மேலும் அறிய

Akanda 2 Teaser: ஃபார்முக்கு வந்த பாலய்யா... Unbelievable சண்டைகளுடன் அகண்டா 2 டீசர் ரிலீஸ்

தெலுங்கு நடிகர் பாலய்யாவின் அகண்டா 2 படத்தின் டீசர் ரிலீசாகியுள்ளது. இந்த டீசரில் பாலய்யாவின் அசாத்திய சண்டைக்காட்சிகள் இடம்பிடித்துள்ளது.

தெலுங்கு  திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் பாலகிருஷ்ணா. பாலய்யா என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் இவர் இவரது சண்டைக்காட்சிகள் காரணமாக இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமானவராக உள்ளார்.

அகண்டா 2 டீசர் ரிலீஸ்:

நம்ப முடியாத சண்டைக்காட்சிகள் இவர் படத்தில் இடம்பெறுவது காரணமாகவே இவர் மிகப்பெரிய ட்ரோல் மெட்டிரியலாகவும், மீம் டெம்ப்ளேட்டாகவும் பல ஆண்டுகளாக இருக்கிறார். மேலும், இவரது நடிப்பும், நடனமும் ரசிகர்கள் பலராலும் விமர்சிக்கப்பட்டும் வருகிறது. ஆனால், அதை தனது படங்களில் தொடர்ந்து பயன்படுத்தி படத்திற்கு விளம்பரத்தை படக்குழு பயன்படுத்திக் கொள்கிறது. 

இந்த நிலையில், இவரது நடிப்பில் உருவாகி வரும் அகண்டா 2  படத்தின் டீசர் இன்று ரிலீசாகியது. அகண்டா பாகம் 1ல் சாமியாராக ஒரு கதாபாத்திரத்தில் நடித்த பாலய்யா அதே கதாபாத்திரத்தி்ல் இந்த படத்திலும் நடித்துள்ளார். படத்தின் டீசரில் இமயமலையில் வில்லன்களின் அடியாட்களை சுமார் 10 பேரை அடித்து துவம்சம் செய்து தனது சூலாயுதத்தின் உதவியால் தூக்கிக் கொண்டு பஞ்ச் டயலாக் பேசி வருவது  போல காட்சி இடம்பெற்றுள்ளது. மேலும், சூலாயுதத்தை கழுத்தில் சுற்றிக்கொண்டே எதிரிகளை சூறையாடுகிறார் பாலய்யா. 

விரைவில் ரிலீஸ்:

சற்று முன் வெளியாகிய இந்த டீசர் தெலுங்கு மட்டுமின்றி தமிழ் மற்றும் இந்தியிலும் வெளியாகியுள்ளது. இந்த படத்தை தெலுங்கின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான போயப்பட்டி சீனு இயக்கியுள்ளார். இந்த படத்தை ராம் அச்சந்தா, கோபி அச்சந்தா 14 ரீல்ஸ் சார்பில் தயாரித்துள்ளனர். இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். தம்மிராஜு எடிட்டிங் செய்துள்ளார். 

இந்த படத்தில் பாலய்யாவுடன் எஸ்.ஜே.சூர்யா முதன்முறையாக இணைந்து நடித்துள்ளார். காவ்யா தாபர், ஜெகபதி பாபு, பிரக்யா ஜெய்ஸ்வால், அஜய் புர்கார், அக்ஷரா நுன்னா ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படம் இன்னும் ஓரிரு மாதங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2021ம் ஆண்டு அகண்டா முதல் பாகம் வெளியானது. சுமார் 70 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படத்தில் பாலய்யா 2 வேடத்தில் நடித்திருந்தார். இந்த படம் சுமார் 150 கோடி வரை வசூல் செய்தது. குடும்ப பின்னணி கதையில் உருவான படம் வழக்கமான பாலய்யா ஆக்ஷன், பஞ்ச் டயலாக்கை மையமாக வைத்து உருவாகியிருந்தது. 

ஃபார்முக்கு வந்த பாலய்யா:

பாலய்யா கடைசியாக நடித்த பகவந்த் கேசரி, டக்கு மகாராஜ் படங்கள் காரணமாக அவர் கதைத்தேர்வில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மீண்டும் அவரது ஃபார்முலா படங்களுக்கு திரும்பியுள்ளார். தற்போதே அகண்டா டீசர் இணையத்தில் வைரலாகி வருவதுடன், மீம்களும் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. 

தலைப்பு செய்திகள்

"முடிந்தால் இதைச் செய்து காட்டுங்கள்!"... சவால்விட்ட சிவாஜி... எம்ஜிஆர் கொடுத்த பதில்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
Sasikumar:
Sasikumar: "விஜய் முதலமைச்சரானதில் ஒரே ஒரு வருத்தம்தான்.." இயக்குனர் சசிகுமார் சொன்னது ஏன்?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai letter to Vijay : 500 மீட்டர் சுற்றளவில் 129 டாஸ்மாக் கடைகள்.! CM விஜய்க்கு ஆதாரத்தோடு லிஸ்ட்- அண்ணாமலை அதிரடி
500 மீட்டர் சுற்றளவில் 129 டாஸ்மாக் கடைகள்.! சிஎம் விஜய்க்கு ஆதாரத்தோடு லிஸ்ட்- அண்ணாமலை அதிரடி
கர்நாடகம் போனால் காவிரியை கையோடு கொண்டுவந்திடலாம் என நினைச்சுட்டாரோ.! சிஎம் விஜய்யை விளாசிய ஸ்டாலின்
கர்நாடகம் போனால் காவிரியை கையோடு கொண்டுவந்திடலாம் என நினைச்சுட்டாரோ.! சிஎம் விஜய்யை விளாசிய ஸ்டாலின்
ரூ. 11 கோடியில் சிஎம் விஜய்க்கான புதிய அலுவலகம்.! என்னென்ன வசதிகள் .?
ரூ. 11 கோடியில் சிஎம் விஜய்க்கான புதிய அலுவலகம்.! என்னென்ன வசதிகள் .?
Narendra Modi: மன்னிச்சு விடுறேன்.. கெட்ட வார்த்தை பேசிய போராட்டக்காரர்கள்.. வீடியோ வெளியிட்ட மோடி!
Narendra Modi: மன்னிச்சு விடுறேன்.. கெட்ட வார்த்தை பேசிய போராட்டக்காரர்கள்.. வீடியோ வெளியிட்ட மோடி!
Rahul Gandhi: தமிழ்நாடு வரும் ராகுல்காந்தி.. விஜயை சந்திக்காதது ஏன்? .. இதுதான் பிளான்!
Rahul Gandhi: தமிழ்நாடு வரும் ராகுல்காந்தி.. விஜயை சந்திக்காதது ஏன்? .. இதுதான் பிளான்!
Thoppu venkatachalam : மாஜி அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் பதவியை பறித்த ஸ்டாலின்.! இது தான் காரணமா.?
மாஜி அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் பதவியை பறித்த ஸ்டாலின்.! இது தான் காரணமா.?
ஸ்கார்பியோ கார், கறி விருந்து, எம்எல்ஏ சீட்டுக்கு 10 கோடி வசூல் ? விஜயபாஸ்கரை ரவுண்டு கட்டும் அதிமுக
ஸ்கார்பியோ கார், கறி விருந்து, எம்எல்ஏ சீட்டுக்கு 10 கோடி வசூல் ? விஜயபாஸ்கரை ரவுண்டு கட்டும் அதிமுக
TASMAC shops : 717 டாஸ்மாக் கடைகளுக்கு பதிலாக FL-2 மதுபான கிளப் தொடங்க அனுமதி.? விஜய் அரசை வெளுத்தெடுக்கும் நயினார்
717 டாஸ்மாக் கடைகளுக்கு பதிலாக FL-2 மதுபான கிளப்.? விஜய் அரசை வெளுத்தெடுக்கும் நயினார்
Embed widget