்கோடி
- ஜேமி ஓவர்டன் (வெளிநாட்டு வீரர்)
பெரும் நம்பிக்கையுடன் வாங்கப்பட்ட நட்சத்திர வீரர்களே சொதப்பியதன் விளைவாகவே, சென்னை அணி நடப்பாண்டு சீசனின் மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தியது. இதனால் மின் ஏலத்தில் அணி தீவிரமாக செயல்படக்கூடும்.
மும்பை விடுவிக்க வாய்ப்புள்ள வீரர்கள்:
- ஷ்ரிஜித் க்ரிஷ்ணன்
- லிஜாத் வில்லியம்ஸ் (வெளிநாட்டு வீரர்)
- முஜீப் உர் ரஹ்மான் (வெளிநாட்டு வீரர்)
- ரீஸ் டோப்லே
- ரகு சர்மா
- சத்யநாராயண ராஜு
மும்பை அணியில் பெரிய மாற்றம் இன்றி பெரும்பாலும் நடப்பு தொடரில் ஒரு போட்டி கூட விளையாடாத நபர்களே வெளியேற்றப்பட உள்ளனர்.
ஐதராபாத் விடுவிக்க வாய்ப்புள்ள வீரர்கள்:
- சச்சின் பேபி
- ஆடம் ஜாம்பா (வெளிநாட்டு வீரர்)
- முகமது ஷமி
- ராகுல் சாஹர்
- வியான் மல்டர் (வெளிநாட்டு வீரர்)
வலுவான பிளேயிங் லெவன் இருந்து எதிர்பார்த்த வெற்றிகளை குவிக்க முடியாமல் தடுமாறிய சூழலிலும், பெரிய அளவில் வீரர்களை வெளியிட ஐதராபாத் அணி தீவிரம் காட்டவில்லை.
பெங்களூரு விடுவிக்க வாய்ப்புள்ள வீரர்கள்:
- லியம் லிவிங்ஸ்டோன்
- அபிநந்தன் சிங்
- மொஹித் ரதி
நடப்பு சாம்பியனான பெங்களூரு அணி அதே உத்வேகத்துடன் பெரும்பாலும் எந்தவித மாற்றமும் இன்றி, அப்படியே அடுத்த தொடரில் களமிறங்க திட்டமிட்டுள்ளது.



















