மேலும் அறிய

மயிலாடுதுறை மாணவர்களுக்கு அரசின் சூப்பர் சலுகைகள்! இலவச தங்குமிடம், உணவு, சீருடை மற்றும் பல!

மயிலாடுதுறை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினருக்கான அரசு விடுதிகளை மாணவ, மாணவியர்கள் பயன்படுத்திகொள்ள மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் பிரிவைச் சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியரின் கல்வி மற்றும் தங்குமிடத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், தமிழ்நாடு அரசால் மொத்தம் 20 விடுதிகள் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன. இந்த விடுதிகள் மூலம் மாணவர்கள் எவ்வித செலவின்றி தங்கிப் படிப்பதற்கான அரிய வாய்ப்பை மாவட்ட நிர்வாகம் வழங்குகிறது. இந்த வசதிகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் செயல்படும் விடுதிகளின் விபரம் 

 

  • பள்ளி மாணவர்களுக்கான விடுதிகள்: 6

 

  •  பள்ளி மாணவியர்களுக்கான விடுதிகள்: 7

 

  • கல்லூரி மாணவர்களுக்கான விடுதிகள்: 4

 

  •  கல்லூரி மாணவியர்களுக்கான விடுதிகள்: 3

 

இந்த விடுதிகள் மூலம் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் என இரு பிரிவினரும் பயனடைய முடியும்.

 

யார் விண்ணப்பிக்கலாம்?

இந்த அரசு விடுதிகளில் சேர சில தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

பள்ளி விடுதிகளில் சேர 4 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர் சேரத் தகுதியுடையவர்கள்.

கல்லூரி விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் படிப்புகளில் பயிலும் மாணவ, மாணவியர் இந்த விடுதிகளில் சேரலாம்.

வழங்கப்படும் சலுகைகள்

இந்த விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவ, மாணவியருக்கு தமிழ்நாடு அரசு பல்வேறு சலுகைகளை வழங்குகிறது. 

 

  • முழுமையான உணவு மற்றும் தங்குமிடம்: அனைத்து விடுதி மாணவ, மாணவியருக்கும் மூன்று வேளை சத்தான உணவுடன், பாதுகாப்பான மற்றும் சுகாதாரமான தங்குமிட வசதியும் அளிக்கப்படும். 

 

சீருடைகள்: 10 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு ஆண்டுதோறும் 4 இணை சீருடைகள் தைத்து வழங்கப்படும். 

கல்வி மேம்பாட்டு வசதிகள்

போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு உதவும் வகையில் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்களின் கல்வித் திறனை மேம்படுத்தும் பொருட்டு, NEET/JEE நுழைவுத்தேர்வுக்கான வினா வங்கி நூல்கள், சிறப்பு வழிகாட்டிகள் மற்றும் பிற வினா வங்கி நூல்கள் வழங்கப்படும்.

பயன்பாட்டுப் பொருட்கள்:

கல்லூரி விடுதிகளில் முதலாம் ஆண்டு தங்கிப் பயிலும் மாணவ, மாணவியருக்கு பாய்களும், பள்ளி விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ, மாணவியருக்கு ஆண்டுதோறும் பாய்களும் வழங்கப்படும். 

மேலும் பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகளில் தங்கிப் பயிலும் அனைத்து மாணவ, மாணவியர்களுக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை போர்வைகள் வழங்கப்படும். மலைப்பிரதேசங்களில் இயங்கும் விடுதிகளில் கம்பளி மேலாடைகள் கூடுதலாக வழங்கப்படும். 

விடுதிகளில் சேர்வதற்கான தகுதிகள்

 வருமான வரம்பு: பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.2,00,000/-க்கு மிகாமல் இருக்க வேண்டும். 

இதன் மூலம் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கிறது.

தொலைவு விதி: இருப்பிடத்தில் இருந்து பயிலும் கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்தபட்சம் 8 கிலோமீட்டருக்கு மேல் இருக்க வேண்டும். எனினும், இந்த தூர விதி மாணவியருக்குப் பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.

இது கிராமப்புற மற்றும் தொலைதூரப் பகுதிகளில் இருந்து வரும் மாணவிகளுக்கு சிறப்புச் சலுகை அளிக்கிறது.

விண்ணப்ப நடைமுறை மற்றும் காலக்கெடு

தகுதியுடைய மாணவ, மாணவியர் விண்ணப்பங்களை இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம்.

விண்ணப்பங்கள் பெறும் இடங்கள்: சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர்/காப்பாளினிகளிடமிருந்தோ அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்திலிருந்தோ விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு

பள்ளி விடுதிகள்: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர்/காப்பாளினியிடம் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 18 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

கல்லூரி விடுதிகள்: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர்/காப்பாளினியிடம் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் 2025 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 15 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

முக்கிய குறிப்பு: மாணவ, மாணவியர்கள் விண்ணப்பிக்கும் போது சாதி மற்றும் பெற்றோரது ஆண்டு வருமானம் குறித்த சான்றிதழ்கள் எதையும் அளிக்கத் தேவையில்லை. விடுதியில் சேரும் போது மட்டும் இச்சான்றிதழ்களை அளித்தால் போதுமானது. 

இலங்கைத் தமிழர்களின் குழந்தைகளுக்கான சிறப்பு ஒதுக்கீடு:

தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு விடுதியிலும் முகாம்வாழ் இலங்கைத் தமிழர்களின் குழந்தைகளுக்கென தனியே 5 இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

"போதைப்பாதை அழிவுப்பாதை; கல்விப்பாதையே உயர்வுப்பாதை" - நீடூர் இப்தார் விழாவில் மயிலாடுதுறை SP அட்வைஸ்..!
சென்னையில் குழந்தைகள் பாதுகாப்பு அலகு கணக்காளர் பணி! விண்ணப்பிக்க கடைசி தேதி எப்போது?
சென்னையில் குழந்தைகள் பாதுகாப்பு அலகு கணக்காளர் பணி! விண்ணப்பிக்க கடைசி தேதி எப்போது?
மருத்துவக் கனவு நனவாகும்; மாணவர்களுக்கு நற்செய்தி! 20 ஆயிரம் மருத்துவ இடங்கள்; 43 மருத்துவக் கல்லூரிக்கு ஒப்புதல்  
மருத்துவக் கனவு நனவாகும்; மாணவர்களுக்கு நற்செய்தி! 20 ஆயிரம் மருத்துவ இடங்கள்; 43 மருத்துவக் கல்லூரிக்கு ஒப்புதல்  
தேர்தல் வரப்போகுது! பகுதிநேர ஆசிரியர்கள் பணிநிரந்தரம் வாக்குறுதி என்னாச்சு? கேள்வி எழுப்பும் ஆசிரியர்கள்!
தேர்தல் வரப்போகுது! பகுதிநேர ஆசிரியர்கள் பணிநிரந்தரம் வாக்குறுதி என்னாச்சு? கேள்வி எழுப்பும் ஆசிரியர்கள்!
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijay in AIADMK alliance : ஓகே சொல்வாரா விஜய்.? தொகுதி பங்கீட்டை இறுதி செய்யாமல் காத்திருக்கும் இபிஎஸ்- திடீர் திருப்பம் ஏற்படுமா.?
ஓகே சொல்வாரா விஜய்.? தொகுதி பங்கீட்டை இறுதி செய்யாமல் காத்திருக்கும் இபிஎஸ்- திடீர் திருப்பம் ஏற்படுமா.?
TNEB Salary Hike : அடிதூள்.! மின்வாரிய ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்- உயர்ந்தது ஊதியம் எவ்வளவு தெரியுமா.?
அடிதூள்.! மின்வாரிய ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்- உயர்ந்தது ஊதியம் எவ்வளவு தெரியுமா.?
தொடரும் அதிர்ச்சி.. விஷம் வைத்து 100 நாய்கள் கொலை.. 3 மாதத்தில் மட்டும் 1300 நாய்கள்!
தொடரும் அதிர்ச்சி.. விஷம் வைத்து 100 நாய்கள் கொலை.. 3 மாதத்தில் மட்டும் 1300 நாய்கள்!
Chinmayi Sripaada: ”புரியவே புரியாதா?” - வைரமுத்துவை வாழ்த்திய ரஜினியை சாடிய சின்மயி!
Chinmayi Sripaada: ”புரியவே புரியாதா?” - வைரமுத்துவை வாழ்த்திய ரஜினியை சாடிய சின்மயி!
TVK Vijay: சரக்கு பாட்டிலால் விஜய் புறப்பட தாமதமா? உண்மையை உடைத்த சிடிஆர் நிர்மல்குமார்!
TVK Vijay: சரக்கு பாட்டிலால் விஜய் புறப்பட தாமதமா? உண்மையை உடைத்த சிடிஆர் நிர்மல்குமார்!
Kamal Haasan - Chinmayi: வைரமுத்துவை வாழ்த்திய கமல்.. கழுவி ஊற்றிய சின்மயி.. கடும் மோதல்!
Kamal Haasan - Chinmayi: வைரமுத்துவை வாழ்த்திய கமல்.. கழுவி ஊற்றிய சின்மயி.. கடும் மோதல்!
DMK Congress: அப்செட்டில் மக்கள்! காங்கிரசுக்கு இந்த 7 தொகுதிகள் மட்டும் கிடையாது..! எந்தெந்த தொகுதிகள்?
DMK Congress: அப்செட்டில் மக்கள்! காங்கிரசுக்கு இந்த 7 தொகுதிகள் மட்டும் கிடையாது..! எந்தெந்த தொகுதிகள்?
Electric Stove Subsidy : மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை... மின்சார அடுப்பு வாங்க 25% மானியம் - தமிழக அரசு அதிரடி
மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை... மின்சார அடுப்பு வாங்க 25% மானியம் - தமிழக அரசு அதிரடி
Embed widget