Suriya 46 : தொடங்கியது சூர்யா 46 படத்தின் படப்பிடிப்பு...போஸ்டர் வெளியிட்ட படக்குழு
வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் சூர்யா 46 படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளதை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது

சூர்யா 46
சூர்யா நடித்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கி இந்த ஆண்டு ரெட்ரோ படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இருந்தாலும் வசூல் ரீதியாக ரெட்ரோ வெற்றிப்படமாகவே அறிவிக்கப்பட்டது. ரெட்ரோ படத்தைத் தொடர்ந்து சூர்யா ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா 45 படத்தில் நடித்துள்ளார். கூடிய விரைவில் இந்த படத்தின் அப்டேட் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
அடுத்தபடியாக சூர்யாவின் 46 ஆவது படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. வாத்தி , லக்கி பாஸ்கர் ஆகிய படங்களை இயக்கிய வெங்கி அட்லூரி இந்த படத்தை இயக்குகிறார். மமிதா பைஜூ நாயகியாக நடிக்கிறார். ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார்.
சூர்யா 45 படப்பிடிப்பு தொடங்கியதை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. சூரரைப் போற்று படத்தைப் போலவே இந்த படமும் பிரபல நபர் ஒருவரின் சுயசரிதையாக உருவாக இருப்பதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது
The first step towards celebration, emotion and entertainment ❤️#Suriya46 shoot begins! @Suriya_offl #VenkyAtluri @_mamithabaiju @realradikaa @TandonRaveena @gvprakash @vamsi84 @NimishRavi @NavinNooli @Banglan16034849 #SaiSoujanya @SitharaEnts @Fortune4Cinemas #SrikaraStudios pic.twitter.com/WcBTgwA7LG
— Sithara Entertainments (@SitharaEnts) June 11, 2025
சூர்யா 46 கதை
சூர்யா 46 படத்தின் கதை தொடர்பாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன. சுஸூகி மோட்டார் நிறுவனம் மற்றும் இந்திய அரசு இணைந்து கண்டுபிடித்த மாருதி 796 ரக இஞ்சின் உருவாக்கப்பட்ட கதையை மையமாக வைத்து இப்படம் உருவாக இருப்பதாகவும் இதில் சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஜப்பான் நிறுவனமான சுஸூகி மோட்டார்ஸ் மற்றும் இந்திய அரசு சேர்ந்து இந்த இஞ்சினை உருவாக்கியதற்கு பின் பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை இணைந்து இப்படத்தின் திரைக்கதை அமைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சூர்யா முன்னதாக நடித்த சூரரைப் போற்று திரைப்படம் கேப்டன் ஜி.ஆர் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவானது. கடும் எதிர்ப்புகளுக்கு பின் ஓடிடியில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. அதே நேரம் வெங்கி அட்லூரி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான லக்கி பாஸ்கர் திரைப்படம் 100 கோடிக்கும் மேல் வசூலித்தது. எல்லா தரப்பு ரசிகர்களிடமும் இந்த படம் வரவேற்பைப் பெற்றதால் சூர்யா 46 படத்திற்கும் பெரியளவில் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.





















