மேலும் அறிய

MK Alagiri vs Moorthy : ’’தம்பி எனக்காக இதை செய் !’’ஸ்டாலினிடம் கேட்ட அழகிரி கலக்கத்தில் மூர்த்தி

கடந்த வாரம் மதுரையில் நடந்த ஸ்டாலின் அழகிரி சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், அந்த சந்திப்பின்போது ஸ்டாலினிடம் அழகிரி வைத்த கோரிக்கை ஒன்று அமைச்சர் மூர்த்தியை அப்செட் அடைய செய்துள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கலைஞரின் மகன்களான ஸ்டாலின் அழகிரி இருவருக்கும் அரசியல் ரீதியில் மனக்கசப்பு ஏற்பட்டு இருதுருவங்களாய் வாழ்ந்து வருகின்றனர். கலைஞர் கருணாநிதி காலத்தில் பவரில் இருந்த அவரது மூத்த மகன் அழகிரி, அப்போது கட்சிக்கு எதிராக செயல்படுவதாக குற்றம்சாட்டப்பட்டு கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர் அவரது ஆதரவாளர்களும் அதிரடியாக கட்சியில் இருந்து விரட்டப்பட்டனர். அதுவரை மதுரையை தனது கண்ட்ரோலில் வைத்திருந்த அழகிரியின் ப்யூஸ் அப்போது பிடுங்கப்பட்டது. பின்னர் பங்காளி சண்டை இல்லாமல் கட்சியை ஒன் மேன் ஆர்மியாக கைப்பற்றினார் ஸ்டாலின். மதுரையும் அழகிரி கைவிட்டு மூர்த்தி கண்ட்ரோலுக்கு வந்தது.

எனினும் அழகிரி எப்படியாவது திமுகவுக்குள் வர வேண்டும் என, அவ்வப்போது ஸ்டாலினுக்கு எதிராக கருத்து தெரிவிப்பது, கருணாநிதி சமாதியில் சபதம் விட்டது என தொடர்ந்து அதிர்வலையை ஏற்படுத்திக்கொண்டே இருந்தார். ஆனால் அனைத்தும் வீண் முயற்சி ஆக, தனது அரசியல் எதிர்காலம் முடிந்தாலும் தனது மகனை எப்படியாவது திமுகவில் பெரிய ஆளாக வளர்த்துவிட வேண்டும் என ஆசை அழகிரிக்கு உண்டு. ஆனால் எதிர்பாராத வண்ணம் அவரது மகன் தயாநிதி அழகிரி திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு படுத்த படுக்கையானார். 

என்னதான் அண்ணன் தம்பி பகை இருந்தாலும் அண்ணன் மகனுக்கு ஒன்னு என்றவுடன் பதறி அடித்து மருத்துவமனைக்கு ஓடினார் ஸ்டாலின். இதை பார்த்த அழகிரிக்கு இத்தனை ஆண்டு கோபமும் பறந்துபோனது. இதனையடுத்து இரண்டு குடும்பமும் கொஞ்சம் கொஞ்சமாக நெருக்கமாகினர். 

வேலூர் சென்று தயாநிதியை பார்ப்பது, மதுரை வீட்டிற்கு சென்று பார்ப்பது என ஸ்டாலினும் உதயநிதியும் மாறி மாறி நலம் விசாரித்து வருகின்றனர். என்னதான் பாசம் இருந்தாலும், பவர் என்று வருகையில் ஸ்டாலின் தனக்கு இடம் கொடுக்க மாட்டார் என்பதை உணர்ந்த அழகிரி ஸ்டாலினம் தனக்காக இல்லாமல் தன்னை சார்ந்தவர்களுக்காக கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.

கடந்த வாரம் மதுரை சென்ற முதல்வர் ஸ்டாலின் அண்ணன் அழகிரியை வீட்டிற்கே சென்று சந்தித்தார். சுமார் 1 மணி நேரமாக நடந்த இந்த சந்திப்பின் போது, அழகிரி ஸ்டாலினிடம், தம்பி எனது காலம் முடிந்துவிட்டது. ஆனால் என்னை நம்பி என் பின்னால் வந்தவர்கள் இன்று எதிர்காலமின்றி இருக்கிறார்கள். அவர்களுக்கு குடும்பம் இருக்கு..அவர்களை கட்சியில் சேர்த்துக்கோ..எதிர்காலம் கொடு..அண்ணனுக்காக இதை மட்டும் செய்ப்பா என அன்பு கோரிக்கை வைத்துள்ளார் அழகிரி. 

இத்தனை வருடங்களுக்கு பிறகு அண்ணன் தன்னிடம் ஒரு கோரிக்கை வைக்க, உடனடியாக பதில் சொல்ல முடியாமல் நின்ற ஸ்டாலின், சரி நான் பாத்துக்கிறேன் அண்ணா என்பது போன்ற பதிலளித்ததாக கூறப்படுகிறது. ஸ்டாலினின் அந்த சின்ன தயக்கத்திற்கு பின்னால் அமைச்சர் மூர்த்தி தான் ஒழிந்து இருக்கிறார். காரணம் அழகிரிக்கு பிறகு மதுரையை தனது கண்ட்ரோலில் எடுத்தார் மூர்த்தி. தற்போது தனது ஆதரவாளர்களை பவருக்கு கொண்டு வந்து மீண்டும் மதுரையை தன்வசப்படுத்திவிடுவாரோ என்ற அச்சம் மூர்த்திக்கு எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. 

மேலும் அழகிரி கட்சியில் சேர்த்துக்கொள்ள ரெகமண்ட் செய்த ஆதரவாளர்கள் முன்னாள் துணை மேயர் பி.எம்.மன்னன், கோபி, உதயகுமார் ஆகியோர்
சமீபத்தில் ஸ்டாலினை சந்தித்து தங்களை கட்சியில் இணைத்து கொள்ள மனு அளித்துள்ளனர். எனவே வரப்போவதை முன்பே கணித்த மூர்த்தி ஒருவேளை அழகிரி ஸ்டாலினம் இதைப்பற்றி பேசினால் எங்கு ஸ்டாலின் தன்பக்கம் திரும்பி என்ன பண்ணலாம் மூர்த்தி என கேட்டுவிடுவாரோ என  ஸ்டாலின் அழகிரி வீட்டுக்கும் செல்லும்போது கூட மூர்த்தி உடன்போகாமல் தவிர்த்துவிட்டதாக கூறப்படுகிறது.

அரசியல் வீடியோக்கள்

Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

PIT BULL , ROTTWEILLER DOG: பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
TN SIR Voter List: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
TN SIR Voter List: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
Country Chicken : ‘நாட்டுக்கோழியை கண்டுபிடித்து வாங்குவது எப்படி?’ சென்னை மக்களுக்கு ஒரு அடடே அப்டேட்..!
‘நாட்டுக்கோழியை கண்டுபிடித்து வாங்குவது எப்படி?’ சென்னை மக்களுக்கு ஒரு அடடே அப்டேட்..!
BS6 Vs BS5 Vs BS4: கார்களுக்கு விதிக்கப்பட்ட தடை.. BS6 Vs BS5 Vs BS4 என்ன வித்தியாசம்? ஏன் அவசியம்?
BS6 Vs BS5 Vs BS4: கார்களுக்கு விதிக்கப்பட்ட தடை.. BS6 Vs BS5 Vs BS4 என்ன வித்தியாசம்? ஏன் அவசியம்?
ABP Premium

வீடியோ

Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்
TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PIT BULL , ROTTWEILLER DOG: பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
TN SIR Voter List: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
TN SIR Voter List: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
Country Chicken : ‘நாட்டுக்கோழியை கண்டுபிடித்து வாங்குவது எப்படி?’ சென்னை மக்களுக்கு ஒரு அடடே அப்டேட்..!
‘நாட்டுக்கோழியை கண்டுபிடித்து வாங்குவது எப்படி?’ சென்னை மக்களுக்கு ஒரு அடடே அப்டேட்..!
BS6 Vs BS5 Vs BS4: கார்களுக்கு விதிக்கப்பட்ட தடை.. BS6 Vs BS5 Vs BS4 என்ன வித்தியாசம்? ஏன் அவசியம்?
BS6 Vs BS5 Vs BS4: கார்களுக்கு விதிக்கப்பட்ட தடை.. BS6 Vs BS5 Vs BS4 என்ன வித்தியாசம்? ஏன் அவசியம்?
Robotics Labs: அரசுப் பள்ளிகளில் ரோபோட்டிக்ஸ் புரட்சி; மாணவர்கள் எதிர்காலத்தை வடிவமைக்கும் புதிய லேப்கள் தொடக்கம்!
Robotics Labs: அரசுப் பள்ளிகளில் ரோபோட்டிக்ஸ் புரட்சி; மாணவர்கள் எதிர்காலத்தை வடிவமைக்கும் புதிய லேப்கள் தொடக்கம்!
பாகிஸ்தானிற்கு வார்னிங்.. 24 ஆயிரம் பிச்சைக்காரர்களை அனுப்பிய சவுதி அரேபியா - காரணம் என்ன?
பாகிஸ்தானிற்கு வார்னிங்.. 24 ஆயிரம் பிச்சைக்காரர்களை அனுப்பிய சவுதி அரேபியா - காரணம் என்ன?
Car Price Hike: ரெண்டே வாரம்.. கிடுகிடுவென உயரப்போகும் விலை, எந்தெந்த ப்ராண்ட், கார்களுக்கு தெரியுமா?
Car Price Hike: ரெண்டே வாரம்.. கிடுகிடுவென உயரப்போகும் விலை, எந்தெந்த ப்ராண்ட், கார்களுக்கு தெரியுமா?
தமிழ் கலை ஆசிரியர்கள் பணி: ரூ.1.25 லட்சம் ஊதியம்- என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
தமிழ் கலை ஆசிரியர்கள் பணி: ரூ.1.25 லட்சம் ஊதியம்- என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
Embed widget