TANCET Counselling: எம்பிஏ, எம்சிஏ படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம்; எப்படி? கடைசி தேதி, கலந்தாய்வு.. முழு விவரம்!
TANCET MBA MCA Counselling 2025: 2025- 26ஆம் கல்வி ஆண்டில் எம்பிஏ, எம்சிஏ மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு, தனியார் கல்லூரிகளில் உள்ள எம்பிஏ, எம்சிஏ படிப்புகளில் சேர ஜூன் 30ஆம் தேதி வரை இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் அழைப்பு விடுத்துள்ளது. டான்செட் நுழைவு தேர்வு எழுதிய மாணவர்கள் இதற்குத் தகுதியானவர்கள் ஆவர்.
இதுதொடர்பாக சென்னை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:
2025- 26ஆம் கல்வி ஆண்டில் எம்பிஏ, எம்சிஏ மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதன்முலம் சென்னை அண்ணா பல்கலைக்கழகம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம், தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், கலை, அறிவியல் கல்லூரிகளில் வழங்கப்படும் எம்பிஏ, எம்சிஏ படிப்புகளில் விருப்பமும் தகுதியும் கொண்ட மாணவர்கள் சேரலாம்.
இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை பணிகளை ஜிசிடி எனப்படும் கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரி மேற்கொள்கிறது.
முக்கியத் தேதிகள் என்னென்ன?
டான்செட் நுழைவு தேர்வை எழுதிய மாணவர்கள் இணையம் மூலம் ஜூன் 30ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் ஜூலை 14-ம் தேதி வெளியிடப்பட உள்ளது.
கலந்தாய்வு எப்போது தொடங்கும்?
இந்தப் படிப்புகளுக்கான சிறப்பு பிரிவினரின் கலந்தாய்வு ஜூலை 21-ம் தேதி கோவை அரசு தொழில்நுட்ப கல்லூரியில் நடைபெறும். இந்தக் கலந்தாய்வு நேரடி முறையிலேயே நடக்கும்.
தொடர்ந்து, எம்சிஏ படிப்புக்கான பொது கலந்தாய்வு ஜூலை 24 முதல் 26ஆம் தேதி வரையும், எம்பிஏ கலந்தாய்வு ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 1ஆம் தேதி வரையும் ஆன்லைன் மூலம் நடைபெறும். துணை கலந்தாய்வு, எம்சிஏ படிப்புக்கு ஆகஸ்ட் 5ஆம் தேதியும், எம்பிஏ படிப்புக்கு ஆகஸ்ட் 6ஆம் தேதியும் நடத்தப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகளை https://static.tn-mbamca.com/docs/Registration_Instruction_in_Tamil.pdf?t=1749621992189 என்ற அறிவிக்கையை க்ளிக் செய்து காணலாம்.
விண்ணப்பிப்பது எப்படி?
- விண்ணப்பிக்கும் முன், https://www.tn-mbamca.com/user/register என்ற இணைப்பை க்ளிக் செய்து, முன்பதிவு செய்துகொள்ள வேண்டியது முக்கியம்.
- லாகின் செய்து, அதில் கேட்கப்பட்டிருக்கும் தகவல்களை உள்ளிட வேண்டும்.
- விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தி, விண்ணப்பிக்க வேண்டும்.
கூடுதல் தகவல்களுக்கு:
இணையதள முகவரி: https://www.tn-mbamca.com/
இ – மெயில்: care@tn-mbamca.com
தொலைபேசி எண்: 0422-2451100 / 9790279020





















