மேலும் அறிய

Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?

பாமக நிறுவனர் ராமதாஸை நேரில் சந்தித்து 1 மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடத்தியுள்ளார் சசிகலா. செய்தியாளர்கள் சந்திப்பை தவிர்ப்பதற்காக ஒரு ட்ரிக் செய்து அங்கிருந்து சசிகலா கிளம்பி சென்றதாக சொல்கின்றனர். 

பாமக நிறுவனர் மற்றும் ராமதாஸ் மற்றும் பாமக தலைவர் அன்புமணி இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கட்சியினர் 2 தரப்பாக பிரிந்துள்ளனர். தேர்தல் ஆணையத்தின்படி கட்சியின் தலைவராக இருக்கும் அன்புமணி அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறார். மற்றொரு பக்கம் ராமதாஸ் கூட்டணி பேச்சுவார்த்தை இழுபறியில் செல்கிறது. திமுகவுடன் பேச்சுவார்த்தை நடந்த நிலையில், விசிக அதற்கு முட்டுக்கட்டை போட்டதால் ராமதாஸ் திமுக கூட்டணி கைகூடவில்லை என பேச்சு அடிபடுகிறது.

திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் கடந்த சில நாட்களாக நடைபெற்ற நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பெரும்பாலான நிர்வாகிகள் தவெகவுடனான கூட்டணிக்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக சொல்கின்றனர். புதிதாக கட்சி தொடங்கிய சசிகலாவும் விஜய்யுடன் கைகோர்க்கவிருப்பதாக கூறப்படுகிறது. இந்த அணியுடன் களத்தில் இறங்கி பயணித்தால் நமக்கு அதிக இடம் கிடைக்கும் என ராமதாஸ் ஆதரவாளர்கள் அவரிடம் சொன்னதாக தெரிகிறது. ஆனால் திராவிட கட்சிகளுடன் கூட்டணி என்பதை நோக்கியே ராமதாஸ் சிந்திப்பதாக சொல்கின்றனர்.

இந்தநிலையில் திடீரென நேற்று இரவு தைலாபுரம் வந்த சசிகலா ராமதாஸை சந்தித்து 1 மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடத்தியுள்ளார். மேலும் பத்திரிகையாளர்களை சந்திக்காமல் இருப்பதற்காக தைலாபுரம் தோட்டத்தில் உள்ள மற்றொரு கதவை திறந்து வேறொரு காரை வெளியே அனுப்பியிருக்கின்றனர். பத்திரிகையாளர்கள் அங்கே சென்ற போது பிரதான நுழைவுவாயில் வழியே சசிகலா கார் வெளியே சென்றுள்ளது. இதனால் ராமதாஸ் மற்றும் சசிகலா ஆகியோர் பத்திரிக்கையாளர்களை சந்திக்காமல் இருக்க இது போன்ற ஒரு செயலை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சந்திப்பு தொடர்பாக ராமதாஸ் தரப்பில் கேட்ட போது கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை என்றும், ராமதாசை சந்தித்து நலம் விசாரித்து விட்டு உணவு அருந்திவிட்டு சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இருந்தாலும் கூட்டணி தொடர்பாக சில முக்கிய விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டதாகவும் பேச்சு இருக்கிறது.

மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
ஷாக் கொடுக்கும் அரிசி, பருப்பு, எண்ணெய் விலை.. நரகமாகும் பண்டிகை கொண்டாட்டம்.. சோதனையில் மக்கள்!
ஷாக் கொடுக்கும் அரிசி, பருப்பு, எண்ணெய் விலை.. நரகமாகும் பண்டிகை கொண்டாட்டம்.. சோதனையில் மக்கள்!
ABP Nadu Top 10, 7 October 2026: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்! - Afternoon
ABP Nadu Top 10, 7 October 2026: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்! - Afternoon
TNPSC Vacancy: க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்

வீடியோ

TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!
செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin vs Vijay : தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
TNPSC Vacancy: க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
Min Arunraaj: மனோ தங்கராஜிற்கு என்ன சம்மந்தம்? செவிலியர்களுக்கு நல்ல சேதி சொன்ன அமைச்சர் அருண் ராஜ்
மனோ தங்கராஜிற்கு என்ன சம்மந்தம்? செவிலியர்களுக்கு நல்ல சேதி சொன்ன அமைச்சர் அருண் ராஜ்
மாத்திரை கவரில் இடம்பெற்ற இந்தி.. திமுகவுக்கு இதே வேலையா போச்சு.. பாயிண்ட் எடுத்து வெளுத்து வாங்கிய தவெக!
மாத்திரை கவரில் இடம்பெற்ற இந்தி.. திமுகவுக்கு இதே வேலையா போச்சு.. பாயிண்ட் எடுத்து வெளுத்து வாங்கிய தவெக!
TN Weather News: தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - சென்னை? வானிலை அறிக்கை
தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - சென்னை? வானிலை அறிக்கை
Honda Elevate: புது எலிவேட்டிற்கு எலிவேஷன் கொடுத்த ஹோண்டா..! கூடுதல் அம்சங்கள், சொகுசு வசதிகள் - விலை எப்படி?
புது எலிவேட்டிற்கு எலிவேஷன் கொடுத்த ஹோண்டா..! கூடுதல் அம்சங்கள், சொகுசு வசதிகள் - விலை எப்படி?
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
Embed widget