மதுரையில் ரூ.229 கோடி மதிப்பில் புதிய சிறைச்சாலைகள்.. கைதிகளின் நலனுக்காகவும் அரசு அதிரடி திட்டம்!
ரூபாய்.229 கோடி மதிப்பில் மதுரையில் புதிய மத்திய சிறைச்சாலை கட்டுமானத்திற்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

மாநிலம் முழுவதும் சிறைச்சாலை உட்கட்டமைப்பை மேம்படுத்த தமிழ்நாடு அரசு முன்னுரிமை அளித்து வருகிறது.
பட்ஜெட்டில் சிறைக்கும் முக்கியதுவம்
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று தமிழ்நாட்டின் இடைக்கால பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து, வேளாண் நிதிநிலை அறிக்கையை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இந்த இரண்டு பட்ஜெட் தாக்கலின்போதும், கடந்த 5 ஆண்டுகளில் திமுக அரசு பல்வேறு துறைகளில் செய்துள்ள சாதனைகள் குறித்து பட்டியலிடப்பட்டது. இந்நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், திமுக அரசின் சாதனைகள் அடங்கிய பட்டியலுடன் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடதக்கது.
சிறைச்சாலை குறித்து பட்ஜெட்டில் அறிவிப்பு
புதிய சிறைச்சாலை அமைப்பதற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். கோவையில் உள்ள தற்போதைய மத்திய சிறைச்சாலையும் பெண்கள் சிறப்பு சிறைச்சாலையும் மாற்றி அமைக்கும் ரூபாய்.327 கோடி மதிப்பிலான திட்டத்திற்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது எனவும். தஞ்சாவூர், சேலம் மற்றும் நாமக்கல் ஆகிய இடங்களில் புதிய மாவட்ட சிறைச்சாலை வளாகங்களை அமைக்கும் திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன எனவும். தற்போதைய தேவைகள் மற்றும் கைதிகளின் நலனை கருத்தில் கொண்டு, மாநிலம் முழுவதும் சிறைச்சாலை உட்கட்டமைப்பை மேம்படுத்த தமிழ்நாடு அரசு முன்னுரிமை அளித்து வருகிறது” எனவும் தெரிவித்தார்.
நெரிசல் அதிகரித்து வருவதால் புதிய சிறைகள் கட்டுவது அவசியமாகியுள்ளது
இந்த முன்னேற்றம் குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், “ஒருகாலத்தில் நகர மையத்தில் இருந்த சென்னை மத்திய சிறைச்சாலை பின்னர் நகர புறப்பகுதிக்குச் மாற்றப்பட்டு புழல் சிறையாக உருவாக்கப்பட்டது. மத்திய சிறைகளில் அதிக நெரிசல் அதிகரித்து வருவதால் புதிய சிறைகள் கட்டுவது அவசியமாகியுள்ளது. இதே காரணம் மதுரை சிறைத் திட்டத்திற்கும் பொருந்துகிறது. எனினும், மதுரை சிறையைச் சுற்றியுள்ள ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து கண்காணிப்பு அதிகாரிகள் உரிய விசாரணை நடத்துவதும் முக்கியம்” என்றனர்.
முந்தைய நிதியாண்டின் ரூ.15,011 கோடியிலிருந்து அதிகரித்துள்ளது
சிறைகள் மற்றும் திருத்த சேவைகள் துறை உள்துறை, மதுவிலக்கு மற்றும் வருவாய் துறையின் கீழ் செயல்படுகிறது. 2025-26 நிதியாண்டு பட்ஜெட்டில் இத்துறைக்கு ரூ.15,111 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது முந்தைய நிதியாண்டின் ரூ.15,011 கோடியிலிருந்து அதிகரித்துள்ளது. என்பதும் குறிப்பிடதக்கது.























