மேலும் அறிய

தமிழகத்தை உலுக்கிய காதலர்கள் கொலை வழக்கு: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு! தூக்கு தண்டனை பெற்றவர் விடுதலை, அதிர்ச்சியில் உறவினர்கள்!

தீர்ப்புக்கு எதிராக திவாகர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை 2019-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து திவாகரின் தூக்கு தண்டனையை உறுதி செய்தது.

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த காதலர்கள் எழில் முதல்வன், கஸ்தூரி. அப்பகுதியில் கல்லூரி ஒன்றில் படித்து வந்த இருவரும் 2011-ம் ஆண்டு மே 14-ந் தேதி சுருளி அருவிக்கு சென்றுள்ளனர். இந்த காதலர்களுடன் அவர்களது நண்பர்களான ராஜ்குமார்- பாக்கியலட்சுமி என்ற காதல் ஜோடியும் சென்றுள்ளது. இந்த 4 பேரும் சுருளி அருவியில் குளித்துவிட்டு அங்கிருந்து தனித் தனி ஜோடிகளாக அருகே உள்ள கைலாசநாதர் குகை கோவிலுக்கு செல்லும் வழியில் காட்டுப் பகுதியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.


தமிழகத்தை உலுக்கிய காதலர்கள் கொலை வழக்கு: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு! தூக்கு தண்டனை பெற்றவர் விடுதலை, அதிர்ச்சியில் உறவினர்கள்!

அப்போது அதே பகுதியைச் சேர்ந்த திவாகர் என்ற கட்டவெள்ளை என்ற நபர், ராஜ்குமார்- பாக்கியலட்சுமியிடம் அரிவாளை காட்டி மிரட்டி நகைகளை கழற்றச் சொல்லி இருக்கிறார். இதனால் பாக்கியலட்சுமி நகைகளை கழற்றித் தந்துள்ளார். ஆனால் அவை கவரிங் என்பதால் சற்று தொலைவில் இருந்த கஸ்தூரி – எழில் முதல்வன் ஜோடியை நோக்கி திவாகர் சென்றுள்ளார்.

அங்கு, கஸ்தூரியிடம் இருந்த நகைகளை அரிவாளை காட்டி மிரட்டிப் பறித்தார் திவாகர். இதன் பின்னர் கஸ்தூரியை வன்புணர்வு செய்ய முயற்சித்தார். இதனை காதலன் எழில்முதல்வன் தடுக்க போராடினார். அப்போது எழில் முதல்வனை திவாகர் என்ற கட்டவெள்ளை சரமாரியாக வெட்டிக் கொலை செய்தார். பின்னர் கஸ்தூரியை வன்புணர்வு செய்து கொலை செய்துள்ளார் திவாகர்” என்பதுதான் போலீஸ் விசாரணையின் முடிவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை.

இந்த சுருளி இரட்டைக் கொலை சம்பவம் தேனி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவ்வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்தனர். இவ்வழக்கில் திவாகர் என்ற கட்டவெள்ளைக்கு கீழ் நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து அதிரடித் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்புக்கு எதிராக திவாகர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை 2019-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து திவாகரின் தூக்கு தண்டனையை உறுதி செய்தது.

இதனைத் தொடர்ந்து தமக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்ய கோரி திவாகர் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம்நாத், சஞ்சய் கரோல், சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் ஜூலை 15-ந் தேதி 77 பக்க தீர்ப்பு வழங்கியது. அதில், கட்டவெள்ளை என்ற திவாகர் குற்றவாளியே இல்லை, அவருக்கான தூக்கு தண்டனை ரத்து செய்யப்படுகிறது. திவாகர் மீது வேறு வழக்கு இல்லை எனில் விடுதலை செய்யலாம் என பரபரப்பான தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பில், எழில்முதல்வன்- கஸ்தூரியை கட்டவெள்ளை என்ற திவாகர் மிரட்டியது, கொலை செய்தது உள்ளிட்டவைகளுக்கு நேரடி சாட்சி இல்லை, கஸ்தூரியின் நகை மட்டுமே காணாமல் போயிருக்கிறது. ஆனால் மோதிரம், செல்போன் உள்ளிட்டவை ஏன் திருடப்படவில்லை? நேரடி சாட்சியங்கள் இல்லாத நிலையில் வாக்குமூலம் கொடுத்த சாட்சிகளிடம் தீவிர விசாரணை நடத்தப்படவில்லை என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதேபோல, ராஜ்குமார்- பாக்கியலட்சுமி ஜோடிகள் ஏன் எழில் முதல்வன் – கஸ்தூரியை காப்பாற்ற முன்வரவில்லை? போலீசார் விசாரிக்கும் வரை இந்த சம்பவத்தை போலீசிடம் ஏன் இருவரும் தெரிவிக்கவில்லை? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

மேலும் கட்டவெள்ளை என்ற திவாகரன்தான் குற்றவாளி என்பதை உறுதி செய்வதற்கான மரபணு பரிசோதனை- விந்தனு பரிசோதனை தொடர்பான அறிக்கைகளில் ஏராளமான முரண்பாடுகள் இருப்பதையும் உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. இந்த சந்தேகங்களின் அடிப்படையில் திவாகர் என்ற கட்டவெள்ளை குற்றவாளி இல்லை என விடுதலை செய்து தீர்ப்பளித்திருக்கிறது உச்சநீதிமன்றம். 

தலைப்பு செய்திகள்

சுதந்திர தினத்திற்கு BSNL கொடுக்கும் சூப்பர் ஆஃபர் மிஸ்பண்ணாதீங்க... 1.ரூ ஒரு 4G சிம் கார்டு !
சுதந்திர தினத்திற்கு BSNL கொடுக்கும் சூப்பர் ஆஃபர் மிஸ்பண்ணாதீங்க... 1.ரூ ஒரு 4G சிம் கார்டு !
மதுரை: கீழ்மதுரையில் நிற்காத ஆடி அமாவாசை சிறப்பு ரயில்; ஊழியர்கள் மீது நடவடிக்கை!
மதுரை: கீழ்மதுரையில் நிற்காத ஆடி அமாவாசை சிறப்பு ரயில்; ஊழியர்கள் மீது நடவடிக்கை!
வீ த லீடர்ஸ் - சார்பாக சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெறும் ஒற்றுமை பேரணிக்கு உயர் நீதிமன்றம் பச்சைக்கொடி!
வீ த லீடர்ஸ் - சார்பாக சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெறும் ஒற்றுமை பேரணிக்கு உயர் நீதிமன்றம் பச்சைக்கொடி!
மானாமதுரை காவல் நிலையத்தில் பெண் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை முயற்சியால் பரபரப்பு ஏற்பட்டது !
மானாமதுரை காவல் நிலையத்தில் பெண் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை முயற்சியால் பரபரப்பு ஏற்பட்டது !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget