மேலும் அறிய

Trump Vs Xi Jinping: “அவர புடிக்கும், ஆனா..“ சீன அதிபர் குறித்து அமெரிக்க அதிபர் கூறியது என்ன.? ஊசலாடும் பேச்சுவார்த்தை

பரஸ்பர வரிகள் தொடர்பாக, அமெரிக்கா-சீனா இடையே நடைபெற்று வந்த பேச்சுவார்த்தை முடங்கியுள்ளது. இது தொடர்பாக சீன அதிபர் குறித்து ட்ரம்ப் ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார். அது குறித்து பார்க்கலாம்.

பரஸ்பர வரிகள் தொடர்பாக, அமெரிக்கா - சீனா இடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில், அந்த பேச்சுவார்த்தை தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. அதற்கு காரணமாக, அமெரிக்க அதிபர் சீன அதிபர் மீது ஒரு கருத்தை கூறியுள்ளார். அப்படி என்ன கூறினார் ட்ரம்ப்.? பார்க்கலாம்.

அமெரிக்கா - சீனா இடையே ஏற்பட்ட வர்த்தகப் போர்

அமெரிக்க அதிபராக 2-வது முறையாக பதவியேற்ற ட்ரம்ப்பால், சீனாவிற்கு 34 சதவீத வரி விதிக்கப்பட்டது. அதற்கு பதிலடியாக, சீனா அமெரிக்க பொருட்கள் அனைத்திற்கும் 34% வரியை விதித்தது. மேலும், பல அமெரிக்க நிறுவனங்கள் சீனாவில் வர்த்தகம் செய்ய கட்டுப்பாடுகளையும், சில நிறுவனங்களுக்கு தடையையும் விதித்தது. 

இதைத் தொடர்ந்து, சீனா அறிவித்த வரியை திரும்பப்பெறாவிட்டால், அந்நாட்டிற்கு 50% கூடுதல் வரி விதிக்கப்படும் என ட்ரம்ப் எச்சரித்தார். ஆனாலும் அசராத சீனா, ட்ரம்ப் கூடுதல் வரியை விதித்தால், தாங்களும் அதற்கு பதில் வரி விதிப்போம் என எச்சரித்தது. இதையடுத்து, ட்ரம்ப் உத்தரவுப்படி, சீனாவிற்கான வரி 104%-ஆக அதிகரித்தது. இதைத் தொடர்ந்து, அமெரிக்காவிற்கான வரியை 84%-ஆக உயர்த்தியது சீனா. இதையடுத்து, சீனாவிற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, அந்நாட்டிற்கான வரியை 125 சதவீதமாக உயர்த்தினார் ட்ரம்ப். இந்நிலையில், அமெரிக்காவின் செயல்களுக்கு அஞ்ச மாட்டோம் என்றும், தாங்களும் வரியை மேலும் உயர்த்துவோம் என்றும் சீனா அறிவித்தது.

இதையடுத்து, சீன பொருட்களுக்கான இறக்குமதி வரியை 145 சதவீதமாக உயர்த்தி அறிவித்தார் ட்ரம்ப். பதிலுக்கு சீனாவும் அமெரிக்க பொருட்களுக்கான வரிகளை 125 சதவீதமாக உயர்த்தி அறிவிப்பை வெளியிட்டது. இதனால் கடுப்பான ட்ரம்ப், சீனாவின் பல பொருட்கள் மீதான இறக்குமதி வரியை மேலும் 100 சதவீதம் உயர்த்தியதையடுத்து, வரி விதிப்பு 245 சதவீதமானது. இதையடுத்து, இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகப் போர் உச்ச கட்டத்தை எட்டியது. மேலும், இது உலகளாவிய பங்குச் சந்தைகளின் வீழ்ச்சிக்கும் காரணமானது.

இதனிடையே, இரு நாடுகளுக்கும் இடையே சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஒரு தற்காலிக ஒப்பந்தம் ஏற்பட்ட, பரஸ்பர வரி விதிப்பு 90 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டது. அதற்குள் இரு தரப்பும் பேசி ஒரு நல்ல வரி ஒப்பந்தத்தை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டு, இரு தரப்பு பிததிநிதிகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தனர்.

நின்று போன பேச்சுவார்த்தை - ட்ரம்ப் கருத்து

இந்த நிலையில்தான், தற்போது அமெரிக்கா - சீனா இடையேயான வரி ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை நின்று போனதாக தகவல் வெளியாகியுள்ளது. இரு தரப்பும், சுவிட்சர்லாந்தில் கடந்த மாதம் எட்டப்பட்ட ஒப்பந்தத்தை மீறி விட்டதாக பரஸ்பரம் குற்றம் சாட்டி, பேச்சுர்த்தை நிறுத்தப்பட்டுள்ளது.

எனினும், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் இடையே விரைவில் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று வெள்ளை மாளிகை அறிவித்திருந்தது. இந்நிலையில், சீன அதிபர் குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், சீனாவின் ஷி ஜின்பிங்கை தனக்கு எப்போதுமே பிடிக்கும் என்றும் அது தொடரும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், அவர் மிகவும் கடினமானவர், அதிலும் அவருடன் ஒப்பந்தம் மேற்கொள்வது இன்னும் மிகக் கடினமானது என்றும் கூறியுள்ளார்.

ட்ரம்ப் இப்படி கூறியுள்ள நிலையில், அவர்கள் இருவரும் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்துவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால், மீண்டும் இரு நாடுகளிடையே வர்த்தகப் போர் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், உலக அளவில் பங்குச் சந்தைகளும் சிக்கலை எதிர்நோக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

MK Stalin:
MK Stalin: "போராட்டம்.. சிறை.. தியாகம்" - இதுதான் திமுக.. முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!
Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
TATA Sierra EV: அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
ABP Premium

வீடியோ

தர்காவில் சந்தனக்கூடு விழா! ”இந்துக்களை விட மாட்டீங்களா” திருப்பரங்குன்றத்தில் மோதல்
”5 வருசம் நான் தான் CM
விஜய்யுடன் 3 மணி நேரம் மீட்டிங்செங்கோட்டையன் கொடுத்த IDEA! MISS ஆன ஆனந்த்
Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin:
MK Stalin: "போராட்டம்.. சிறை.. தியாகம்" - இதுதான் திமுக.. முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!
Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
TATA Sierra EV: அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
Crime: கணவரை துண்டு துண்டாக வெட்டி கிரைண்டரில் அரைத்த மனைவி.. கள்ளக்காதல் விபரீதம்!
Crime: கணவரை துண்டு துண்டாக வெட்டி கிரைண்டரில் அரைத்த மனைவி.. கள்ளக்காதல் விபரீதம்!
Embed widget