மேலும் அறிய
ஆதாரில் மாறிய புகைப்படம்: 14 ஆண்டுகளாக அரசு உதவி கிடைக்காமல் தவிக்கும் முதியவர் - பரிதாப நிலை!
ஆதாரில் மாறிய போட்டோ 14 ஆண்டுகளாக அரசு உதவி கிடைக்காமல் அலைந்து திரியும் முதியவர்.

முதியவர் மூக்கையா
Source : whats app
ஆதார் மாற்றம் முடியாமல் திணறும் முதியவர்
மதுரை மாநகர் மேலமடை அருகேயுள்ள மானகிரி பகுதியை சேர்ந்தவர் மூக்கையா (55). இவர், கடந்த 2011 ஆம் ஆண்டு மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற முகாமில் ஆதார் கார்டு பதிவு செய்துள்ளார். இந்த நிலையில் அவருக்கு வந்த ஆதார் கார்டில் வேறு ஒரு நபருடைய பெயர் மற்றும் புகைப்படத்துடன் வந்துள்ளது. இதனையடுத்து இது தொடர்பாக நான்கு ஆண்டுகளுக்கு மேலாக அலைந்து திரிந்த மூக்கையா பின்னர் அவருடைய பெயர் முகவரியை மாற்றிய நிலையிலும் கூட, தற்போது வரை அவருடைய புகைப்படம் மாறாத நிலையில் உள்ளது. வேறு நபருடைய புகைப்படம் இடம்பெற்றுள்ளதால் தொடர்ச்சியாக 14 ஆண்டுகளாக, ஆதார் கார்டை பயன்படுத்த முடியாத சூழலில் உள்ளார். தற்போது அவருடைய ஆதார் கார்டில் அவரது செல் போன் நம்பர் மற்றும் முகவரி இருந்த போதிலும் கூட புகைப்படம் மாறாத நிலையில் அவரால் எந்தவித அரசு உதவிகளையும் பெற முடியாத சூழலில் உள்ளார்.
கண்கலங்க மீண்டும் வீட்டிற்கே புறப்பட்டு சென்றார்
14 ஆண்டுகளாக ஆதார் கார்டு பயன்படுத்த முடியாத சூழலில், தனக்கான ரேசன் பொருட்கள், நகை கடன் ரத்து பிள்ளைகளுக்கான திருமண உதவித்தொகை உள்ளிட்ட எந்த பலன்களை அனுபவிக்க முடியாமல் சிரமத்திற்கு ஆளாகி வருவதாகவும். இது தொடர்பாக தபால் மூலமாக பெங்களூரு ஆதார் மையத்திற்கு கடிதம் அனுப்பிவிட்டேன் எனவும், மதுரையில் உள்ள ஆதார மையத்திற்கு சென்று எந்த பலனும் இல்லை. எனவும், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளிடம் பலமுறை மனுக்கள் குறித்தும் தற்போது வரை எனது போட்டோ மாறவில்லை. எனக்கூறி, 14-ஆவது ஆண்டாகவும் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்க திட்டத்திற்கு சென்று அதிகாரிகளிடம் முறையிட்டார். ஆனாலும் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சிய நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் படிக்கட்டின் அருகே அமர்ந்து தனது ஆவணங்களை எல்லாம் பார்த்துவிட்டு கண்கலங்க மீண்டும் வீட்டிற்கே புறப்பட்டு சென்றார்.
புகைப்படம் மாறவில்லை
இதுகுறித்து பேசிய மூக்கையா...,” நான் வெளிநாட்டில் இருந்து விடுமுறைக்கு வந்தபோது 2011 ஆம் ஆண்டு ஆதார் முகாமில் ஆதாருக்கு பதிவு செய்தேன். பின்னர் ஆதார் வரும்போது வெளிநாட்டில் இருந்ததால் எனது மகளை வாங்கி வைக்க சொன்னேன். அப்போது ஆதார் வராத நிலையில், என் மனைவி உயிரிழந்த போது, ஊருக்கு வந்து ஆதார் கார்டு வாங்கிய போது, வேறு ஒரு பெயரில் ஆதார் கார்டு எனக்கு வந்தது. இதனால் மீண்டும் எனது பெயர் மாறியுள்ளதாக கூறி மனு அளித்தேன். நான்கு ஆண்டு அலைச்சலுக்கு பின்பாக பெயர் மாற்றப்பட்டது. ஆனால் தற்போது வரைக்குமாக எனது புகைப்படம் மாறவில்லை என்பதால் எந்த அரசு உதவிகளும் கிடைக்கவில்லை.
கால் கிலோ அரிசி கூட வாங்கவில்லை
இதனால் ரேஷன் கடையில் கால் கிலோ அரிசி கூட இதுவரையும் வாங்கவில்லை. மேலும் எனக்கு நகைக்கடன் அடகு வைத்த தள்ளுபடியும் செய்யப்படவில்லை. எனது மகள்களுக்கு திருமணம் செய்து கொடுத்து திருமண உதவித் தொகையும் பெறவில்லை. எனவும், 14 ஆண்டுகளாக அரசினுடைய ஒரு உதவி தொகை கூட பெறாமல் மிகுந்த சிரமத்தில் உள்ளேன். அனைத்து அதிகாரிகளிடமும் அலைந்து விட்டேன். ஆனால் எந்த பதிலும் இல்லை. என்னை பெங்களூருக்கு போக சொல்கிறார்கள். நான் எங்கு செல்வது, என தெரியாமல் தவித்து வருகிறேன். நான் ஒருவேளை இறந்து விட்டால் என்னை உடலை அடக்கம் செய்யும்போது ஆதார் கார்டு கேட்பார்கள். அப்போது என் மகள்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகுவார்கள். எனவே அரசு எனது இறுதிச் சடங்கை மனதில் வைத்தாவது எனக்கு உதவி செய்ய வேண்டும். என கண்கலங்க கோரிக்கை விடுத்தார். பெங்களூரு சென்று நேரடியாக மனு அளிக்க வேண்டும் என கூறுகிறார்கள்” என்றார். கடந்த 14 ஆண்டுகளாக கையில் பையோடு 14 ஆண்டுகளாக விண்ணப்பித்த ஆதார் கார்டு விண்ணப்ப நகலை எடுத்துகொண்டு மூக்கையா செய்வதறியாது, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை சுற்றி சுற்றி வருகை தரும் அவலம் தான் நீடித்து வருகிறது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கிரிக்கெட்
தமிழ்நாடு
அரசியல்





















