CM Stalin: 18,720 பெண் பணியாளர்கள் தங்கும் குடியிருப்புகளை திறந்து வைத்த முதலமைச்சர் ஸ்டாலின்..!
ஸ்ரீபெரும்புதூரில் 18,720 ஃபாக்ஸ்கான் நிறுவன பெண்களுக்காக, தங்கும் குடியிருப்புகளை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
நாட்டிலேயே முதல் முறையாக ஸ்ரீபெரும்புதூரில் , பெண் தொழிலாளர்கள் தங்கும் வகையிலான 18, 720 படுக்கைகளுடன் கூடிய ரூ. 705. 50 கோடி மதிப்பிலான விடுதியை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இந்தியாவிலேயே முதன் முறையாக தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தின் (சிப்காட்) சார்பில் காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் வட்டம், வல்லம்-வடகால் கிராமத்தில் தொழிற்சாலையில் பணிபுரியும் பெண் பணியாளர்களுக்காக ரூ. 706.50 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 18,720 படுக்கைகள் கொண்ட சிப்காட் மெகா குடியிருப்பு வளாகத்தை மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.கஸ்டாலின் அவர்கள் இந்தியாலிலேயே முதன் முறையாக தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தின் சார்பில் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் வல்லம் வடகால் கிராமத்தில் தொழிற்சாலையில் பணிபுரியும் பணியாளர்களுக்காக 706.50 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 18.720 படுக்கைகள் கொண்ட சிப்காட் மெகா குடியிருப்பு வளாகத்தை திறந்து வைத்தார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.@mkstalin அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் வட்டம், வல்லம் - வடகால் கிராமத்தில் சிப்காட் மெகா குடியிருப்பு வளாகத்தை திறந்து வைத்து, பெண் பணியாளர்களுக்கு குடியிருப்புக்கான சாவிகளை வழங்கினார்.#CMMKSTALIN | #TNDIPR@CMOTamilnadu pic.twitter.com/IAvUgNssLt
— TN DIPR (@TNDIPRNEWS) August 17, 2024
இந்நிலயில், அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாடு இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாக விளங்கி வருகிறது. தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையில் வேலை உருவாக்குவதற்கு தேவையான தொழில் முதலீடுகளை அழிப்பதற்கு தமிழ்நாடு அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது அவற்றில் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக ஜனவரி 7 மற்றும் 8 தேதிகளில் சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
அம்மாநாட்டின்போது 6,41,60கோடி ரூபாய் முதலீடு மற்றும் 26,90,657 நபர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பை உறுதி செய்திடும் வகையில் உலகளாவிய முன்னணி தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுடன் முன்னெப்போதும் இல்லாத சாதனையாக 631 புரிந்துணர்வு மேற்கொள்ளப்பட்டன. மேலும் தமிழ்நாடு 1 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார இலக்கினை அடைவதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.
தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தின் செயல்பாடுகள்
தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் (சிப்காட்) 1971-ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞரால் தோற்றுவிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் தொழிற்சாலைகளுக்குத் தேவையான உட்கட்டமைப்பை திட்டமிடல் மேம்படுத்துதல் செயல்படுத்துதல் மற்றும் ஊக்குவித்தல் ஆகியவை சிப்காட் நிறுவனத்தின் குறிக்கோள்கள் ஆகும்.
சிப்காட் தோற்றுவிக்கப்பட்ட நாளிலிருந்து இதுவரை 20 மாவட்டங்களில் 7 சிறப்புப் பொருளாதார மண்டலங்களை உள்ளடக்கி 40.839 ஏக்கர் நிலப்பரப்பில் 40 தொழிற்பூங்காக்கள் உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த 53 ஆண்டுகளில் 3, 275 தொழில் நிறுவனங்கள் உருவாவதற்கும் அதன்மூலம் மொத்தம் சுமார் 183 இலட்சம் கோடி ரூபாய் முதலீடு மற்றும் 8.15 இலட்சம் நபர்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைத்திடவும் சிப்காட் நிறுவனம் முக்கிய காரணியாக திகழ்கிறது என அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.