மேலும் அறிய

மீண்டும் மீண்டுமா? அரசுப்பள்ளி ஆசிரியர்களின் இந்த உரிமைகளையும் பறிப்பதா? அன்புமணி கேள்வி

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு தகுதியின் அடிப்படையில் வழங்கப்பட வேண்டிய ஊக்க ஊதியத்தை வழங்காமல் தமிழக அரசு நிறுத்தி வைத்திருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும்.- அன்புமணி.

ஓய்வுபெற்ற ஆசிரியர்களுக்கு ஓய்வுக்கால பயன்கள் இல்லை என்றும் தணிக்கைத் தடை என்ற பெயரில் ஆசிரியர்களின் உரிமைகளைப் பறிப்பதா எனவும் பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

’’தமிழக அரசின் தொடக்கக்கல்வித் துறையில் பணியாற்றி கடந்த ஆண்டு ஓய்வு பெற்றவர்களில் சுமார் 1000 ஆசிரியர்களுக்கு இன்னும் ஓய்வுக்கால பயன்கள் வழங்கப்படவில்லை. அதுமட்டுமின்றி, தணிக்கைத் தடை என்ற பெயரில், ஆசிரியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய 8 வகையான ஊக்க ஊதியம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு தகுதியின் அடிப்படையில் வழங்கப்பட வேண்டிய ஊக்க ஊதியத்தை வழங்காமல் தமிழக அரசு நிறுத்தி வைத்திருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும்.

அரசின் முதல் கடமை


அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் பணியாற்றி ஓய்வு பெறும்போது கடைசி பணி நாளில் அவர்களுக்கு உரிய ஓய்வுக்கால பயன்கள் வழங்கப்பட வேண்டும் என்பது விதியாகும். ஆனால், 2024& 25ஆம் கல்வியாண்டில் ஓய்வுபெற்ற தொடக்கக்கல்வித்துறையைச் சேர்ந்த ஆசிரியர்களில் 1000 பேருக்கு இன்னும் ஓய்வுக்கால பயன்கள் வழங்கப்படவில்லை. அவை அவர்களுக்கு எப்போது வழங்கப்படும் என்பதும் தெரியவில்லை. 30 ஆண்டுகளுக்கு மேல் அரசு பள்ளிகளில் பணியாற்றி ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு ஓய்வுக்காலப் பயன்களை வழங்க வேண்டியது அரசின் முதல் கடமை; அதை வழங்க மறுப்பது எந்த வகையிலும் நியாயமல்ல.

ஊக்க ஊதியமும் மறுப்பா?

அதேபோல், நடுநிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் பி.லிட்., பி.எட். பட்டப்படிப்புகளை படித்து முடித்ததற்காக வழங்கப்படும் ஊக்க ஊதியத்தை வழங்க தமிழக அரசு மறுக்கிறது. கற்பிக்கும் பாடம் தவிர்த்து பிற பாடங்களில் பட்டம் பெறுதல், நேரடியாக முதுநிலை பட்டம் பெற்றவர்கள் பி.எட் பட்டம் பெறுதல்,  ஆசிரியர்களில் இளையோர் & முதியோர் இடையிலான ஊதிய முரண்பாடுகளைக் களைதல்,  பதவி உயர்வுக்கான ஊதியத்தை நிர்ணயித்தல், 1993ஆம் ஆண்டின் சிறப்புப் படிகளை பெறுதல், கீழ்நிலை, மேல்நிலை பணிக்காலத்தை ஒருங்கிணைத்து தேர்வு நிலை, சிறப்பு நிலை தகுதிகளைப் பெறுதல், 2009ஆம் ஆண்டு மே மாதத்திற்கு முன் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியாக பணியாற்றியதற்கான தேர்வுநிலை தர ஊதியம் பெறுதல் ஆகியவற்றை தணிக்கைத் தடையை காரணம் காட்டி தமிழக அரசு நிறுத்தி வைத்துள்ளது.

தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை சார்பில் 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 280ஆம் நாள் பிறப்பிக்கப்பட்ட அரசாணை எண் 286இன்படி மேற்குறிப்பிடப்பட்ட 8 உரிமைகளையும் ஆசிரியர்களுக்கு வழங்குவதற்கு எந்தத் தடையும் இல்லை. ஆனால், அரசாணைக்கு முற்றிலும் எதிரான வகையில் தணிக்கைத் துறையும், தொடக்கக் கல்வித்துறை இயக்குனரும் ஆணைகளை பிறப்பித்து ஆசிரியர்களின் உரிமைகளை பறித்து வருகின்றனர். இந்த சிக்கலில் தலையிட்டு தீர்வு காண வேண்டிய தமிழக அரசோ, அனைத்தையும் அமைதியாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. ஆசிரியர்களின் உரிமைகள் பறிக்கப்படுவதை நினைத்துக் கவலைப் படாத தமிழக ஆட்சியாளர்கள், அதன் மூலம் அரசின் செலவுகள் குறைவதை நினைத்து மகிழ்ச்சியடைகின்றனர்.

திமுக அரசு பின்வாங்கக்கூடாது


அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனுக்கான திட்டங்களைச் செயல்படுத்தும்போது, அதற்கு தணிக்கைத் துறையின் தடைகள் முட்டுக்கட்டையாக இருக்கக்கூடாது. தேவையின்றி விதிக்கப்படும் தடைகளை உடனடியாக அகற்றி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான உரிமைகள் கிடைப்பதை உறுதி செட்ட வேண்டியது அரசின் கடமை ஆகும். அதிலிருந்து திமுக அரசு ஒருபோதும் பின்வாங்கக்கூடாது.

தமிழ்நாட்டில் விடுதலைக்கு பிந்தைய காலத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன்களுக்கு எதிராக மிக மோசமாக செயல்படும் அரசு என்றால், அது இப்போது ஆட்சி நடத்தும் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான அரசு தான். ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும், ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகள் களையப்படும், பகுதிநேர ஆசிரியர்களும், தற்காலிக ஆசிரியர்களும் பணி நிலைப்பு செய்யப்படுவார்கள் என்பன உள்ளிட்ட பல வாக்குறுதிகளை 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் அறிக்கையில் வழங்கிய திமுக, அவற்றின் ஒன்றைக் கூட இதுவரை நிறைவேற்றவில்லை. இது அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு திமுக செய்யும் பெருந்துரோகம்.

இந்த துரோகத்திற்கும், ஆசிரியர்களின் மன உளைச்சல் மற்றும் வேதனைகளுக்கும் அரசு உடனடியாக முடிவு கட்ட வேண்டும். தணிக்கைத் துறையால் போடப்பட்டுள்ள தேவையற்ற தடைகள் அனைத்தையும் அகற்றி, ஆசிரியர்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்து உரிமைகளையும் அரசு உடனே வழங்க வேண்டும்’’.

இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

எளிய சோதனைகள் மூலம் தேவகோட்டை மாணவர்களுக்கு அறிவியல் ஆர்வம்!
எளிய சோதனைகள் மூலம் தேவகோட்டை மாணவர்களுக்கு அறிவியல் ஆர்வம்!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மெடிக்கல் படிக்க ஆசையா? - புதுச்சேரி நீட் மருத்துவப் படிப்பு விண்ணப்ப காலக்கெடு நீட்டிப்பு
மெடிக்கல் படிக்க ஆசையா? - புதுச்சேரி நீட் மருத்துவப் படிப்பு விண்ணப்ப காலக்கெடு நீட்டிப்பு
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Iran Missile Plan: ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
BYD Flex Fuel Hybrid SUV: பட்டையை கிளப்பும் BYD.! இனி பெட்ரோல், எத்தனால், EV எல்லாம் ஒரே காரில்.! Flex Fuel ஹைப்ரிட் SUV அறிமுகம்
பட்டையை கிளப்பும் BYD.! இனி பெட்ரோல், எத்தனால், EV எல்லாம் ஒரே காரில்.! Flex Fuel ஹைப்ரிட் SUV அறிமுகம்
Mojtaba Khamenei: மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
E3 Trion EV Scooter Variants Price: 52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
Embed widget