மகனின் கல்லறையில் படுத்து கதறி, கதறி அழுத தந்தை.. மனதை உலுக்கும் ஆர்சிபி கொண்டாட்ட துயரம்
ஆர்சிபி கொண்டாட்ட நிகழ்வில் உயிரிழந்த மகனின் நினைவிடத்தில் தந்தை கதறி அழுத சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

நடப்பாண்டில் நடந்த ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பஞ்சாப் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றது. 18 ஆண்டுகால ஐபிஎல் வரலாற்றில் முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை ஆர்சிபி அணி கைப்பற்றியது.
11 பேர் உயிரிழப்பு:
இதையடுத்து, பெங்களூரில் ஆர்சிபி அணியைப் பாராட்டி சின்னசாமி மைதானத்தில் பாராட்டு விழா நடந்தது. அந்த விழாவில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படு்த்தியது. இந்த நிலையில், இந்த சம்பவத்தில் உயிரிழந்த 19 வயது இளைஞரின் நினைவிடத்தில் அவரது தந்தை கதறி அழுத வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கதறி அழுத தந்தை:
19 வயதான இளைஞர் பூமிக். இவர் ஆர்சிபி-க்கு நடந்த பாராட்டு விழாவில் பங்கேற்க சென்று கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். இவர் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் இவரது தந்தை லட்சுமணன் படுத்துக்கொண்டு அந்த இடத்தை விட்டு எழுந்து செல்ல மறுத்து கதறி, கதறி அழுதார். தனது மகனின் நினைவிடத்தில் படுத்து அழுதுகொண்டே நான் இங்கேதான் இருப்பேன். எங்கேயும் போகமாட்டேன் என்று கதறி அழுதார். இது பார்ப்பவர்கள் கண்களை குளமாக்கியது.
ಕೊಲೆಗಡುಕ ಸಿಎಂ @siddaramaiah ಅವರೆ, ಕೊಲೆಗಡುಕ ಡಿಸಿಎಂ @DKShivakumar ಅವರೆ,
— BJP Karnataka (@BJP4Karnataka) June 7, 2025
ನೀವು ಮನಸ್ಸು ಮಾಡಿದ್ದರೆ ಐಷಾರಾಮಿ ಹೋಟೆಲ್ನಲ್ಲಿ ನಿಮ್ಮ ಮಕ್ಕಳು ಹಾಗೂ ಮೊಮ್ಮಕ್ಕಳೊಂದಿಗೆ ಕಪ್ ಜೊತೆ ಫೋಟೋ ತೆಗೆಸಿಕೊಳ್ಳಬಹುದಿತ್ತು. ಆದರೆ ವಿಧಾನಸೌಧದ ಮೆಟ್ಟಿಲುಗಳ ಮೇಲೆಯೇ ಫೋಟೋ ತೆಗೆಸಿಕೊಳ್ಳಬೇಕೆಂಬ ನಿಮ್ಮ ಹಠ 11 ಕುಟುಂಬಗಳು ಪ್ರತಿನಿತ್ಯ… pic.twitter.com/l27yBoeiiX
பின்னர். அவரை சிலர் ஆறுதல்படுத்தி அங்கிருந்து அழைத்துச் சென்றனர். இந்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்த கர்நாடக பா.ஜ.க., கொலைகார முதலமைச்சர் சித்தராமையா, கொலைகார துணை முதலமைச்சர் டிகே சிவகுமார். நீங்கள் நினைத்திருந்தால் உங்கள் பிள்ளைகள், பேரக்குழந்தைகளுடன் ஒரு ஆடம்பர ஹோட்டலில் ஒரு கோப்பையுடன் போட்டோ எடுத்திருக்கலாம். ஆனா, விதான் சவுதா படியில் போட்டோ எடுக்க வேண்டும் என்று நீங்கள் பிடிவாதமாக இருந்தது, 11 குடும்பங்களை தினந்தோறும் கண்ணீரில் கை கழுவ வைத்துவிட்டது.
இவ்வாறு அவர்கள் பதிவிட்டுள்ளனர்.
பெரும் சோகம்:
ஆர்சிபி-யின் வெற்றி கொண்டாட்டத்தில் 11 பேர் உயிரிழந்த விவகாரத்தில், ஆர்சிபி நிர்வாகிகள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், காவல்துறை அதிகாரிகள் உள்பட பலர் மீதும் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுத்து அந்த மாநில முதலமைச்சர் சித்தராமையா நடவடிக்கை எடுத்துள்ளார். உயிரிழந்தவர்களுக்கு கர்நாடக அரசு இழப்பீடு வழங்கியுள்ளது.
மேலும், ஆர்சிபி நிர்வாகம் சார்பில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. கொண்டாட்ட நிகழ்வு துக்க நிகழ்வாக மாறியது ஐபிஎல் தொடருக்கே ஒரு கரும்புள்ளியாக அமைந்துள்ளது.




















