ஜூன் 13 கடைசி நாள்...! அரசு உதவித்தொகை, வேலைவாய்ப்பு உறுதி! உடனே விண்ணப்பிங்க
மயிலாடுதுறை தனியார் ஐ.டி.ஐ-க்களில் 50 சதவீத அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு விண்ணப்பிக்க ஜூன் 13 கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 10 மற்றும் 12 -ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. அதனை தொடர்ந்து மேற்படிப்பில் சேர மாணவ, மாணவிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐ.டி.ஐ) 50% அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான மாணவர் சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் அரசு ஒதுக்கீட்டில் ஐடிஐ படிக்க ஆர்வமும் தகுதியும் உள்ள மாணவ, மாணவியர் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக ஜூன் 13, 2025 வரை விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
விண்ணப்பிக்கும் முறை மற்றும் உதவி மையங்கள்
விண்ணப்பதாரர்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதள முகவரிக்குச் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க சிரமப்படுபவர்களுக்கு உதவும் வகையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களிலும், தஞ்சாவூரில் உள்ள மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்திலும் சேர்க்கை உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்கள் மூலம் விண்ணப்பங்களைச் சரியாகப் பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம்.
கல்வித் தகுதி மற்றும் தேவையான ஆவணங்கள்
இந்த தொழிற்பயிற்சி படிப்புகளில் சேருவதற்கு 8 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பம் செய்யும்போது பின்வரும் அசல் ஆவணங்களை எடுத்து வருவது அவசியம்:
- கைபேசி
- மின்னஞ்சல் முகவரி (E-mail ID)
- ஆதார் எண்
- மதிப்பெண் சான்றிதழ் (அசல்) மாற்றுச் சான்றிதழ் (அசல்)
- சாதி சான்றிதழ் (அசல்)
- பாஸ்போர்ட் அளவு புகைப்படம்
இந்த ஆவணங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு, சேர்க்கை உறுதி செய்யப்படும்.
விண்ணப்ப மற்றும் சேர்க்கைக் கட்டணம்
- ஓர் ஆண்டு காலப் பயிற்சிப் பிரிவுகளுக்கு: ரூ.235/- (விண்ணப்பக் கட்டணம்)
- இரண்டு ஆண்டு காலப் பயிற்சிப் பிரிவுகளுக்கு: ரூ.245/- (விண்ணப்பக் கட்டணம்)
இந்தக் கட்டணங்கள் செலுத்தப்பட்ட பின்னரே விண்ணப்பம் முழுமை பெறும்.
அரசு தொழிற்பயிற்சி நிலைய சலுகைகள்
அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்ந்து பயிற்சி பெறும் மாணவ, மாணவியருக்கு தமிழ்நாடு அரசு ஏராளமான நலத்திட்ட உதவிகளை வழங்குகிறது.
- விலையில்லா சைக்கிள்
- சீருடை
- பாடநூல்
- வரைபடக் கருவி
- காலணி
- பஸ் பாஸ்
- மாதாந்திர உதவித்தொகை ரூ.750/-
மேலும், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயின்ற மாணவ, மாணவியருக்கு சிறப்பு உதவித்தொகைகளும் வழங்கப்படுகின்றன:
மாணவிகளுக்கு
- புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1000/-
ஆண் மாணவர்களுக்கு: தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1000/-
வேலைவாய்ப்பு உறுதி
பயிற்சி முடித்த பின்னர், மாணவ, மாணவியருக்கு சிறந்த வேலைவாய்ப்புகளும் உறுதி செய்யப்படுகின்றன.
வளாக நேர்காணல்கள் (Campus Interview)
பயிற்சி நிலைய வளாகத்திலேயே வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, வேலைவாய்ப்பு பெற்றுத்தரப்படும்.
முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை
"ஒவ்வொரு நாளும் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை" என்ற அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுவதால், ஆர்வமுள்ள மாணவ, மாணவியர் உடனடியாக விண்ணப்பித்து இந்தப் பயிற்சித் திட்டத்தில் சேர்ந்து பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.
கூடுதல் தகவல்களுக்கு
மேலும் தகவல்களுக்கு, தஞ்சாவூர் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தின் உதவி இயக்குநரை 04362-278222 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இந்த அரிய வாய்ப்பை மயிலாடுதுறை மாவட்ட இளைஞர்கள் அனைவரும் பயன்படுத்தி, தங்கள் எதிர்காலத்தை வளமாக்கிக் கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொள்கிறது.






















