தாம்பரம், ஆவடி மாநகராட்சிகளுக்கு புதிய காவல் ஆணையர்கள் நியமனம்..!
தாம்பரம், ஆவடி மாநகராட்சிகளுக்கு புதிய காவல் ஆணையர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தாம்பரம், ஆவடி மாநகராட்சிகளுக்கு புதிய காவல் ஆணையர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தாம்பரம் காவல் ஆணையராக ஏடிஜிபி ரவி நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆவடி காவம் ஆணையராக ஏடிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக, மாநகராட்சி ஒரு மாநகரம் அல்லது பெருநகர் பகுதியினை உள்ளாட்சி அமைப்பாகும். இந்தியாவில் பத்து லட்சத்திற்கும் கூடுதலான மக்கள்தொகை கொண்ட நகராட்சிகள் ,மாநகராட்சி தகுதி பெறுகின்றன. இவற்றிற்கு மாநில அல்லது மாகாண அரசுகள் தனியான சட்டங்கள் மூலம் தன்னாட்சி அதிகாரம் கொடுக்கின்றன. தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, தூத்துக்குடி, வேலூர், ஈரோடு, திருப்பூர், தஞ்சாவூர், நாகர்கோவில், ஓசூர், திண்டுக்கல் மற்றும் ஆவடி என தற்போது தமிழ்நாட்டில் 15 மாநகராட்சிகள் உள்ளன. சென்னை மட்டும் பெருநகர மாநகராட்சி என்ற அந்தஸ்தில் உள்ளது.
காஞ்சிபுரம், கும்பகோணம், கரூர், கடலூர் மற்றும் சிவகாசி ஆகிய நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. திருச்சி, நாகர்கோவில், தஞ்சாவூர், ஓசூர் மாநகராட்சிகள் விரிவுபடுத்தப்படும் என்றும் , தாம்பரம் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்றும் அருகில் உள்ள நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகள் தாம்பரம் மாநகராட்சியுடன் இணைக்கப்படும் எனவும் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது.
இதனையெடுத்து தாம்பரம், அதன் அருகில் உள்ள நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளை இணைத்து, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்ற அறிவிப்பைத் தொடர்ந்து தற்போது புதிய மாநகராட்சிக்கான எல்லையை வரையறை செய்து, புதிதாக வரைபடம் தயாரிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. மாநகராட்சிக்கு தேவையான அனைத்து ஆவணங்களைத் தயாரிக்கும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஏற்கெனவே எல்லை வரையறை செய்து வரைபடம் தயாரிக்கப்பட்டது.
இந்நிலையில் தமிழக அரசு சார்பில் ,தாம்பரம் மாநகராட்சி அமைப்பதற்காக தாம்பரம், பல்லாவரம், பம்மல், செம்பாக்கம், அனகாபுத்தூர் ஆகிய 5 நகராட்சிகளை இணைத்து அரசாணை வெளியீடு. சிட்லபாக்கம்,மாடம்பாக்கம்,பெருங்களத்தூர், பீர்க்கங்கரணை, திருநீர்மலை பேரூராட்சிகளை தாம்பரம் மாநகராட்சியுடன் இணைக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தாம்பரம் மாநகராட்சியின் பரப்பளவு 87.64 ச.கி.மீ, மக்கள்தொகை 9,60,887 ஆக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாம்பரம் மாநகராட்சி வருவாய் எப்படி இருக்கும்?
சென்னையின் நுழைவு வாயிலாக தாம்பரம் இருப்பதால், ஜிஎஸ்டி சாலையில் பன்னாட்டு நிறுவனங்கள் பல அமைந்துள்ளன, அதேபோல பாரம்பரியம் மிக்க கல்வி நிலையங்கள் மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் ஆகியவை அமைந்துள்ளன, அதேபோல் சென்னை பகுதியில் இருக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் புகழ்பெற்ற வியாபார நிறுவனங்கள் அனைத்தும் தாம்பரத்தில் தன்னுடைய கிளைகளைத் திறந்துள்ளது அதன்மூலம் மாநகராட்சிக்கு வருவாய் கிடைக்க உள்ளது.