RCB Parade: கப்போட வர்றோம் - பெங்களூருவில் பேரணியாக செல்லும் ஆர்சிபி படை - எங்கு? எப்போது? எப்படி காணலாம்
RCB Victory Parade: ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற ஆர்சிபி அணி இன்று பெங்களூருவில், கோப்பையுடன் பேரணி மேற்கொள்ள உள்ளது.

RCB Victory Parade: ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற ஆர்சிபி அணியின் பேரணியை எங்கு? எப்போது? காணலாம் என்ற விவரங்கள் கீழே வழங்கப்பட்டுள்ளன.
கைக்கு வந்த கோப்பை:
ஐபிஎல் போட்டியில் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற 18 ஆண்டுகால போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்து, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நடப்பாண்டில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. பஞ்சாப் அணியை வீழ்த்திய பிறகு நள்ளிரவு முதலே பெங்களூரு அணியின் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் வெற்றியை கொண்டாடி வருகின்றனர். பெங்களூரு நகரின் பிரதான சாலைகளில் கைகளில் கொடிகளை ஏந்தி ரசிகர்கள் குவிய, வண்ண வண்ண பட்டாசுகளும் இரவை பகலாக்கின. ஆர்சிபி..ஆர்சிபி மற்றும் கோலி..கோலி எனும் முழக்கங்கள் விண்ணை முட்டின. இந்த கொண்டாட்டத்தின் அடுத்தகட்டமாக ஆர்சிபி அணி வீரர்கள் கோப்பையுடன் இன்று பெங்களூருவில் ரோட் ஷோவில் ஈடுபட உள்ளனர்.
Entry but make it BOLD. ❤️🔥 pic.twitter.com/JihkcQCJXO
— Royal Challengers Bengaluru (@RCBTweets) June 4, 2025
கோப்பையுடன் ரோட்ஷோ
அகமதாபாத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் கோப்பையை வென்ற ரஜத் படிதார் தலைமையிலான அணி, இன்று மாலை பெங்களூரு நகருக்கு திரும்பி சாம்பியன் பட்டத்தை வென்றது தொடர்பான பல்வேறு கொண்டாட்டங்களில் ஈடுபட உள்ளனர். அதன்படி, பிற்பகல் 1.30 மணிக்கு பெங்களூரு வரும் அணி, மாலை 4 முதல் 4 மணி வரையிலான இடைவெளியில், விதான சவுதா மாளிகையில் முதலமைச்சர் சித்தராமையாவை சந்திக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதைதொடர்ந்து, சாலையில் கோப்பையுடன் பேரணி நடத்தப்பட உள்ளது.
ஆர்சிபியின் ரோட் ஷோ எங்கு? எப்போது?
முதலமைச்சரை சந்தித்த பிறகு விதான சவுதா மாளிகையில் இருந்து, சின்னசாமி மைதானம் வரையில் திறந்தவெளி பேருந்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர்கள் கோப்பையுட்ன ஊர்வலமாக செல்ல உள்ளனர். மாலை 6 மணியளவில் மைதானத்தை அடைந்ததும் அங்கு வெற்றிக் கொண்டாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ரசிகர்களுடன் சேர்ந்து வெற்றியை கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பேரணியை எங்கு காணலாம்?
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வெற்றியை பேரணியை தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அலைவரிசையில் கண்டுகளிக்கலாம். இதேபோன்று ஜியோ ஹாட்ஸ்டார் செயலியிலியிலும், இணையதளத்திலும் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும்.
வரலாற்று வெற்றி
ஐபிஎல் வரலாற்ரில் நான்காவது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறிய பெங்களூரு, நிச்சயம் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் பஞ்சாபை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்து 191 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. பஞ்சாப் அணி இலக்கை நோக்கி அதிரடியாக பேட்டிங்கை தொடங்கினாலும், சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. குறிப்பாக க்ருணால் பாண்ட்யா 4 ஓவர்களை வீசி 17 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 2 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி, ஆர்சிபியின் வெற்றியை சாத்தியமாக்கினார். அதன் விளைவாக அவர் ஆட்டநாயகன் விருதையும் வசப்படுத்த, பெங்களூரு அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.




















