மேலும் அறிய
Nirmala Sitharaman Saree : 2019 முதல் 2023 வரை.. பட்ஜெட் தாக்கலின் போது நிர்மலா சீதாராமன் அணிந்த அசத்தலான சேலைகள்!
Nirmala Sitharaman Saree : மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதா ராமன் அணியும் புடவைக்களுக்கு பல ரசிகர்கள் உள்ளனர். இதுவரை நடந்த பட்ஜெட் தாக்கலின் போது நிர்மலா அணிந்த சேலைகளை பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
நிர்மலா சீதாராமன் (Photo Credits : PTI)
1/6

2024 ஆம் ஆண்டின் இடைக்கால பட்ஜெட் தாக்கலில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ப்ளூ- கிரீம் நிற டஸ்ஸார் புடவையை அணிந்துள்ளார். இது மஹாராஷ்டிராவை சார்ந்தது. (Photo Credits : PTI)
2/6

2023 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கலின் போது நவலகுண்டா எம்பிராய்டரியுடன் கையால் நெய்யப்பட்ட சிவப்பு இல்கல் புடவையை மத்திய அமைச்சர் நிர்மலா அணிந்து இருந்தார். இந்த புடவையை, கர்நாடக மாநிலத்தை சேர்ந்த அமைச்சர் பிரகலாத் ஜோஷி பரிசாக கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. (Photo Credits : PTI)
3/6

2022 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கலின் போது ஒருவிதமான ப்ரவுன் நிற பூம்காய் சேலையை அணிந்து இருந்தார். இது ஒடிசாவை சார்ந்தது. (Photo Credits : PTI)
4/6

2021 ஆம் ஆண்டின் பட்ஜெட் தாக்கலின் போது சிவப்பு - வெள்ளை நிற போச்சம்பள்ளி சேலையை அணிந்து இருந்தார். இது தெலங்கானாவை சார்ந்தது. (Photo Credits : PTI)
5/6

2020 ஆம் ஆண்டின் பட்ஜெட் தாக்கலின் போது குட்டி பார்டர் கொண்ட மஞ்சள் நிற சேலையை அணிந்து இருந்தார். (Photo Credits : PTI)
6/6

2019 ஆம் ஆண்டின் இடைக்கால பட்ஜெட் தாக்கலின் போது தங்க நிற பார்டர் கொண்ட பிங்க் நிற மங்களகிரி சேலையை அணிந்து இருந்தார். இது ஆந்திராவை சார்ந்தது. (Photo Credits : PTI)
Published at : 01 Feb 2024 12:30 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement





















