மேலும் அறிய
மகேஷ் பாபு நடிக்கும் படத்திற்கு ராஜமெளலி வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா...?
மகேஷ் பாபு நடிக்கும் படத்தை இயக்கிவரும் ராஜமெளலி இந்த படத்திற்கு எவ்வளவு சம்பளம் வாங்கியுள்ளார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது

ராஜமெளலி
Source : Twitter
ஷாக் கொடுக்கும் ராஜமெளலியின் சம்பளம்
இயக்குநர் ராஜமெளலி தற்போது மகேஷ் பாபு நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். பிரியங்கா சோப்ரா , மாதவன் , பிருத்விராஜ் உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்து வருகிறார்கள். சுமார் ரூ 1000 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரம்மாண்ட சாகச கதையாக உருவாகி வரும் இந்த படத்திற்கு ராஜமெளலி வாங்கிய சம்பளம் குறித்த தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த தகவலின்படி இந்த படத்திற்கு ராஜமெளலி ரூ 200 கோடி சம்பளமாக பெற்றுள்ளார். இந்திய இயக்குநர்களில் அதிக சம்பளம் வாங்கும் இயக்குநர்கள் பட்டியலில் ராஜமெளலி முதலிடத்தை பிடித்துள்ளார்.
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















