வெயிலில் இருந்து கொஞ்ச நேரம் விடுதலை; கரூரில் வாகன ஓட்டிகளுக்காக அமைக்கப்பட்ட நிழல் குடை
சிக்னல் சிறிது நேரம் விழும் பொழுது வாகன ஓட்டிகள் காத்திருக்கும் வகையில் அனைவரும் சற்று மன நிம்மதி அடைகின்றனர்.
கரூரில் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து சிக்னலில் தகரத்தால் ஆன நிழல் குடை அமைக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கரூர் ரவுண்டானா போக்குவரத்து சிக்னல் மற்றும் சுங்க கேட் பகுதியில் இருசக்கர வாகன ஓட்டிகளின் நலன் கருதி தகரத்தினால் ஆன நிழல் கொடை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் இதனால் வாகன ஓட்டிகளின் நலன் கருதி தகரத்தினால் ஆன நிழல் குடை அமைக்கப்பட்டது.
நிழல் குடை அமைக்கப்பட்டுள்ள இடங்களில் சிக்னல் சிறிது நேரம் விழும் பொழுது, வாகன ஓட்டிகள் காத்திருக்கும் வகையில் அனைவரும் சற்று மன நிம்மதி அடைகின்றனர். இந்த நிலையில் கரூர் பஸ் ஸ்டாண்ட் சிக்னல் மற்றும் சுங்க கேட் பகுதியில் போக்குவரத்து சிக்னல் அருகே கரூர் மாநகராட்சி சார்பில் வெயிலில் இருந்து தற்காலிகமாக பாதுகாத்துக் கொள்ளும் வகையில் தகரத்தினால் ஆன நிழல் கொடை அமைக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அனைத்து வாகன ஓட்டிகள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். மேலும் கரூர் மாநகராட்சி சார்பில் பல பகுதிகளில் போக்குவரத்து சிக்னல் உள்ள இடங்களில் தகரத்தினால் ஆன நிழல் குடை அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.