TNEA 2025:பொறியியல் மாணவர் சேர்க்கை; சான்றிதழ் பதிவேற்றம், தரவரிசை பட்டியல்- A- Z அலசல்!
பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான சான்றிதழ் பதிவேற்றம் செய்வது எப்படி? சான்றிதழ் சரிபார்ப்பு எவ்வாறு நடைபெறும், ரேண்டம் எண்கள் வெளியீடு, தரவரிசைப் பட்டியல் எப்போது வெளியிடப்படும் ?

தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு 07.05.2025 அன்று தொடங்கி வைக்கப்பட்டது. ஜூன் 06ஆம் தேதி (06.06.2025) நள்ளிரவு 12 மணி வரை 3,02,374 மாணாக்கர்கள் விண்ணப்பப் பதிவு செய்தனர். அதில் மொத்தம் 2,49,883 மாணாக்கர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்தினர். அதேபோல 2,26,359 பேர் சான்றிதழ்களைச் சமர்ப்பித்தனர்.
சான்றிதழ்கள் சமர்ப்பிக்கும் பணி நடந்து வரும் நிலையில், சான்றிதழ் பதிவேற்றம் செய்வது எப்படி? சான்றிதழ் சரிபார்ப்பு எவ்வாறு நடைபெறும், ரேண்டம் எண்கள் வெளியீடு, தரவரிசைப் பட்டியல் எப்போது வெளியிடப்படும் என்பன உள்ளிட்ட தகவல்களைக் கீழே பெறலாம்.
சான்றிதழ் பதிவேற்றம் செய்ய எப்போது கடைசித் தேதி (What is the last date for uploading certificate in Tnea Counselling?)
பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பப் பதிவு முடிந்துள்ள நிலையில், மாணவர்கள் தங்களின் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்ய நாளை (ஜூன் 9) கடைசித் தேதி ஆகும்.
ரேண்டம் எண்கள் எப்போது வெளியாகும்? (When will TNEA Random Numbers be Issued?)
ஜூன் 11ஆம் தேதி ரேண்டம் எண்கள் வெளியிடப்படும் என்று பொறியியல் சேர்க்கை
சான்றிதழ் சரிபார்ப்பு எப்போது? (When is deadline for document upload? )
பொறியியல் சேர்க்கை சேவை மையங்களில் ஆன்லைன் சான்றிதழ் சரிபார்ப்பு ஜூன் 10 முதல் 20ஆம் தேதி வரை நடைபெறும்.
தரவரிசைப் பட்டியல் எப்போது வெளியீடு? (When will be TNEA 2025 rank list out?)
பொறியியல் கலந்தாய்வில் கலந்துகொண்ட மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் ஜூன் 27ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.
சான்றிதழ்களை எப்படி பதிவேற்றம் செய்ய வேண்டும்? (How to upload a certificate in TNEA?)
தேர்வர்கள் www.tneaonline.org என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டும்.
அதில் தேவையான தகவல்களை உள்ளிட்டு, லாகின் செய்ய வேண்டும்.
அதில், ’’Click here to upload certificates” என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டும்.
தொடர்ந்து அதில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை கவனமாகப் படித்துவிட்டு, பதிவேற்றம் செய்ய வேண்டும்.
சான்றிதழ்களை பிடிஎஃப் அல்லது JPG/JPE/JPEG/PNG வடிவத்தில் 150 KB முதல் 1 MB வரையிலான தரத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
விண்ணப்பதாரரின் புகைப்படம் மற்றும் கையொப்பம் பட வடிவத்தில் (JPG/JPE/JPEG/PNG) மட்டுமே இருக்க வேண்டும் மற்றும் அளவு 20 KB முதல் 50 KB வரை இருக்க வேண்டும்.
ஒவ்வொரு விண்ணப்பதாரரும் பதிவின்போது கொடுக்கப்பட்ட விவரங்களின் அடிப்படையில் கட்டாய மற்றும் கூடுதல் சான்றிதழ்களைப் பதிவேற்ற வேண்டும்.
கட்டாய ஆவணங்கள்
- 10வது மதிப்பெண் பட்டியல்
- 11வது மதிப்பெண் பட்டியல் (தமிழ்நாடு மாநில வாரிய மாணவர்களுக்கு)
- 12வது மதிப்பெண் பட்டியல்
- சமூகச் சான்றிதழ் (OC வேட்பாளர்களைத் தவிர)
சான்றிதழ் சரிபார்ப்பு குறித்த கூடுதல் தகவல்களை https://static.tneaonline.org/docs/Certificate_Upload_Instructions_English.pdf?t=1597104000032 என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.






















