என்னது? ஆண்களுக்கும் இலவச பேருந்தா? – அமைச்சர் கொடுத்த அம்சமான பதில்!
ஆண்களுக்கும் இலவச பேருந்து விடப்படுமா என்ற கேள்விக்கு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பேரவையில் பதில் அளித்துள்ளார்.

ஆண்களுக்கும் இலவச பேருந்து விடப்படுமா என்ற கேள்விக்கு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பேரவையில் பதில் அளித்துள்ளார்.
சட்டப்பேரவையில் இன்று திருவாடனை எம்.எல்.ஏ ராம. கருமாணிக்கம் கேள்வி ஒன்றை எழுப்பினார். அதாவது முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் பெண்களுக்கு இலவச விடியல் பயணம் கொடுத்தது போல், ஆண்களுக்கு இலவச பேருந்து விடப்படுமா என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் சிவசங்கர் “ஆண்களுக்கு விடியல் பயணம் குறித்த உங்களது ஆர்வம் வரவேற்கத்தக்கது.
நீண்டகாலமாக ஒடுக்கப்பட்டநிலையில் இருப்பவர்கள் பெண்கள். ஒடுக்கப்பட்ட நிலையில் பெண்கள் இருப்பதால் அவர்களை முன்னேற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் முதலமைச்சர் அவர்களுக்கு விடியல் பயணத்தை கொண்டு வந்தார். அதேபோல் கலைஞர் உரிமைத் தொகை என பெரியார் வழியில் முதலமைச்சர் பயணம் செய்துகொண்டிருக்கிறார். ஆண்களுக்கும் இலவச பயணம் வழங்குவது குறித்து எதிர்காலத்தில் அரசின் நிதி நிலை சீராக இருந்தால் கருத்தில் எடுத்துக்கொள்ளப்படும்” எனத் தெரிவித்தார்.

