மேலும் அறிய

Budget 2026: திமுக பாணியை கையில் எடுத்த பாஜக; ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு மகளிர் விடுதி- தோழி விடுதிக்குப் போட்டியா?

Budget 2026 Education Sector: திமுக அரசு அறிவித்து, செயல்படுத்தி வரும் தோழி விடுதிக்குப் போட்டியா இந்த மகளிர் விடுதி என்று கேள்வி எழுந்துள்ளது.

இந்திய நாட்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மனா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். இதில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.

இதில் இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் புதிய மகளிர் விடுதிகள் அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார். குறிப்பாக, ''உயர்கல்வித் துறையில் புதிய நிறுவனங்கள், பல்கலைக்கழக நகரங்கள், பெண்கள் விடுதி மற்றும் தொலைநோக்கு உள்கட்டமைப்பு வசதிகளை அமைப்பதற்கு திட்டமிடப்பட்டு உள்ளது. இதன்படி நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு பெண்கள் விடுதி கட்டப்படும்'' என்று அமைச்சர் நிர்மலா அறிவித்தார்.

இந்த நிலையில் திமுக அரசு அறிவித்து, செயல்படுத்தி வரும் தோழி விடுதிக்குப் போட்டியா இந்த மகளிர் விடுதி என்று கேள்வி எழுந்துள்ளது.

அது என்ன தோழி விடுதி?

பெண்களின் அதிக பணிப் பங்கேற்பை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசின் சார்பில் மாநிலம் முழுவதும் 9 மாவட்டங்களில், பணிபுரியும் பெண்களுக்காகக் குறைந்த கட்டணத்தில் பிரத்யேக மகளிர் விடுதிகள் கடந்த 2023ஆம் ஆண்டு தொடங்கப்பட்டன. முதற்கட்டமாக சென்னை, விழுப்புரம், செங்கல்பட்டு, வேலூர், தஞ்சாவூர், பெரம்பலூர் , திருநெல்வேலி, சேலம், திருச்சி ஆகிய பகுதிகளில் தோழி விடுதிகள் தொடங்கப்பட்டன.

மேலும் பல இடங்களில் தோழி விடுதி கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு தோழி மகளிர் பணிபுரியும் விடுதி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று தமிழக அரசு அறிவித்து இருந்தது. 

மாவட்டந்தோறும் மகளிர் விடுதி

அந்த வகையில் மத்திய அரசு உயர் கல்வித் துறையில் பெண்கள் பங்கேற்பை ஊக்குவிக்கும் வகையில், மாவட்டந்தோறும் மகளிர் விடுதி அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளது. எனினும் இதுகுறித்த கூடுதல் விவரங்கள் எதுவும் பட்ஜெட் உரையில் தெரிவிக்கப்படவில்லை.  

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

ரூ.25,000 சம்பளத்தில் வேலை வேண்டுமா? காரைக்குடி ITI சேர்க்கை நீட்டிப்பு!
ரூ.25,000 சம்பளத்தில் வேலை வேண்டுமா? காரைக்குடி ITI சேர்க்கை நீட்டிப்பு!
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
CAT 2026: MBA கனவை நனவாக்கலாமா? விண்ணப்பப் பதிவு தொடக்கம்! தகுதி, வழிமுறை, விவரம்
CAT 2026: MBA கனவை நனவாக்கலாமா? விண்ணப்பப் பதிவு தொடக்கம்! தகுதி, வழிமுறை, விவரம்
தவெக வாக்குறுதி என்னாச்சு? கண்ணீர் விடும் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள்- பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை!
தவெக வாக்குறுதி என்னாச்சு? கண்ணீர் விடும் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள்- பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CTR Nirmal Kumar: ”உதயநிதி பேச்சை திமுகவினர் வீட்டில் போட்டு காட்ட வேண்டும்” - தவெக அமைச்சர் காட்டம்
”உதயநிதி பேச்சை திமுகவினர் வீட்டில் போட்டு காட்ட வேண்டும்” - தவெக அமைச்சர் காட்டம்
Udhayanidhi Arrest : உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
Kanimozhi: ஆபாச பேச்சு விவகாரம்; உதயநிதி ஸ்டாலின் கைது- கனிமொழி சொன்னது என்ன தெரியுமா?
Kanimozhi: ஆபாச பேச்சு விவகாரம்; உதயநிதி ஸ்டாலின் கைது- கனிமொழி சொன்னது என்ன தெரியுமா?
Udhayanidhi Arrest : சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
Udhayanidhi Stalin: உதயநிதி கைது.. கொண்டாட்டத்தில் தமிழக பாஜக.. தலைவர்கள் மகிழ்ச்சி பதிவு!
Udhayanidhi Stalin: உதயநிதி கைது.. கொண்டாட்டத்தில் தமிழக பாஜக.. தலைவர்கள் மகிழ்ச்சி பதிவு!
உதயநிதியை முடக்கி சட்டப்பேரவையை நடத்த திட்டம்.! விஜய் அரசின் நடவடிக்கையை விளாசிய இபிஎஸ்
உதயநிதியை முடக்கி சட்டப்பேரவையை நடத்த திட்டம்.! விஜய் அரசின் நடவடிக்கையை விளாசிய இபிஎஸ்
Maruti Suzuki: லிட்டருக்கு 35 கி.மீ. மைலேஜ்; மாருதியின் புதிய ஹைபிரிட் கார்: நடுத்தர மக்களின் கனவு!
Maruti Suzuki: லிட்டருக்கு 35 கி.மீ. மைலேஜ்; மாருதியின் புதிய ஹைபிரிட் கார்: நடுத்தர மக்களின் கனவு!
LIVE | Kerala Lottery Result Today (04.08.2026): கேரளா ஸ்த்ரீ சக்தி லாட்டரியில் இன்று குலுக்கல்; கோடிகளை வெல்வது யார்?
LIVE | Kerala Lottery Result Today (04.08.2026): கேரளா ஸ்த்ரீ சக்தி லாட்டரியில் இன்று குலுக்கல்; கோடிகளை வெல்வது யார்?
Embed widget