Santhanam Housewarming: ஆர்யாவால் பழைய வீட்டையே இடித்துவிட்டு... பிரமாண்ட வீடு கட்டி கிரஹப்பிரவேசம் நடத்திய சந்தானம்! குவியும் வாழ்த்து!
நடிகர் சந்தானம், தற்போது புதிய வீடு கட்டி குடியேறியுள்ள நிலையில், இவரது குடும்ப வீடியோ மற்றும் மனையின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

காமெடி நடிகராக அறிமுகமாகி, பின்னர் ஹீரோவாக மாறியவர் தான் சந்தானம். கடைசியாக இவர் நடிப்பில் டிடி நெக்ஸ்ட் திரைப்படம் வெளியான நிலையில்... தற்போது சந்தானம் சென்னையில் பிரமாண்ட வீடு ஒன்றை கட்டி அதில் குடியேறியுள்ளார். இதுகுறித்த சில புகைப்படங்கள் வெளியான நிலையில், வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்குள் கால் பதித்து சிவகார்திகேயனுக்கு முன்னரே... சினிமாவில் ஜெயித்தவர் தான் சந்தானம். சின்னத்திரையில் இவரது டைமிங் காமெடியை பார்த்து, அசந்து போன சிம்பு தான் சந்தானத்துக்கு தான் நடித்த, மன்மதன் படத்தில் தனக்கு நண்பனாக நடிக்கும் வாய்ப்பை வழங்கினார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து, சந்தானத்திற்கு அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

செந்தில் - கவுண்டமணி, மற்றும் வடிவேலுவின் காமெடியை பார்த்து ரசித்த ரசிகர்களுக்கு சந்தானத்தின் காமெடி கொஞ்சம் ட்ரெண்டியாக இருந்ததால் அதிகம் ரசிக்கப்பட்டது. 2 வருடத்தில் முன்னணி காமெடி நடிகராக மாறிய சந்தானம், சினிமாவில் காமெடியன் என்பதை தாண்டி, தயாரிப்பாளர், ஹீரோ, என தன்னை தானே மெருகேற்றிக்கொண்டார். மேலும் சந்தானம் லீட் ரோலில் நடித்த, அறை எண் 305-ல் கடவுள், படம் என்றாலும், காமெடியனாக 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முடித்த பின்னரே... 'இனிமேல் இப்படித்தான்' படத்தில் நடித்த பின்னர், இனிமேல் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்றும்... காமெடி கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டேன் என கூறினார். மேலும் ஏற்கனவே காமெடி ரோலில் நடிக்க கமிட் ஆன படங்களை மட்டுமே நடித்து முடித்தார்.
தில்லுக்கு துட்டு படத்திற்கு பின்னர், முழுக்க முழுக்க ஹீரோ சப்ஜெட் படங்களை மட்டுமே தேர்வு செய்து நடிக்க துவங்கினார். பெரும்பாலும் காமெடி கதைக்களம் கொண்ட ஹீரோவாக மட்டுமே சந்தானம் நடித்து வருகிறார். இவர் நடித்த சில படங்களை தோல்வியை தழுவினாலும், சில பாடங்கள் வெற்றி பெற்றன. அந்த வகையில் கடைசியாக சந்தானம் ஆர்யா தாயத்தாரிப்பில், 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தில் நடித்திருந்தார்.

இந்த படத்தில் கமிட் ஆன சமயத்தில் சந்தானம் அதீத கடன் பிரச்சனையில் இருந்ததாக கூறப்பட்டது. டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் மூலம் வந்த பெரிய தொகை இவரது கடன் பிரச்சனையையும் தீர்த்துள்ளது. மேலும் சென்னையில், சந்தானம், பழைய வீடு ஒன்றை வாங்கி அதை கொஞ்சம் ரெனவேட் செய்ய நினைத்த நிலையில், ஆர்யா அதெல்லாம் செட் ஆகாது என கூறி அந்த பழைய வீட்டை முழுவதுமாக இடிக்க செய்துவிட்டு புது வீடை கட்ட வைத்துள்ளார்.
தற்போது இந்த வீட்டின் கிரஹப்ரவேசத்தை சந்தானம், சிறப்பாக செய்து முடித்துள்ளார். மேலும் இவரது மனைவியின் புகைப்படமும் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. புதிய வீட்டில் குடியேறியுள்ள சந்தானத்திற்கு ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.





















