Tata Air India Bid | டாடா - ஏர் இந்தியா விவகாரம் : மத்திய அரசு மறுப்பு
ஏர் இந்தியாவை ஏலத்துக்கு விட்ட விவகாரத்தில் மத்திய அரசின் முடிவு விரைவில் அறிவிக்கப்படும்.
![Tata Air India Bid | டாடா - ஏர் இந்தியா விவகாரம் : மத்திய அரசு மறுப்பு Tata Sons Air India Financial Bid Media reports are incorrect says Govt of India Tata Air India Bid | டாடா - ஏர் இந்தியா விவகாரம் : மத்திய அரசு மறுப்பு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/08/06/d2899b767b5295d93e8eebdcc6492d84_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ஏர் இந்தியாவை டாடா சன்ஸ் நிறுவனம் வாங்கியதாக வெளியான தகவலுக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
ஏர் இந்தியாவை டாடா சன்ஸ் நிறுவனம் விலைக்கு வாங்கியதாக கூறப்படுவது தவறாக தகவல் என்றும், ஏர் இந்தியாவை ஏலத்துக்கு விட்ட விவகாரத்தில் மத்திய அரசின் முடிவு விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Media reports indicating approval of financial bids by Government of India in the AI disinvestment case are incorrect. Media will be informed of the Government decision as and when it is taken: Secretary, Department of Investment and Public Asset Management, GoI pic.twitter.com/PoWk7UceF5
— ANI (@ANI) October 1, 2021
முன்னதாக, ஏர் இந்தியா விமான நிறுவனத்தை விலைக்கு வாங்கும் ஏலத்தில் டாடா சன்ஸ் வெற்றிபெற்றதாக தகவல் வெளியானது. ஏர் இந்தியாவை விலைக்கு வாங்கும் டாடாவின் ஏல திட்டத்தை மத்திய அமைச்சர்கள் குழு ஏற்றதாகவும், உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான குழு டாடாவின் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்ததாகவும் தகவல் வெளியானது.
Tata Sons wins the bid for national carrier Air India. Tata Sons was the highest bidder. Union Home Minister Amit Shah-led ministerial panel has given approval to this bid: Sources pic.twitter.com/99OdR9LXCA
— ANI (@ANI) October 1, 2021
ஏர் இந்தியாவிற்காக டாடா சான்ஸ் அதிக தொகை கொடுத்து ஏலம் எடுத்துள்ளதாகவும் கூறப்பட்டது. அடுத்த சில நாட்களில் முதலீட்டு முதலீடு குறித்து அதிகாரப்பூர்வ முடிவு எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டது. டிசம்பர் மாதத்திற்குள் விமான நிறுவனங்களை அதன் புதிய உரிமையாளர்களிடம் ஒப்படைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க :
Tata Takeover Air India: 68 ஆண்டுகளுக்குப் பின் ஏர் இந்தியாவை கைப்பற்றும் டாடா!
உலக முதியவர்கள் தினம்... இனியாவது தொடங்கட்டும் பெரும் விவாதம்!
Smriti Mandhana Century: ஆஸி., மண்ணில் சம்பவம் செய்த ஸ்மிரிதி மந்தனா...! டெஸ்ட் சதம் அடித்து இந்தியா பெஸ்ட்!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)