அதிர்ச்சி! 11ம் வகுப்பு மாணவிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை - 3 சிறுவர்கள் உட்பட 4 பேர் கைது
கைது செய்யப்பட்ட மூன்று மாணவர்களும் சிறியவர்கள் என்பதால், காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ வழக்கில் வழக்கு பதிவு செய்யப்பட போவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

காஞ்சிபுரம் அருகே 11 ஆம் வகுப்பு பள்ளி மாணவியை 8 ஆம் வகுப்பு 9ஆம் வகுப்பு என 3 பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட 4 பேர் சேர்ந்து, பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் சேர்ந்த ஒரு தம்பதிக்கு மூன்று மகள் ஒரு மகன் உள்ளனர். ஒரு மகள் காஞ்சிபுரம் தாலுக்கா அலுவலகம் அருகே உள்ள அரசு பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த, ஒரு தம்பதியின் மகன் ஒன்பதாவது வகுப்பு காஞ்சிபுரம் பள்ளியில் படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த மற்றொரு மாணவன் எட்டாம் வகுப்பு படித்து வருகிறான். அதே பகுதி சேர்ந்த மற்றொரு மாணவனும் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.
கூட்டு பாலியல் வன்கொடுமை
இந்நிலையில் 22 வயது வாலிபர் இந்த மூன்று மாணவர்களுடன் சேர்ந்து 11 ஆம் படிக்கும் மாணவிக்கு குளிர்பானத்தில் மதுபானத்தை கலந்து கொடுத்து, கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார். 3 மாணவர்களும் இந்த மாணவியை விட சிறிய வயது என்பது குறிப்பிடத்தக்கது.
மாகரல் காவல்துறையினர் இரண்டு சிறுவர்கள் மற்றும் அஜய் ஆகியோரை கைது செய்து, காவல் நிலையம் கொண்டு சென்று உள்ளதாகவும் மற்றொரு பள்ளி மாணவனை தேடி வருவதாகவும் கூறப்படுகிறது. 22 வயது வாலிபர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
போலீஸ் விசாரணை
கைது செய்யப்பட்ட மூன்று மாணவர்களும் சிறியவர்கள் என்பதால், காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ வழக்கில் வழக்கு பதிவு செய்யப்பட போவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் காஞ்சிபுரம் பகுதியில் பெரும் பரம்பரப்பையும் அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது.






















