மேலும் அறிய

எதிரிகளுக்கு எச்சரிக்கை.! பட்ஜெட்டில் பாதுகாப்புத்துறைக்கு தாராள நிதி; வலுவடையும் ராணுவம்

இந்தியாவிற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் அச்சுறுத்தல்கள் நிலவி வரும் சூழலில், மத்திய பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்து அறிவித்துள்ளார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

இந்தியாவிற்கு, ஏற்கனவே பாகிஸ்தானுடன் மோதல் ஏற்பட்ட நிலையில், இன்னும் சில நாடுகளாலும் அச்சுறுத்தல் உள்ளது. இந்த நிலையில், அதனை மனதில் கொண்டு, இந்த பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்கு கடந்த முறையைவிட பல மடங்கு அதிக நிதி ஒதுக்கி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

மாறிவரும் பாதுகாப்பு சூழல் - உலகம் முதல் அண்டை நாடு வரை

உலக அளவில் தற்போது மிகப் பெரும் போர் சூழல்கள் நிலவி வருகின்றன. குறிப்பாக, மத்திய கிழக்கில் எந்த நேரமும் அலெர்ட் மோடிலேயே இருக்க வேண்டிய சூழல் நிலவுகிறது. அதேபோல், ரஷ்யா-உக்ரைன் போர், காசா போர் போன்றவற்றோடு, ஈரானை அமெரிக்கா தாக்கும் சூழலும் உருவாகி வருகிறது.

இதேபோல், இந்தியாவை பொறுத்தவரை, ஏற்கனவே பாகிஸ்தான் தீவிரவாதிகளால், இரு நாடுகளுக்கும் இடையே  3 நாட்கள் மோதல் ஏற்பட்டு ஓய்ந்தது. இந்தியாவின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் பின்வாங்கியது. ஆனாலும், தொடர்ந்து அச்சுறுத்தல் நிலவி வருகிறது.

மறுபுறம், வங்கதேசமும் தற்போது இந்தியாவை சீண்டி வருகிறது. நட்பு நாடுகளின் பட்டியலில் இருந்த நிலையில், அங்கு ஏற்பட்டுள்ள உள்நாட்டு கலவரத்தால், நிலைமை மாறி விட்டது. இதையடுத்து, வடகிழக்கு மாநிலங்களில் குழப்பங்களை ஏற்படுத்தும் நோக்கில் வங்கதேசம் செயல்பட்டு வருகிறது.

மற்றொரு அச்சுறுத்தல் சீனா என்பது அனைவருக்கும் தெரிந்ததே. ஏற்கனவே, லடாக், அருணாச்சல பிரதேச பகுதிகளுக்கு அந்நாடும் உரிமை கோரி வருகிறது. எனினும், தற்போது இந்தியா உடன் சீனா நட்பாக இருக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

ஆனாலும், இந்த நாடுகளால் எப்போது வேண்டுமானாலும் இந்தியாவிற்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்பதே உண்மை. அதோடு, உலக அளவிலும் பல்வேறு போர் சூழல்கள் நிலவுவதால், இந்திய ராணுவம் எந்த நேரத்திலும் எத்தகைய அச்சுறுத்தலையும் சமாளிக்கும் வல்லமையை பெற்றிருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

பாதுகாப்புத் துறையை பலப்படுத்தும் வகையில் நிதி ஒதுக்கீடு

இப்படிப்பட்ட சூழலில், பாதுகாப்புத் துறையை பலப்படுத்த வேண்டிய கட்டாயத்தை உத்தேசித்தே, தற்போது தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில், 7.85 லட்சம் கோடி ரூபாய் நிதியை அத்துறைக்கு ஒதுக்கியுள்ளது மத்திய அரசு. இதன் மூலம், பாதுகாப்புத்துறை முன்பைவிட இன்னும் வலுவாக மாறும் என்பதில் சந்தேகமில்லை.

இதில், பாதுகாப்புப் படைகளை நவீனமயமாக்க 2.19 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும். ரஃபேல் போர் விமானங்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்களுக்கான ஒப்பந்தங்கள் போன்ற முக்கிய திட்டங்களை பாதுகாப்பு அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது.

மேலும், பாதுகாப்புத் துறையில் இறக்குமதி செய்யப்படும் போர் விமான உதிரி பாகங்களுக்கு அடிப்படை சுங்க வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதோடு, பாதுகாப்புத்துறை தற்சார்பு நிலையை அடையவும், உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கவும் இந்த பட்ஜெட் வழிவகுக்கும் என்றும் நிதியமைச்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

 

 

தலைப்பு செய்திகள்

Social Media: 2 மணி நேரம் தான் டைம்..! சமூக வலைதளங்களுக்கு கெடு விதித்த மத்திய அரசு - காரணம் என்ன?
2 மணி நேரம் தான் டைம்..! சமூக வலைதளங்களுக்கு கெடு விதித்த மத்திய அரசு - காரணம் என்ன?
எப்படியெல்லாம் வளர்த்திருப்பாரு.. அப்பா இறப்புக்கு வராத மகள்கள்.. விளாசிய நெட்டிசன்கள்!
எப்படியெல்லாம் வளர்த்திருப்பாரு.. அப்பா இறப்புக்கு வராத மகள்கள்.. விளாசிய நெட்டிசன்கள்!
Supreme Court: வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
இண்டிகோ 20வது ஆண்டு: 20,000 இலவச டிக்கெட் - அதிர்ஷ்டசாலி நீங்களா?
இண்டிகோ 20வது ஆண்டு: 20,000 இலவச டிக்கெட் - அதிர்ஷ்டசாலி நீங்களா?

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
தமிழக MP-க்களை அழைத்த CM.! ‘டேக் டைவர்ஷன்’ செய்யாதீங்க விஜய்- ஒரே போடாக போட்ட துரைமுருகன்- அறிக்கை இதோ..
தமிழக MP-க்களை அழைத்த CM.! ‘டேக் டைவர்ஷன்’ செய்யாதீங்க விஜய்- ஒரே போடாக போட்ட துரைமுருகன்- அறிக்கை இதோ..
CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
Sekar Babu: ”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
KT Rajendra Balaji: திமுகவுக்கு போகச்சொல்லி நெருக்கடி.. மனம் மாறுவாரா ராஜேந்திர பாலாஜி.. பரபரக்கும் அரசியல்!
KT Rajendra Balaji: திமுகவுக்கு போகச்சொல்லி நெருக்கடி.. மனம் மாறுவாரா ராஜேந்திர பாலாஜி.. பரபரக்கும் அரசியல்!
கோயிலுக்கு எந்த VIP வந்தாலும் கண்டிப்பாக எனக்கு சொல்லனும்.! அமைச்சர் ரமேஷ் போட்ட உத்தரவால் பரபரப்பு
கோயிலுக்கு எந்த VIP வந்தாலும் கண்டிப்பாக எனக்கு சொல்லனும்.! அமைச்சர் ரமேஷ் போட்ட உத்தரவால் பரபரப்பு
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
Embed widget