மேலும் அறிய

TN Budget 2026: நாளை இடைக்கால பட்ஜெட் தாக்கல்! ஆச்சரியப்பட வைக்கும் அறிவிப்புகள் இருக்குமா? திமுக ப்ளான் என்ன?

Tamil Nadu Interim Budget 2026: சட்டமன்ற தேர்தல் இரு மாதங்களுக்குள் நடைபெற உள்ள நிலையில், திமுக அரசு நாளை இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறது.

Tamil Nadu Interim Budget 2026: தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் இன்னும் 2 மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த மாத இறுதியில் அல்லது வரும் மார்ச் மாத தொடக்கத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று கருதப்படுகிறது.

நாளை இடைக்கால பட்ஜெட் தாக்கல்:

இந்த நிலையில், தமிழ்நாட்டின் இடைக்கால பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்படுகிறது. மு.க.ஸ்டாலினின் இந்த ஆட்சியின் கடைசி பட்ஜெட் இந்த பட்ஜெட் ஆகும். வரும் சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு பல்வேறு முக்கிய அறிவிப்புகளை தமிழ்நாடு அரசு வெளியிடும் என்று கருதப்படுகிறது. 

அதாவது, இந்த அறிவிப்புகள் வாக்காளர்களை கவரும் வகையிலே இருக்கும் என்றே கருதப்படுகிறது. மகளிர் உரிமைத் தொகை, மகளிர் விடியல் பயணம், நான் முதல்வன், புதுமைப் பெண் திட்டம் என்று பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் நிலையில், மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கத்தில் அறிவிப்புகளை வெளியிடும் என்றே கருதப்படுகிறது.

பெண்கள் வாக்குகள்:

வரும் தேர்தலில் பெண்களின் வாக்குகள் ஆட்சியைத் தீர்மானிப்பது யார்? என்பதை தீர்மானிக்கும் முக்கிய சக்தியாக திகழும் என்று கருதப்படுகிறது. இதனால், பெண்களின் வாக்குகளை தக்க வைக்கும் வகையில் ஏதேனும் முக்கிய அறிவிப்புகள் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. 

போக்குவரத்து துறையில் சென்னையை போன்று மற்ற மாநகரங்களையும் உயர்த்தும் வகையில் மதுரை, கோவை, திருச்சி போன்ற நகரங்களில் மெட்ரோ சேவைகளை செயல்படுத்தும் திட்டம், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு, விலைவாசி உயர்ந்திருக்கும் நிலையில் அதை கட்டுப்படுத்துவதற்கான அறிவிப்பு என பல்வேறு அறிவிப்புகள் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. 

குறிவைக்கப்படும் வாக்குகள்:

இந்த அறிவிப்புகளை மீண்டும் ஆட்சிக்கு வந்தால்தான் செயல்படுத்த முடியும் என்பதால் அதற்கேற்பவே அறிவிப்புகளை வெளியிடுவார்கள் என்று கருதப்படுகிறது. விவசாயம், தொழில்நுட்பம், கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்துறையில் பல்வேறு அறிவிப்புகள் இருக்கலாம் என்றே கருதப்படுகிறது. 

இடைக்கால பட்ஜெட் என்பதால் வாக்குகளை குறிவைத்தே திமுக அரசின் அறிவிப்புகள் இருக்கும் என்றே கருதப்படுகிறது. திமுக தங்களின் மற்ற திட்டங்களை தேர்தல் வாக்குறுதிகளாக அளிக்கும் என்றும் அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

5 ஆயிரம்:

திமுக-விற்கு தங்கள் ஆட்சியைத் தக்கவைக்க இந்த தேர்தலில் தங்களது வழக்கமான தேர்தல் போட்டியாளர் அதிமுக-வுடன், விஜய்யின் தவெக-வும் சேர்ந்திருப்பது பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. திமுக அரசு கடந்த சில தினங்களுக்கு முன்பு மாதந்தோறும் மகளிர் உரிமைத் தொகையாக ரூபாய் 5 ஆயிரத்தை அதிரடியாக வங்கிக்கணக்கில் வரவு வைத்தது. இந்த தொகை தேர்தலில் மிகப்பெரிய அளவில் திமுக-விற்கு பக்கபலமாக இருக்கும் என்று கருதப்படுகிறது. 

தலைப்பு செய்திகள்

Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
தவெக அரசுக்கு பட்டதாரி ஆசிரியர்களின் 18 கோரிக்கைகள்: பழைய ஓய்வூதியம், ஊக்க ஊதியம் எப்போது?
தவெக அரசுக்கு பட்டதாரி ஆசிரியர்களின் 18 கோரிக்கைகள்: பழைய ஓய்வூதியம், ஊக்க ஊதியம் எப்போது?
EPS Condemn Central Minister: மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரின் பதிலால் காவிரி நதி நீர் பாயும் மாநில மக்கள் பதற்றம் - இபிஎஸ் அறிக்கை
மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரின் பதிலால் காவிரி நதி நீர் பாயும் மாநில மக்கள் பதற்றம் - இபிஎஸ் அறிக்கை
TVK - Congress Alliance : ‘பாஜகவின் ஆபரேஷன் TC’ தவெக – காங்கிரஸ் கூட்டணியை முறிக்க பலே திட்டம்..!
‘பாஜகவின் ஆபரேஷன் TC’ தவெக – காங்கிரஸ் கூட்டணியை முறிக்க பலே திட்டம்..!

வீடியோ

இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE
கரூர் கூட்ட நெரிசல் அரசுப் பணி கொடுத்த விஜய்..ரத்து செய்த மதுரை நீதிமன்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
தவெக அரசுக்கு பட்டதாரி ஆசிரியர்களின் 18 கோரிக்கைகள்: பழைய ஓய்வூதியம், ஊக்க ஊதியம் எப்போது?
தவெக அரசுக்கு பட்டதாரி ஆசிரியர்களின் 18 கோரிக்கைகள்: பழைய ஓய்வூதியம், ஊக்க ஊதியம் எப்போது?
EPS Condemn Central Minister: மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரின் பதிலால் காவிரி நதி நீர் பாயும் மாநில மக்கள் பதற்றம் - இபிஎஸ் அறிக்கை
மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரின் பதிலால் காவிரி நதி நீர் பாயும் மாநில மக்கள் பதற்றம் - இபிஎஸ் அறிக்கை
TVK - Congress Alliance : ‘பாஜகவின் ஆபரேஷன் TC’ தவெக – காங்கிரஸ் கூட்டணியை முறிக்க பலே திட்டம்..!
‘பாஜகவின் ஆபரேஷன் TC’ தவெக – காங்கிரஸ் கூட்டணியை முறிக்க பலே திட்டம்..!
TamilNadu Power Shutdown: தமிழகத்தில் நாளை(29-07-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
TamilNadu Power Shutdown: தமிழகத்தில் நாளை(29-07-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
Avore EX Electric Bike: ஒரே சார்ஜில் 260 கிமீ ரேஞ்ச்; ஓலா, ரிவோல்ட்-க்கு ரிவிட்.! Avore EX EV பைக் அறிமுகம்; விலை இவ்ளோ தானா.?
ஒரே சார்ஜில் 260 கிமீ ரேஞ்ச்; ஓலா, ரிவோல்ட்-க்கு ரிவிட்.! Avore EX EV பைக் அறிமுகம்; விலை இவ்ளோ தானா.?
US New Immigration Bill: அமெரிக்காவில் ‘க்ரீன் கார்டுக்கு க்ரீன் சிக்னல்‘; லட்சக்கணக்கான இந்தியர்களுக்கு குட் நியூஸ்; புதிய மசோதா
அமெரிக்காவில் ‘க்ரீன் கார்டுக்கு க்ரீன் சிக்னல்‘; லட்சக்கணக்கான இந்தியர்களுக்கு குட் நியூஸ்; புதிய மசோதா
Iran Vs Trump: ''நாங்க பேசனும்னு சொன்னோமா.? அவர் தானாவே போர நிறுத்திட்டார்''; ட்ரம்ப்பை கழுவி ஊற்றும் ஈரான்
''நாங்க பேசனும்னு சொன்னோமா.? அவர் தானாவே போர நிறுத்திட்டார்''; ட்ரம்ப்பை கழுவி ஊற்றும் ஈரான்
Embed widget