மேலும் அறிய

“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

கரூர் துயர சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக திமுக எம்.எல்.ஏ., செந்தில் பாலாஜிக்கு சிபிஐ சம்மன் அனுப்பியதை செந்தில் பாலாஜி தரப்பு வாங்க மறுத்ததாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் செந்தில் பாலாஜி அதற்கு பதிலடி கொடுத்துள்ளார்,

கரூர் துயர சம்பவம் தொடர்பான விசாரணைக்கு மீண்டும் ஆஜராகும்படி,  தவெக தலைவர் விஜய்க்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. ஆனால், தேர்தல் பணிகள் காரணமாக நேரில் ஆஜராவதிலிருந்து 15 நாட்கள் அவகாசம் அளிக்க வேண்டுமெனவும், விசாரணையை டெல்லியில் இல்லாமல் சென்னையிலேயே நடத்த வேண்டும் என்றும் தவெக தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாம். இதுதொடர்பாக சிபிஐ பரிசீலித்து வருவதாகவும், சம்மனில் குறிப்பிட்டுள்ளபடி இன்று விஜய் விசாரணைக்கு ஆஜராக வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது. அதிமுக - பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜயை இணைக்க அழுத்தம் கொடுக்கும் முயற்சியாக, சிபிஐ அனுப்பிய சம்மன் கருதபப்டுகிறது. 

செந்தில் பாலாஜியின் சதி காரணமாகவே இந்த கூட்ட நெரிசல் ஏற்பட்டதாக தவெகவினர் அப்போதே குற்றம்சாட்டி இருந்தனர். ஆனால், தவெகவின் முன்னேற்பாட்டில் இருந்த குறைபாடுகள் காரணமாகவே கூட்ட நெரிசல் ஏற்பட்டதாக, பல்வேறு வீடியோ மற்றும் புகைப்பட ஆதாரங்களை கொண்டு செந்தில் பாலாஜி செய்தியாளர் சந்திப்பை நடத்தி இருந்தார். 

இந்நிலையில் தான், கரூர் கூட்ட நெரிசல் மரணம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராக, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தகவல்களின்படி, கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில், மார்ச் 10ம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி செந்தில் பாலாஜிக்கு சம்மன் அனுப்பப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், செந்தில் பாலாஜி, அவரது வீட்டில் இருப்பவர்கள் அல்லது அலுவலக ஊழியர்கள் என யாருமே அந்த சம்மனை பெறவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து, இ-மெயில் மூலமாகவும் செந்தில் பாலாஜிக்கு சம்மன் அனுப்பப்பட்டதாக சொல்லப்பட்டது. 

இந்தநிலையில் செந்தில் பாலாஜி இதுக்குறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக, சி.பி.ஐ சம்மன் அனுப்பியது குறித்து, முன்னுக்கு பின் முரணாக சில ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.. வருகின்ற மார்ச் 17 அன்று நேரில் வந்து விளக்கமளிக்குமாறு சி.பி.ஐ அனுப்பிய சம்மனின் அடிப்படையில்,  அவர்களது கேள்விகளுக்கு நேரில் சென்று உரிய விளக்கங்களை அளிக்கவுள்ளேன்.. என தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால், திமுகவிற்கு நெருக்கடி கொடுக்கும் விதமாக, கொங்கு மண்டல பொறுப்பாளரான செந்தில் பாலாஜியை முடக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன் ஒரு பகுதியாகவே கரூர் விவகாரத்தில் செந்தில் பாலாஜிக்கு அனுப்பப்பட்ட சம்மனும் பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

30 நாள் கெடு... அதிகாரிகளுக்கு செக் வைத்த காஞ்சிபுரம் ஆட்சியர் சினேகாவின் அதிரடி உத்தரவு!
30 நாள் கெடு... அதிகாரிகளுக்கு செக் வைத்த காஞ்சிபுரம் ஆட்சியர் சினேகாவின் அதிரடி உத்தரவு!
'நோ காம்ப்ரமைஸ்!' - குற்றவாளிகளுக்குத் தொடர் செக்: மயிலாடுதுறையில் மீண்டும் மீண்டும் பாயும் குண்டாஸ்!
'நோ காம்ப்ரமைஸ்!' - குற்றவாளிகளுக்குத் தொடர் செக்: மயிலாடுதுறையில் மீண்டும் மீண்டும் பாயும் குண்டாஸ்!
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ABP Nadu Top 10, 18 August 2026: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Evening
ABP Nadu Top 10, 18 August 2026: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Evening

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
Yamaha R2 Price Features: யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
Sierra Vs Seltos Diesel AT: டாடா சியராவா.? கியா செல்டோஸா.? டீசல் ஆட்டோமேட்டிக் பதிப்பில் Performance கிங் யார்.? இதோ ஒப்பீடு
டாடா சியராவா.? கியா செல்டோஸா.? டீசல் ஆட்டோமேட்டிக் பதிப்பில் Performance கிங் யார்.? இதோ ஒப்பீடு
Embed widget