Chennai Power Shutdown: சென்னையில் நாளை(12.06.25) இத்தனை இடங்களில் மின்வெட்டா? தயாரா இருங்க மக்களே
Chennai Power Shutdown 12.06.2025: சென்னையில் நாளை பராமரிப்பு பணி நடைப்பெற உள்ளதால் குரோம்பேட்டை முதல் முகப்பேர் வரை பல இடங்களில் மின்தடை செய்யப்பட உள்ளது

Chennai Power Shutdown (12.06.2025): மக்களுக்கு தடையின்றி மின்சாரம் தருவதை உறுதி செய்யும் வகையில் தமிழ்நாடு மின்சார வாரியம் மாதந்தோறும் இந்த மின் தடையை செய்து பராமரிப்பு பணிகள் செய்து சீரான மின் விநியோகத்திற்கு வழிவகுத்து வருகிறது. சென்னையில் மாத பராமரிப்பு பணி காரணமாக நகரின் சில இடங்களில் மாதம் ஒரு முறை அரை நாள் மின் தடை செய்யப்பட்டு வருகிறது.
சென்னையில் நாளை மின்தடை: 12.06.2025
இந்நிலையில், நாளை(12.06.2025 ) சென்னையில் மாநகராட்சியில் பல்வேறு இடங்களில் மின்பராமரிப்பு பணி காரணமாக பல்வேறு இடங்களில் மின் தடை செய்யப்படும் எனற அறிவிப்பை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
இதனால், பராமரிப்பு பணிகளுக்காக வியாழக்கிழமை 12.06.2025 காலை 09.00 மணி முதல் பிற்பகல் 02.00 மணி வரை பின்வரும் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள்:
ஒட்டியம்பாக்கம்:
ஒட்டியம்பாக்கம் பிரதான சாலை, கிரஷர் பிரதான சாலை, நேதாஜி நகர், ஜோன்ஸ், வேடந்தநாகல் நகர்
ராதா நகர்:
சுகுணா காலனி, ஸ்கை பார்க் 200 அடி சாலை, டிவிஎஸ் எமரால்டு, அக்னி பிளாட்ஸ், நடேசன் நகர், கணபதிபுரம், நாயுடு கடை சாலை, கணபதி புரம் ஒரு பகுதி, சர்ச் சாலை, பஞ்சாயத்து மார்க்கெட் நாயுடு கடை சாலை, கணபதி புரம் ஒரு பகுதி, சர்ச் சாலை, பஞ்சாயத்து சந்தை
நியூ காலனி:
நியூகாலனிமற்றும் 2வது குறுக்குதெரு, சாஸ்திரிகாலனி, ஜிஎஸ்டி ரோடு, சிஎல்சி லைன் 11வது தெரு, அம்மன்கோவில்தெரு
பள்ளிக்கரணை:
பள்ளிக்கரணை - சாய்கணேஷ் நகர், வீராசாமி நகர், சாய் பாலாஜி நகர், விவேகானந்தா நகர், பசும்பொன் நகர், கிருஷ்ணா நகர், சுப்ரமணி நகர், வாஞ்சிநாதன் தெரு, வள்ளல் பாரி நகர் பகுதி, பாம்பன் சுவாமிகள் நகர் எம்.
ஜல்லடியன்பேட்டை:
சோழிங்கநல்லூர் பிரதான சாலை, இந்தியா காளைகள், ஏரிக்கரை சாலை, பிரபு நகர், வீரத்தம்மன் கோயில் தெரு, ஆண்டாள் நகர்
குரோம்பேட்டை:
பாலகுருசாமி தெரு, ஜெயராமன் தெரு, பழனியப்பா தெரு, பாலசுப்ரமணியன் தெரு, சோங்குவேல் தெரு, மகிமைதாஸ் தெரு, பாஸ்கர் தெரு, அருள்பாண்டியன் தெரு, ராஜிவ்காந்தி நகர், டில்லி தெரு, பெரியார் நகர்
முகப்பேர் பகுதி:
டிஎஸ் கிருஷ்ணா நகர், டிவிஎஸ் காலனி, டிவிஎஸ் அவென்யூ, டிவிஎஸ் மெயின் ரோடு மற்றும் தேவர் நகர்
சென்னையில் மின்தடை நேரம்?
இந்த பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை மேற்கொள்ளப்பட உள்ளதாக தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
மேலும் பராமரிப்பு பணிகள் பிற்பகல் 02.00 மணிக்க்கும் நிறைவு பெற்றால் மின் விநியோகம் வழங்கபப்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள், தங்களது முக்கிய பணிகளை முன்கூட்டியே திட்டமிட்டு முடித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.






















