மேலும் அறிய

Seeman: ”இல்லை, இல்லை” அப்ப எதுக்கு ரூ.45 கோடி? திறந்தா மட்டும் போதுமா? CM ஸ்டாலினை ரவுண்டு கட்டிய சீமான்

Seeman Slams CM Stalin: முதலமைச்சர் மோசமான நிர்வாகத்தை கொண்டிருப்பதாக, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டியுள்ளார்.

Seeman Slams CM Stalin: அரசு மருத்துவமனைகளில் தொடரும் பணியாளர்கள் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்க, தமிழ்நாடு அரசை சீமான் வலியுறுத்தியுள்ளார்.

செயல்படாத திருத்தணி அரசு மருத்துவமனை:

கடந்த 2020ஆம் ஆண்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையைத் தரம் உயர்த்தி, மாவட்ட மருத்துவக் கல்லூரியாக மாற்றப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்தது. அதே ஆண்டு சட்டப்பேரவையில் திருத்தணி அரசு பொது மருத்துவமனையைத் தரம் உயர்த்த 45 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி தீர்மானமும் நிறைவேற்றி, ஒப்பந்தமும் விடப்பட்டது. இதற்கிடையே தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக அரசு அமைந்த பிறகு கடந்த ஏப்ரல் மாதம் காணொளிக் காட்சி வாயிலாக, முதலமைச்சர் ஸ்டாலினால் தரம் உயர்த்தப்பட்ட திருத்தணி மருத்துமனை திறந்து வைக்கப்பட்டது. ஆனால், அதன்பிறகும் மருத்துவ உபகரணங்கள் மற்றும் மின்வசதி இல்லாத காரணத்தால் இன்னும் மருத்துவமனை பயன்பாட்டிற்கு வரவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில், மக்கள் பயன்பாட்டுக்கு இல்லாத மருத்துவமனை யாருக்காக? எதற்காக? தரம் உயர்த்த தமிழ்நாடு அரசு வழங்குவதாக அறிவித்த 45 கோடி என்னானது? என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

”உயிரோடு விளையாடும் அரசு”

சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தரம் உயர்த்தப்பட்ட மாவட்ட மருத்துவமனைகள், மருத்துவக்கல்லூரிகள், புதிதாகத் தொடங்கப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதிய உட்கட்டமைப்பு வசதிகளை திமுக அரசு ஏற்படுத்தவில்லை என்பது நிர்வாகச் சீர்கேட்டின் உச்சமாகும். வெற்று விளம்பரத்திற்குத் தரம் உயர்த்துவதாக வெற்று அறிவிப்புகளை வெளியிட்டுவிட்டு, மருத்துவமனைகளுக்குத் தேவையான அடிப்படை கட்டமைப்புகளைக் கூடத் திமுக அரசு நிறைவு செய்யாதிருப்பது கோடிக்கணக்கான ஏழை எளிய மக்களின் உயிரோடும், உடல் நலனோடும் விளையாடும் கொடுஞ்செயல்” என சாடியுள்ளார்.

”ஜிப்மருக்கு செல்லும் அவலம்”

விழுப்புரம் மாவட்டத் தலைமை அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரியாகத் தரம் உயர்த்தப்பட்ட நிலையில் மருத்துவ உட்கட்டமைப்பு வசதியோ, மருத்துவர்கள் நியமனமோ செய்யப்படாத காரணத்தால் பயிற்சி மருத்துவர்களைக் கொண்டு இயங்கி வருவது அதிர்ச்சியும், வேதனையும் அளிப்பதாக சீமான் தெரிவித்துள்ளார். அதன்காரணமாக விழுப்புரம் சுற்றுவட்டார மக்கள் பாண்டிச்சேரி மாநிலத்திலுள்ள ஜிப்மர் மருத்துவமனைக்குப் போகச்சொல்லி அலைகழிக்கப்படுவதும், இதுகுறித்துப் பலமுறை பொதுமக்கள் புகாரளித்தும் திமுக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதுதான் திராவிட மாடல் அரசின் சாதனை என கடுமையாக விமர்சித்துள்ளார்.

பணியாளர்கள் பற்றாக்குறை:

தமிழ்நாட்டில் ஏற்கனவே இயங்கி வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் முதல் மருத்துவக் கல்லூரிகள் வரை போதிய அளவில் மருத்துவர்கள் இல்லை, செவிலியர்கள் இல்லை, மருந்துகள் இல்லை, மருத்துவ உபகரணங்கள் இல்லை, படுக்கை வசதி இல்லை என்பதால் தமிழக மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகிவரும் நிலையில், தரம் உயர்த்தப்பட்ட மருத்துமனைகளும் அதைவிட மிக மோசமான நிலையிலிருப்பது ஏற்க முடியாத பெருங்கொடுமை என சீமான் எச்சரித்துள்ளார். இத்தனை மோசமான நிர்வாகத்தை வைத்துக்கொண்டு 'இந்தியா வியக்கும் திராவிட மாடல், உலகம் வியக்கும் நான்காண்டு சாதனை' என்று திமுக அரசு பேசுவது வெட்கக்கேடானது என விமர்சித்துள்ளார்.

தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை

தமிழ்நாடு அரசு, தரம் உயர்த்தப்பட்ட திருத்தணி அரசு மருத்துவமனையில் அனைத்து அடிப்படை கட்டமைப்பு வசதிகளையும் ஏற்படுத்தித் தந்து மக்கள் பயன்பாட்டிற்காக விரைந்து இயங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென சீமான் உள்ளிட்ட தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும், விழுப்புரம் மருத்துவக் கல்லூரி உட்பட தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் முதல் மருத்துவக்கல்லூரிகள் வரை மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப்பணியாளர்கள் பற்றாக்குறையைப்போக்கி, மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட தேவைகளை நிறைவேற்றி தமிழ்நாட்டு மக்களின் உயிர்காக்க உடனடி நடவடிக்கையை தமிழ்நாடு அரசு எடுக்கவேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பாப்பாக உள்ளது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Weather Update: கனமழை தொடரும் - சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: கனமழை தொடரும் - சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: மிக கனமழை பொளக்கும், 18 மணி நேரம், வடமாவட்டங்களுக்கு அலெர்ட் - வெதர்மேன் வானிலை அப்டேட்
TN Weather Update: மிக கனமழை பொளக்கும், 18 மணி நேரம், வடமாவட்டங்களுக்கு அலெர்ட் - வெதர்மேன் வானிலை அப்டேட்
TN Weather Update: சில்லுனு காத்து.. ஜன்னலை சாத்து.. மழையுடன் வாட்டி வதைக்கும் குளிர் - நடுங்கும் சென்னை
TN Weather Update: சில்லுனு காத்து.. ஜன்னலை சாத்து.. மழையுடன் வாட்டி வதைக்கும் குளிர் - நடுங்கும் சென்னை
Car Sale: டாப் கியரில் ஹுண்டாய், ஷாக்கான டாடா, மஹிந்த்ரா - சைலண்டா சம்பவம் செய்யும் கியா - கார் விற்பனை
Car Sale: டாப் கியரில் ஹுண்டாய், ஷாக்கான டாடா, மஹிந்த்ரா - சைலண்டா சம்பவம் செய்யும் கியா - கார் விற்பனை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah
”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Update: கனமழை தொடரும் - சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: கனமழை தொடரும் - சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: மிக கனமழை பொளக்கும், 18 மணி நேரம், வடமாவட்டங்களுக்கு அலெர்ட் - வெதர்மேன் வானிலை அப்டேட்
TN Weather Update: மிக கனமழை பொளக்கும், 18 மணி நேரம், வடமாவட்டங்களுக்கு அலெர்ட் - வெதர்மேன் வானிலை அப்டேட்
TN Weather Update: சில்லுனு காத்து.. ஜன்னலை சாத்து.. மழையுடன் வாட்டி வதைக்கும் குளிர் - நடுங்கும் சென்னை
TN Weather Update: சில்லுனு காத்து.. ஜன்னலை சாத்து.. மழையுடன் வாட்டி வதைக்கும் குளிர் - நடுங்கும் சென்னை
Car Sale: டாப் கியரில் ஹுண்டாய், ஷாக்கான டாடா, மஹிந்த்ரா - சைலண்டா சம்பவம் செய்யும் கியா - கார் விற்பனை
Car Sale: டாப் கியரில் ஹுண்டாய், ஷாக்கான டாடா, மஹிந்த்ரா - சைலண்டா சம்பவம் செய்யும் கியா - கார் விற்பனை
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
TN Rain School Holiday:  மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில்  பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
TN Rain School Holiday: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில் பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
Red Alert: சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
Embed widget