வைரமுத்து பற்றி பேசினால் கைது செய்வீங்களா ? சின்மயிக்கு நடந்தது அசிங்கம்..நேரம் பார்த்து பழிவாங்கிய கங்கை அமரன்
வைரமுத்து ஒரு நல்ல கவிஞர் என்பதை எல்லாரும் ஏற்றுக் கொள்கிறோம் ஆனால் அவர் நிச்சயமாக ஒரு நல்ல் மனிதர் கிடையாது என கங்கை அமரன் பேசியுள்ளார்

மீண்டும் வெளிச்சத்திற்கு வரும் வைரமுத்து பாலியல் குற்றச்சாட்டு
தக் லைஃப் படத்தில் இடம்பெற்ற முத்த மழை பாடல் மூலம் மீண்டும் வெளிச்சத்திற்கு வந்துள்ளார் பாடகி சின்மயி. தமிழ் சினிமாவின் முன்னணி பின்னணி பாடகியாக திகழ்ந்து வந்தவர் சின்மயி. பாடலாசிரியர் வைரமுத்துவின் மீது கடந்த 2018 ஆம் ஆண்டு பாலியல் குற்றச்சாட்டு வைத்தார் சின்மயி. இதனைத் தொடர்ந்து சினிமாவில் உள்ள டப்பிங் , பின்னணி பாடகர்கள் யூனியன் உள்ளிட்ட அனைத்து யூனியன்களில் பணியாற்ற சின்மயிக்கு தடை விதிக்கப்பட்டது. சமீபத்தில் தக் லைஃப் இசை வெளியீட்டு விழாவில் சின்மயி முத்த மழை பாடியது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இவ்வளவு திறமையான பாடகிக்கு எப்படி ரெட் கார்ட் கொடுக்கலாம் என பலர் கேள்வி எழுப்பினார்கள். இதோடு பாடலாசிரியர் வைரமுத்துவின் மீதான பாலியல் குற்றச்சாட்டு மீண்டும் பேசுபொருளாகியுள்ளது. வைரமுத்து குறித்து இசையமைப்பாளர் கங்கை அமரன் நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
வைரமுத்துவை வெளுத்து வாங்கிய கங்கை அமரன்
" சின்மயிக்கு ஒரு ரசிகர்கள் சந்திப்பு நடத்துகிறார்கள் என்று சொன்னதும் நிச்சயமாக நான் இந்த நிகழ்வில் கலனதுகொள்வேன் என்று சொன்னே. ஏனால் ஒரு பின்னணி பாடகியாக சின்மயி பட்ட கஷ்டம் , அதன் பிறகு நடந்த அசிங்கம். அந்த அசிங்கத்தை வெளியே சொன்னதும் அவர் உத்தமன் மாதிரியும் இவர் குற்றவாளியாக நின்ற அசிங்கமான சூழலில் நாம் நின்றோம். அப்போது அவருக்கு யாரும் உதவி செய்யவில்லை. அந்நியாத்தை கேட்க ஒரு பெண் நிற்கிறார் அவருக்கு ஆதரவு கொடுக்க நான் ரெடி. இப்படி ஒரு குற்றச்சாட்டை வைத்தும் அதன் குறித்து நடவடிக்கை எடுக்காத கட்சிகளை நான் நிச்சயமாக எதிர்க்கிறேன். எவ்வளவு காலதாமதம் ஆனாலும் இது எடுக்க வேண்டிய ஒரு முடிவு. வைரமுத்து என்னுடைய நண்பர் என்பதால் அவர் செய்யும் தப்பை கேட்காமல் விடுவோமா? அந்நியாயம் நடந்தா நடந்தது தான்.
வைரமுத்து ஒரு தங்கமான ஆள். அப்படிபட்ட ஆள் மேல நீ குத்தம் சொல்லலாம். 'அந்தி மழை பொழிகிறது ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது ' என்று அழகாக எழுதியவர். அவர் எவ்வளவு உத்தமமான ஆள். அவர் ஒரு அதிசயப் பிறவி. அவரைப் பற்றி அவரே சொல்லிக் கொள்வார். வைரமுத்து ஒரு நல்ல கவிஞன் என்று ஒத்துக்கொள்கிறோம். ஆனால் நல்ல மனிதன் இல்லை. வைரமுத்து பற்றி பேசினால் என்னை கைது செய்துவிடுவார்களா. இந்த நிகழ்ச்சி முடித்துவிட்டு நான் முதல்வர் வீட்டிற்கு தான் போகப் போகிறேன்.





















