Ilaiyaraaja: யுவன் ஷங்கர் ராஜா 5 வயதில் போட்ட டியூனை காப்பியடித்து இளையராஜா உருவாக்கிய ஹிட் பாடல்! எது தெரியுமா?
மகனின் டியூனை காப்பியடித்து இளையராஜா உருவாக்கிய சூப்பர் ஹிட் பாடல் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இதுபற்றிய சுவாரஸ்ய தகவலை இப்போது பார்க்கலாம்.

இந்தியாவின் தலைசிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவரான இளையராஜா எத்தனையோ படங்களுக்கு இசையமைத்துள்ளார். கடந்த 1976 ஆம் ஆண்டு வெளியான 'அன்னக்கிளி' படம் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான இளையராஜா... தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
அதே போல் நாட்டின் உயரிய விருதுகளான பத்ம பூஷண், பத்ம விபூஷண் விருதுகளை வென்ற இளையராஜா தான் இசையமைத்த பாடல்களுக்கு காப்புரிமை கேட்டு வரும் நிலையில், அவர் மற்ற படங்களிலிருந்து காப்பி அடித்து இசையமைத்துள்ளார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம் இவர் காப்பி அடித்து டியூன் போட்ட பாடல்களும் பல உண்டு. சத்ரியன், நீங்கள் கேட்டவை, பிரியா, வைதேகி காத்திருந்தால், சின்ன வீடு ஆகிய படங்களில் இடம் பெற்ற ஒரு சில பாடல்களை காப்பி அடித்து தான் பயன்படுத்தியிருக்கிறார்.
இதெல்லாம் ஒரு புறம் இருந்தாலும், இளையராஜா தன்னுடைய மகன் 5 வயதில் போட்ட டியூனை, காப்பி அடித்து அதை வைத்து ஒரு பாடலையும் கம்போஸ் செய்துள்ளார் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம் இந்த தகவலை, இளையராஜாவே வெளிப்படையாக கூறியுள்ளார்.
இளையராஜா இசையில், பிரபு நடிப்பில் வெளியான திரைப்படம் தான் 'ஆனந்த்'. 1987-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன இந்த படத்தை, சி வி ராஜேந்திரன் என்பவர் இயக்க சிவாஜி புரோடக்ஷம் நிறுவனம் தயாரித்திருந்தது . இந்த படத்தில் பிரபுவுக்கு ஜோடியாக நடிகை ராதா நடித்திருந்தார், இந்த படத்தில் இடம்பெற்ற 'பூவுக்கு பூவாலே மஞ்சம் ஒன்று' என்கிற பாடல் இடம்பெற்றிருந்தது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, சூப்பர் வெற்றி பெற்றது. இந்த பாடலின் டியூனை யுவன் ஷங்கர் ராஜா தன்னுடைய 5 வயதில் விளையாட்டாக கம்போஸ் செய்தாராம்.
யுவன் ஷங்கர் ராஜாவுக்கு சிறு வயதில் இருந்தே இசை மீது ஆர்வம் இருந்த போதும்.... ஒரு பைலட் ஆக வேண்டும் என்பதே யுவனின் கனவாக இருந்தது. ஆனால் இவரின் இசை திறமை இவரையும் ஒரு இசையமைப்பாளராக மாற்றியது குறிப்பிடத்தக்கது.





















