Tamil Nadu Budget 2026 LIVE: இடைக்கால வேளாண் பட்ஜெட் தாக்கல்.. என்னென்ன அறிவிப்புகள்!
Tamil Nadu Interim Agriculture Budget 2026 LIVE Updates: சட்டமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் இடைக்கால பட்ஜெட்டை திமுக அரசு இன்று தாக்கல் செய்தது. தொடர்ந்து வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
LIVE

Background
Tamil Nadu Interim Budget 2026: தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் இன்னும் 2 மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த மாத இறுதியில் அல்லது வரும் மார்ச் மாத தொடக்கத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று கருதப்படுகிறது.
நாளை இடைக்கால பட்ஜெட் தாக்கல்:
இந்த நிலையில், தமிழ்நாட்டின் இடைக்கால பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்படுகிறது. மு.க.ஸ்டாலினின் இந்த ஆட்சியின் கடைசி பட்ஜெட் இந்த பட்ஜெட் ஆகும். வரும் சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு பல்வேறு முக்கிய அறிவிப்புகளை தமிழ்நாடு அரசு வெளியிடும் என்று கருதப்படுகிறது.
அதாவது, இந்த அறிவிப்புகள் வாக்காளர்களை கவரும் வகையிலே இருக்கும் என்றே கருதப்படுகிறது. மகளிர் உரிமைத் தொகை, மகளிர் விடியல் பயணம், நான் முதல்வன், புதுமைப் பெண் திட்டம் என்று பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் நிலையில், மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கத்தில் அறிவிப்புகளை வெளியிடும் என்றே கருதப்படுகிறது.
பெண்கள் வாக்குகள்:
வரும் தேர்தலில் பெண்களின் வாக்குகள் ஆட்சியைத் தீர்மானிப்பது யார்? என்பதை தீர்மானிக்கும் முக்கிய சக்தியாக திகழும் என்று கருதப்படுகிறது. இதனால், பெண்களின் வாக்குகளை தக்க வைக்கும் வகையில் ஏதேனும் முக்கிய அறிவிப்புகள் இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
போக்குவரத்து துறையில் சென்னையை போன்று மற்ற மாநகரங்களையும் உயர்த்தும் வகையில் மதுரை, கோவை, திருச்சி போன்ற நகரங்களில் மெட்ரோ சேவைகளை செயல்படுத்தும் திட்டம், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு, விலைவாசி உயர்ந்திருக்கும் நிலையில் அதை கட்டுப்படுத்துவதற்கான அறிவிப்பு என பல்வேறு அறிவிப்புகள் இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
குறிவைக்கப்படும் வாக்குகள்:
இந்த அறிவிப்புகளை மீண்டும் ஆட்சிக்கு வந்தால்தான் செயல்படுத்த முடியும் என்பதால் அதற்கேற்பவே அறிவிப்புகளை வெளியிடுவார்கள் என்று கருதப்படுகிறது. விவசாயம், தொழில்நுட்பம், கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்துறையில் பல்வேறு அறிவிப்புகள் இருக்கலாம் என்றே கருதப்படுகிறது.
இடைக்கால பட்ஜெட் என்பதால் வாக்குகளை குறிவைத்தே திமுக அரசின் அறிவிப்புகள் இருக்கும் என்றே கருதப்படுகிறது. திமுக தங்களின் மற்ற திட்டங்களை தேர்தல் வாக்குறுதிகளாக அளிக்கும் என்றும் அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Tamil Nadu Budget 2026 LIVE: இலவச தென்னங்கன்று வழங்க ரூ.18.42 கோடி ஒதுக்கீடு
இலவச தென்னங்கன்று வழங்க ரூ.18.42 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் திட்டங்களால் 17,035 ஆதி திராவிட விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.
TN Agriculture Budget 2026 LIVE: ரூ.46 கோடியில் உழவர் சந்தைகள் புதுப்பிப்பு
ரூ.46 கோடியில் உழவர் சந்தைகள் புதுப்பிக்கப்படும். மதிப்புக்கூட்ட பொருள் திட்டத்திற்காக ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது























