(Source: ECI/ABP News/ABP Majha)
பணக்கார இந்திய பெண்களின் பட்டியல் முதலிடம்: ரோஷ்னி நாடார் மல்ஹோத்ரா முதலிடம்!
பணக்கார இந்திய பெண்களின் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில், முதல் இடத்தை HCL டெக்னாலஜிஸ் தலைவர் ரோஷ்னி நாடார் மல்ஹோத்ரா தக்க வைத்துள்ளார்.
பணக்கார இந்திய பெண்களின் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில், முதல் இடத்தை HCL டெக்னாலஜிஸ் தலைவர் ரோஷ்னி நாடார் மல்ஹோத்ரா தக்க வைத்துள்ளார். கடந்த 2021 ஆம் ஆண்டு, அவரது சொத்து மதிப்பு 54 விழுக்காடு அதிகரித்து 84,330 கோடி ரூபாயாக கணக்கிடப்பட்டுள்ளது.
பணக்கார பெண்கள் அடங்கிய கோடக் பிரைவேட் பேங்கிங்-ஹுருன் பட்டியல் புதனன்று வெளியிடப்பட்டது. அதில், சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பு அழகு சார்ந்த பிராண்டான நைக்காவைத் தொடங்குவதற்காக தனது முதலீட்டு வங்கிப் பணியை விட்டு விலகிய ஃபல்குனி நாயர், 57,520 கோடி நிகர மதிப்புடன் சுயமாக வளர்ந்த பணக்காரப் பெண்ணாக உருவெடுத்துள்ளார்.
59 வயதான ஃபல்குனி நாயரின் சொத்து மதிப்பு, இந்த ஆண்டில் 963 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும் ஒட்டுமொத்தமாக இரண்டாவது பணக்காரப் பெண்மணியாகவும் உள்ளார். HCL டெக்னாலஜிஸ் நிறுவனர் சிவ நாடாரின் மகளான 40 வயது மல்ஹோத்ராவுக்கு அடுத்த இடத்தை ஃபல்குனி நாயர் பிடித்துள்ளார்.
பயோகானின் கிரண் மஜும்தார்-ஷாவின் சொத்து மதிப்பு 21 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது. 29,030 கோடி ரூபாய் சொத்துக்களுடன் நாட்டின் மூன்றாவது பணக்காரப் பெண்மணியாக கிரண் மஜும்தார்-ஷா திகழ்கிறார். ஆனால், இவர் பட்டியலில் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளார்.
100 பெண்கள் கொண்ட பட்டியலில், இந்தியாவில் பிறந்து அல்லது வளர்ந்தவர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளனர். வணிகத்தை தீவிரமாக நிர்வகிக்கும் அல்லது சுயமாக உருவாக்கிய பெண்களின் பெயர் இடம்பெற்றுள்ளது.
இந்த 100 பெண்களின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு, 2020இல் 2.72 லட்சம் கோடி ரூபாயிலிருந்து 2021இல் 4.16 லட்சம் கோடி ரூபாயாக ஓராண்டில் 53 சதவீதம் அதிகரித்துள்ளது. இவர்களின், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சதவீதத்தை பங்களிக்கின்றனர்.
முதல் 100 இடங்களுக்குள் வருவதற்கான சொத்து வரம்பு, முந்தைய 100 கோடி ரூபாயிலிருந்து 300 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் முதல் 10 இடங்களில் இடம்பெறுவதற்கான சொத்து வரம்பு 6,620 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டை விட 10 சதவீதம் அதிகமாகும்.
டெல்லி-தேசிய தலைநகர் பிராந்தியத்தில் இருந்து 25 பேரும், மும்பையை சேர்ந்த 21 பேரும் ஹைதராபாத்திலிருந்து 12 பேரும் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்