French Open 2025: 43 வருட சாதனை முறியடிப்பு... 5.29 நிமிடங்கள் நீடித்த இறுதிப்போட்டி.. சாம்பியனான கார்லோஸ் அல்கராஸ்
French Open 2025: ரோலண்ட் கரோஸில் நடந்த ஃபிரெஞ்ச் ஓபன் 2025 ஆண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனான கார்லோஸ் அல்கராஸ், ஜானிக் சின்னரை எதிர்க்கொண்டார்.

ஜானிக் சின்னர் மற்றும் கார்லோஸ் அல்கராஸ் இடையே நடந்த இறுதிப் போட்டி ஃபிரெஞ்ச் ஓபன் வரலாற்றில் மிக நீண்ட நேரம் நடந்த இறுதிப்போட்டியாக மாறியது.
ஃபிரெஞ்ச் ஓபன் இறுதிப்போட்டி:
ரோலண்ட் கரோஸில் நடந்த பிரஞ்சு ஓபன் 2025 ஆண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனான கார்லோஸ் அல்கராஸ், ஜானிக் சின்னரை எதிர்க்கொண்டார். முதல் 2 செட்களை சின்னர் 6-4 7-6 என்ற கணக்கில் வென்றார். முதல் இரண்டு செட்டில் பின்தங்கிய கார்லோஸ் அல்கராஸ் மூன்றாவது செட்டில் இருந்து தனது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
மூன்றாவது செட்டை (6-4) வென்றார், பின்னர் நான்காவது செட்டையும் (7-6) கைப்பற்றினார். ஐந்தாவது செட்டை டை-பிரேக்கருக்கு தள்ளினார், அதில் ஸ்பெயின் வீரர் தனது சிறப்பான ஆட்டத்தை காட்டினார். டைபிரேக்கரில் 10-2 என வென்றார், மேலும் இறுதி செட்டையும் 7-6 என கைப்பற்றினார்.
மிக நேரம் நடந்த இறுதிப்போட்டி:
ஐந்து மணி நேரம் 29 நிமிடங்கள் நீடித்த இந்த போட்டி பிரேஞ்சு வரலாற்றில் நடந்த மிக நீண்ட இறுதிப் போட்டியாகவும் இது அமைந்தது. இதற்கு முன்னர் 1982 இல் மேட்ஸ் விலாண்டர் கில்லர்மோ விலாஸ் இடையே நடந்த போட்டி 4 மணி 47 நிமிடங்கள் நடந்தது.
Record-breaking. Historical. Legendary.
— Roland-Garros (@rolandgarros) June 8, 2025
We can't find the words anymore for our stat of the day by @Infosys 📊 #RolandGarros pic.twitter.com/ipvTXk18cu
சின்னரை பாராட்டிய அல்கராஸ்;
போட்டிக்குப் பிறகு பேசிய அல்கராஸ், சின்னரைப் பாராட்டி, "நீங்கள் ஒரு முறை அல்ல, பல முறை சாம்பியனாகப் போகிறீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். ஒவ்வொரு போட்டியிலும் உங்களுடன் மைதானத்தைப் பகிர்ந்து கொள்வது ஒரு பாக்கியம்" என்றார்.
"இந்தப் போட்டியிலும், மற்ற போட்டிகளிலும் உங்களுடன் சேர்ந்து வரலாறு படைக்க முடிந்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்; நீங்கள் இளம் குழந்தைகளுக்கும் எனக்கும் ஒரு பெரிய உத்வேகம்." என்றார்
CARLOS II, PRINCE OF CLAY 👑#RolandGarros pic.twitter.com/0URmCZ0MMp
— Roland-Garros (@rolandgarros) June 8, 2025
ரசிகர்களுக்கு நன்றி:
தனது வெற்றியில் முக்கிய பங்கு வகித்த ரசிகர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்தார். "அப்படியானால் பாரிஸ், நண்பர்களே, நான் சொல்வது என்னவென்றால், முதல் பயிற்சியிலிருந்து, முதல் சுற்றில் இருந்து நீங்கள் எனக்கு மிகவும் முக்கியமான ஆதரவாக இருந்தீர்கள்," என்று அவர் கூறினார்.
"நீ நம்பமுடியாதவனா இருந்தாய். நீ எனக்கு பைத்தியக்காரத்தனமா இருந்தாய். அதாவது, இன்றைய போட்டிக்கு, வாரம் முழுவதும் நீங்கள் அளித்த பெரும் ஆதரவிற்கு, என்னால் போதுமான நன்றி சொல்ல முடியாது, உங்களுக்குத் தெரியும்.
"இன்றைய போட்டிக்கு, நீங்கள் உண்மையிலேயே, மிகவும் முக்கியமானவர். நீங்கள் என் இதயத்தில் இருக்கிறீர்கள், எப்போதும் என் இதயத்தில் இருப்பீர்கள். எனவே நன்றி. மிக்க நன்றி, பாரிஸ். அடுத்த வருடம் சந்திப்போம்," என்று அவர் மேலும் கூறினார்.






















