Guts Movie Review : ஸ்ருதி நாராயணன் நடித்துள்ள 'கட்ஸ்' பட விமர்சனம்
Guts Movie Review : சிறகடிக்க ஆசை தொடர் மூலம் பரவலாக கவனமீர்த்த நடிகை ஸ்ருதி நாராயணன் நடித்துள்ள 'கட்ஸ்' படத்தின் முழு விமர்சனம் இதோ

ஸ்ருதி நாராயணன் நடித்துள்ள 'கட்ஸ்'
அறிமுக இயக்குநர் ரங்கராஜ் இயக்கி நடித்துள்ள படம் கட்ஸ். ரங்கராஜ், நான்சி, டெல்லி கணேஷ், ஸ்ருதி நாராயணன், சாய் தீனா, பிர்லா போஸ், ஸ்ரீ லேகா, அறந்தாங்கி நிஷா, பிரவீன் மஞ்சரேக்கர் மற்றும் பலர் இந்த படத்தில் நடித்துள்ளார்கள். ஜோஸ் ஃபிராங்க்லின் படத்திற்கு இசையமைத்துள்ளார். கட்ஸ் படத்தின் முழு விமர்சனத்தையும் இங்கே பார்க்கலாம்
'கட்ஸ் ' படத்தின் கதை
கர்ப்பமாக இருக்கும் தனது மனைவியை (ஸ்ருதி நாராயணன்) மருத்துவரிடம் அழைத்துச் செல்லும்போது ரவுடி கும்பலால் குத்தப்படுகிறார் ஒருவர் (ரங்கராஜ்). தனது மனைவியை மருத்துவரிடம் கொண்டு சேர்த்துவிட்டு தனக்கு மகன் பிறந்திருப்பது தெரிந்ததும் இறந்துவிடுகிறார். அதேபோல் தன்னிடம் பணம் பறித்த போலீஸை குத்திவிட்டு தானும் இறந்துவிடுகிறார் ஸ்ருதி நாராயணன் . தனது அம்மாவின் ஆசைப்படி திரும்பிப் பார்ப்பதற்குள் போலிஸாகி விடுகிறான் மகன். தந்தை மகன் என இரு கதாபாத்திரங்களிலும் ரங்கராஜ் நடித்துள்ளார்
ஒரு நேர்மையான போலீஸான ரங்கராஜ் மணல் அள்ளும் பிரச்சனையில் கொல்லப்படும் ஒரு திரு நங்கையின் வழக்கை விசாரிக்கிறார். இந்த கொலைக்குப் பின் கார்பரேட் நிறுவனத்தின் தலைவன் ஒருவன் இருப்பது தெரிந்து அவனை கைது செய்து சிறையில் வைக்கிறார். ஆனால் கைது செய்த ஒரே மணி தனது அதிகாரத்தை வைத்து நேரத்தில் வில்லன் வெளியே வருகிறான். அப்படி வெளியே வந்த வில்லன் ரங்கராஜை பழிவாங்குவதும். தனது மகளை காப்பாற்ற ரங்கராஜ் எடுக்கும் முயற்சிகளே கட்ஸ் படத்தின் கதை. இறந்துபோன தனது தந்தைக்கும் இந்த வில்லன்களுக்கும் என்ன சம்பந்தம் என்பதும் படத்தின் இரண்டாம் பாதியில் விளக்கப்படுகிறது. அதுடன் இலவச இணைப்பாக கொஞ்சம் தமிழுணர்வும் , விவசாயிகளுக்கான மெசேஜும் .
கட்ஸ் பட விமர்சனம்
ஒரே நேரத்தில் பல கதைகளை சொல்ல முற்பட்டது படத்தின் மிகப்பெரிய மைனஸ். கார்பரேட் கம்பேனிகள் விவசாய நிலத்தில் கொட்டும் கழிவுகளால் ஏற்படும் பாதிப்புகள் , இன்னொரு இன்வெஸ்டிகேஷன் , இதில் ஒரு நாயகனுக்கு இரண்டு நாயகிகளுடனான ஃபிளாஷ்பேக் வேறு அவ்வப்போது வந்துகொண்டே இருக்கிறது. மிகைப்படுத்தப் பட்ட பின்னணி இசை , சுமாரான நடிப்பு , தேவையற்ற வசனங்கள் என படம் அதனால் முடிந்ததை எல்லாம் செய்து நம் பொறுமையை சோதிக்கிறது. மொத்தமே நான்கே காட்சிகளுக்குல் திருப்பி திருப்பி கதை சுற்றிக் கொண்டிருக்கிறது.
கதையோ , திரைக்கதையோ எதுவுமே புதிது இல்லை, அதை கையாண்டிருக்கும் விதமும் புதிதில்லை. ஆனால் எல்லா நடிகர்களுக்கும் உணர்வுப்பூர்வமாக நடிப்பதற்கான களத்தை இயக்குநர் கொடுத்திருப்பது பாராட்டிற்குரியது. எமோஷ்னலான காட்சிகளில் நடிகர்கள் எதார்த்தமாக நடிக்க வைக்க இயக்குநர் சில முயற்சிகளை எடுத்திருக்கிறார் என்றாலும் இந்த காட்சிகள் கோர்வையாக இல்லாமல் படத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக வருவதே சுவாரஸ்யமிழக்க செய்கின்றன. ஒளிப்பதிவாளர் மனோஜ் தன்னுடைய சிறப்பான பங்களிப்பை செய்திருக்கிறார்.
நடிகராக ரங்கராஜ் பல இடங்கலில் ஓவர் ஆக்டிங் செய்திருந்தாலும் ஒரு சில இடங்களில் அவரது மெனக்கெடல் பாராட்டிற்குரியது. ஸ்ருதி நாராயணனுக்கு படத்தில் முக்கிய கதாபாத்திரம் வழக்கப்பட்டுள்ளது. அதனை அவர் சிறப்பாகவே செய்திருக்கிறார். ஆனால் கதாபாத்திரம் தனித்துவமாக இல்லாதது அவருக்கு நடிப்பிற்கு முட்டுக்கட்டையாக அமைகிறது.
ஒட்டுமொத்த படத்தில் ஒரு அபூர்வமாக தில்லி கணேஷ் இருக்கிறார். மிக சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் அந்த காட்சியில் அவர் செய்திருப்பது ஒரு மேஜிக் தான்.





















