மேலும் அறிய

தமிழ்நாட்டில் போக்சோ வழக்குகள் உயர்வு! காரணம் இது தான்! டிஜிபி சொன்ன புது தகவல்..

தைரியமாக புகாரளிக்க பள்ளிகளில் ஏற்படுத்தப்பட்ட விழிப்புணர்வு காரணமாக பாதிக்கப்படுவோர் துணிந்து புகாரளிக்க முன்வந்துள்ளனர், இதனால் போக்சோவில் அதிக வழக்குகள் பதிவாகியுள்ளன என டிஜிபி தெரிவித்துள்ளார்

தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை உட்பட அனைத்து குற்றங்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளதாக  உள்துறைச் செயலர் தீரஜ்குமார் புள்ளிவிவரங்களோடு பட்டியலிட்டார். 

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக நிலவிவரும் சட்ட ஒழுங்கு சூழல் குறித்தான விவாதம் எழுந்த நிலையில் அதனை விவரிக்க உள்துறைச் செயலர், பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன் மற்றும் சென்னை காவல் ஆணையர் அருண் ஆகியோர் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை இன்று சந்தித்தனர்.

குறைந்துள்ள குற்றங்கள்

கடந்த 5 ஆண்டுகளில் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட அனைத்து குற்றங்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளன. 2021ம் ஆண்டில் 422 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவான நிலையில், 2025ம் ஆண்டு அது 401 வழக்குகளாக குறைந்துள்ளன. சட்டம் ஒழுங்கு சூழல் தொடர்பாக உண்மைக்கு மாறாக சில மாதங்களாக ஒரு செய்திகள் ஊடகங்களில் சித்தரிக்கப்படுகின்றன

இது தொடர்பாக விளக்கம் அளிக்கவே இன்று செய்தியாளர்களை சந்திக்கிறோம். 2021ல் 1597 கொலை வழக்குகள் பதிவாகியுள்ளன. 2025ல் இது 1461 ஆக குறைந்துள்ளன என்றார். 

லாக் அப் மரணம் - சிபிஐ விசாரிக்கும்

காவல் மரணங்களை சகித்துக் கொள்ள முடியாது. காவல் நிலைய மரணங்கள் நடைபெறக் கூடாது என்பதுதான் அரசின் நிலைப்பாடு. கடந்த முறை அஜித் குமார் கொலை வழக்கில் அரசின் நிலைப்பாடு என்ன மற்றும் அரசு என்ன நடவடிக்கை எடுத்தது என்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். சிபிசிஐடி அந்த வழக்கை நன்றாக விசாரிக்கும் என்றாலும், சம்பந்தப்பட்டவர்கள் போலீஸார் என்பதால், வெளிப்படைத்தன்மை காரணமாக சிபிஐ-க்கு வழக்கை அரசு மாற்றியது.

இளைஞர் ஆகாஷ் மரணத்தில் சிபிசிஐடி விசாரணை அறிக்கையின்படி நடவடிக்கை எடுக்கப்படும். காவல் மரண வழக்குகளில் உரிய நடவடிக்கை எடுக்க அரசு தயாராக உள்ளது.

காவல் துறையினருக்கு வழிகாட்டு நெறிமுறைகள்

மக்களை எப்படி அணுக வேண்டும், விசாரணையை எப்படி நடத்துவது என தெளிவாக காவல் துறையினருக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகளில் நீதிமன்றத்தில் விரைவாக விசாரணை நடத்தி தீர்ப்புகள் பெறப்படுகின்றன.

நிரந்தர டிஜிபி விவகாரம்

2021-ஆம் ஆண்டில் 6,800 போதைப்பொருள் தடுப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. போதைப் பொருள் தடுப்புப் பணிகளை போலீசார் தீவிரப்படுத்தியதால் தற்போது வழக்குகள் அதிகரித்துள்ளன. நிரந்தர டிஜிபி விவகாரம் குறித்து யுபிஎஸ்சி-க்கு பரிந்துரை பட்டியல் அனுப்பப்பட்டுள்ளது. அதன்பிறகு இது குறித்து முடிவெடுக்கப்படும்” என்று அவர் தெரிவித்தார்.

விழிப்புணர்வால் அதிகரிக்கும் போக்சோ வழக்குகள்

இதன் பின்னர் பேசிய பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன் “பாலியல் வன்கொடுமை வழக்குகள் மற்றும் எஸ்.சி. எஸ்.டி வன்கொடுமை வழக்குகள் பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி இருக்கிறோம். தைரியமாக புகாரளிக்க ஏற்படுத்தப்பட்ட விழிப்புணர்வு காரணமாக பாதிக்கப்படுவோர் துணிந்து புகாரளிக்க முன்வந்துள்ளனர். குறிப்பாக “தைரியமாக புகாரளிக்க பள்ளிகளில் ஏற்படுத்தப்பட்ட விழிப்புணர்வு காரணமாக பாதிக்கப்படுவோர் துணிந்து புகாரளிக்க முன்வந்துள்ளனர். இதனால் போக்சோவில் அதிக வழக்குகள் பதிவாகியுள்ளன  சிறிய குற்றங்கள் என்றாலும் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கப்படுகிறது என்றார் 

விளாத்திகுளம் வழக்கு

விளாத்திகுளம் அருகே சிறுமி சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட வழக்கில், மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் சிறுமியின் பெற்றோரை அலைக்கழித்த புகார் எழுந்த உடனேயே அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. துறை ரீதியான விசாரணையும் நடக்கிறது என்று பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன் விளக்கமளித்தார்.

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

Puducherry Power Cut: புதுச்சேரியில் நாளை மின்தடை... எந்தெந்த பகுதிகள்? முழு விவரம்
Puducherry Power Cut: புதுச்சேரியில் நாளை மின்தடை... எந்தெந்த பகுதிகள்? முழு விவரம்
6 ஆண்டு கள்ளக் காதல் !! திருமணம் மீறிய உறவு - 150 சவரன் நகையோடு பறந்த பெண்
6 ஆண்டு கள்ளக் காதல் !! திருமணம் மீறிய உறவு - 150 சவரன் நகையோடு பறந்த பெண்
வெளிமாநில தமிழ் தாய்மார்களுக்கு குட் நியூஸ்.! ‘தாய்மாமன் தங்க மோதிரம்‘ திட்ட நிபந்தனையில் தளர்வு: அரசு அறிவிப்பு
வெளிமாநில தமிழ் தாய்மார்களுக்கு குட் நியூஸ்.! ‘தாய்மாமன் தங்க மோதிரம்‘ திட்ட நிபந்தனையில் தளர்வு: அரசு அறிவிப்பு
Tamilnadu Power Cut: தமிழகத்தில் நாளை (08-10-2026) எங்கெல்லாம் மின் நிறுத்தம்? - முழு லிஸ்ட் இதோ
தமிழகத்தில் நாளை (08-10-2026) எங்கெல்லாம் மின் நிறுத்தம்? - முழு லிஸ்ட் இதோ

வீடியோ

Congress MLA Abuse : எல்லை மீறிய காங். எம்.எல்.ஏ! ஓடும் பேருந்தில் அநாகரிகம்.. விளாசும் நெட்டிசன்கள்
TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வெளிமாநில தமிழ் தாய்மார்களுக்கு குட் நியூஸ்.! ‘தாய்மாமன் தங்க மோதிரம்‘ திட்ட நிபந்தனையில் தளர்வு: அரசு அறிவிப்பு
வெளிமாநில தமிழ் தாய்மார்களுக்கு குட் நியூஸ்.! ‘தாய்மாமன் தங்க மோதிரம்‘ திட்ட நிபந்தனையில் தளர்வு: அரசு அறிவிப்பு
MK Stalin vs Vijay : தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
Repo Rate: ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
TNPSC Vacancy: க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
Honda Elevate Facelift First Look: ஹோண்டா எலிவேட் ஃபேஸ்லிஃப்ட்ல புதுசா என்ன இருக்கு.? பணத்துக்கு சிறந்த மதிப்ப தருதா.? இதோ முதல் பார்வை
ஹோண்டா எலிவேட் ஃபேஸ்லிஃப்ட்ல புதுசா என்ன இருக்கு.? பணத்துக்கு சிறந்த மதிப்ப தருதா.? இதோ முதல் பார்வை
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
Ukraine Drone Attack: ரஷ்ய கருங்கடலில் 23 இந்தியர்களுடன் சென்ற எண்ணெய் கப்பலை தீக்கிரையாக்கிய உக்ரைன்; நடந்தது என்ன.?
ரஷ்ய கருங்கடலில் 23 இந்தியர்களுடன் சென்ற எண்ணெய் கப்பலை தீக்கிரையாக்கிய உக்ரைன்; நடந்தது என்ன.?
Embed widget