Velmurugan Controversy |"கூத்தாடி விஜயை கட்டி பிடித்து..முத்தம் கொடுப்பதா?"ஆபாசமாக பேசிய வேல்முருகன்
தவெக தலைவர் விஜய் 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்றவர்களை சந்தித்து பரிசு வழங்கி வருகிறார். இச்சூழலில், “2 கிராம் தங்கத்துக்காக பெற்ற குழந்தைகளை ஒரு கூத்தாடியை கட்டி பிடிக்க வைத்து முத்தம் கொடுக்க வைக்கின்றனர் பெற்றோர்கள்”என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் ஆபாசமாக பேசியதற்கு தவெக-வினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
தவெக தலைவர் விஜய் மாநில அளவில் முதல் மூன்று இடங்களை பெற்ற 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களை மாவட்டவாரியாக அழைத்து அவர்களை கெளரவித்து பரிசுகள் வழங்கி வருகிறார். அந்த வகையில் இந்த ஆண்டும் விஜய் மாணவர்களை சந்தித்து பரிசுகளை வழங்கி வருகிறார். அப்போது மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அன்பின் மிகுதியால் விஜயை கட்டித்தழுவுவது, முத்தம் கொடுப்பது அண்ணா என்று அழைத்து தோள் மீது கைகளை போட்டுக்கொண்டு புகைப்படங்கள் எடுப்பதை வழக்கமாக வைத்துள்ளனார்.
இது தொடர்பான வீடியோ காட்சிகளும் அவ்வப்போது சோசியல் மீடியாவில் வெளியாகும். இச்சூழலில் தான் விஜயின் மாணவர்கள் சந்திப்பை ஆபாசமாக விமர்சனம் செய்துள்ளார் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவரும், திமுக சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன். அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வேல்முருகன், “இரண்டு கிராம் பரிசு கொடுத்த உடனே.. நம்ம முட்டாப் பயலுக.. நான் நடிகனை குறை சொல்ல மாட்டேன். ஒரு வயசு பொண்ண கூட்டிட்டு போறான்.
இன்னும் ஓரிரு மாதங்களில் பிளஸ் டூ முடிச்சு, டிகிரி முடிக்க இருக்கும் கல்லூரி பெண்களை கூட்டிட்டு போறாங்க.. அறிவு வேண்டாம் தமிழனுக்கு. பெத்து வளத்து ஆளாக்கிய பொண்ண... நாளைக்கு மாற்றான் மனைவியாக வழ வேண்டிய ஒரு பொண்ணு..அப்பா, அம்மா, ஆயிரக்கணக்கான பத்திரிகையாளர்கள் இருக்கும்போது.. ஒரு சினிமா கூத்தாடி பயல கட்டிப்பிடிச்சு முத்தம் கொடுக்க அனுமதிக்கிறாங்க. இது என்ன ஈனப்பிறவி. தமிழனுடைய பிறவியா இது. அப்படியே விஜய் அண்ணான்னு சொல்றாங்க.. விஜய் நடிப்பதை ரசிங்க, நடிச்சா பாராட்டுங்க.. ஆனால் இப்படிலாம் செய்யக் கூடாது” என்று பேசினார்.
பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வேல்முருகனின் இந்த பேச்சை கண்டிப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளார். அதேபோல், இவரது வேல்முருகன் இந்த ஆபாச பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தமிழக வெற்றிக்கழகத்தினர் கண்டம் தெரிவித்து வருகின்றனர்.




















