மேலும் அறிய

Agriculture Budget 2026: விவசாயிகளுக்கு AI கருவிகள்: பெண்களுக்கும் பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு! தமிழகத்திற்கு முக்கிய அறிவிப்புகள்!

Union Budget 2026: கிராமங்களில் மகளிர் சுய உதவிக்குழுக்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களின் பொருட்களை விற்க she mart கடைகள் அமைக்கப்படும்


2026-27ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு ஏஐ கருவிகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

2027-27ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். தொடர்ந்து ஒன்பதாவது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்த நிர்மலா சீதாராமன், 16ஆவது நிதிக்குழு அறிக்கையையும் தாக்கல் செய்தார். சுதந்திர இந்தியாவில் முதல்முறையாக ஞாயிற்றுக்கிழமை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே பட்ஜெட்டை தாக்கல் செய்த அமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அதில், பாரத் விஸ்தார் என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஏஐ கருவிகள் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். மாற்றுத்திறனாளிகளுக்கு உதவ ஏஐ தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் என்று கூறியுள்ளார். 

கிராமங்களில் she mart கடைகள்

கிராமங்களில் மகளிர் சுய உதவிக்குழுக்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களின் பொருட்களை விற்க she mart கடைகள் அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார். மேலும், கடலோர பகுதிகளில் தேங்காய் சாகுபடியை ஊக்குவிக்க புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளார். தென்னை உற்பத்தி செய்யும் மாநிலங்களில் பட்டுப்போன தென்னை மரங்களை நீக்கி புதிய மரங்கள் நடப்படும் என்றும் 3 கோடி மக்கள் தேங்காய் உற்பத்தியை சார்ந்து இருப்பதாலும், உலகத்திலேயே தேங்காய் உற்பத்தியில் முதன்மை நாடாக இந்தியா திகழ்வதால் அவற்றை மேம்படுத்த புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

தமிழ்நாட்டுக்கு 5 புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.

1. நெல்லை பொதிகை மலையில் மலையேற்ற சுற்றுலா தலம் அமைக்கப்படும்.

2. ஆதிச்சநல்லூரில் தொல்லியல் ஆய்வு நடத்தப்படும் மற்றும் கலாச்சார ஆய்வு மையம் அமைக்கப்படும்.

3. பழவேற்காடு ஏரியில் பறவைகளை கண்காணிப்பதற்காக 3 புதிய கண்காணிப்பு கோபுரங்கள் மற்றும் பறவைகளை காண்பதற்கான பிரத்யேக காட்சி மையம் அமைக்கப்படும்.

4.  தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் தென்னை மற்றும் முந்திரி உற்பத்தியை அதிகரிக்க தனித் திட்டம் ஏற்படுத்தப்படும்.

5. சென்னையில் இருந்து ஹைதராபாத்துக்கு அதிவேக ரயில் இயக்கப்படும்.

முன்னதாக கிராமங்களில் காதி, தொழிலை வளர்க்க மகாத்மா காந்தி பெயரில் புதிய திட்டம் தொடங்கப்படும் என்று அறிவித்துள்ளார். சமீபத்தில், மத்திய அரசு நூறு நாள் வேலைத்திட்டத்தில் மகாத்மா காந்தியின் பெயரை நீக்கி, விபி ஜி ராம்  ஜி என பெயரிட்டது. இதற்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேலும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் நிறைவேற்றினார். இந்த நிலையில், மகாத்மா காந்தி பெயரில் புதிய திட்டத்தை இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், சிறு, குறு தொழில் நிறுவனங்களை பாதுகாப்பதற்காக 2 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் அறிவித்துள்ளார். ஆந்திரா, ஒடிசா, தமிழ்நாட்டில் அரியவகை தாதுக்கள் வழித்தடம் அமைக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

 

தலைப்பு செய்திகள்

வாக்குறுதிகள் வெற்று அறிவிப்பா? கருகியது வாழை: நடுரோட்டில் விவசாயிகள் - வேல்முருகன் ஆவேசம்
வாக்குறுதிகள் வெற்று அறிவிப்பா? கருகியது வாழை: நடுரோட்டில் விவசாயிகள் - வேல்முருகன் ஆவேசம்
டெல்டா விவசாயிகளுக்கு குட் நியூஸ்! கல்லணையில் இருந்து செப்.6-ல் தண்ணீர் திறப்பு
டெல்டா விவசாயிகளுக்கு குட் நியூஸ்! கல்லணையில் இருந்து செப்.6-ல் தண்ணீர் திறப்பு
மதுரை மாட்டுத்தாவணி : (04.09.2026) கிருஷ்ண ஜெயந்தி முன்னிட்டு இன்று காய்கறி நிலவரம் என்ன?
மதுரை மாட்டுத்தாவணி : (04.09.2026) கிருஷ்ண ஜெயந்தி முன்னிட்டு இன்று காய்கறி நிலவரம் என்ன?
மயிலாடுதுறையில் தேங்கிக் கிடக்கும் பல்லாயிரக்கணக்கான நெல் மூட்டைகள் : கொள்முதல் நிலையங்கள் திறந்தும் பயனில்லை - விவசாயிகள் வேதனை..
மயிலாடுதுறையில் தேங்கிக் கிடக்கும் பல்லாயிரக்கணக்கான நெல் மூட்டைகள் : கொள்முதல் நிலையங்கள் திறந்தும் பயனில்லை - விவசாயிகள் வேதனை..

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Candidate Vijay: விஜய் பிரதமர் வேட்பாளராக களமிறங்குவதில் என்னென்ன சிக்கல்கள்? ஓர் அலசல்
PM Candidate Vijay: விஜய் பிரதமர் வேட்பாளராக களமிறங்குவதில் என்னென்ன சிக்கல்கள்? ஓர் அலசல்
KN Nehru: கே. என். நேருவை மடக்க அவிநாசியில் ஸ்கெட்ச்..! சிக்கிய நிறுவனம்? ரூ.1020 கோடி ஊழல்? DVAC அதிரடி
கே. என். நேருவை மடக்க அவிநாசியில் ஸ்கெட்ச்..! சிக்கிய நிறுவனம்? ரூ.1020 கோடி ஊழல்? DVAC அதிரடி
Putin Vs Ukraine: உக்ரைனுக்கு நிம்மதி.! அடுத்த 3 நாட்கள் தாக்குதல் நடத்த வேண்டாம் என புதின் உத்தரவு; ஏன் தெரியுமா.?
உக்ரைனுக்கு நிம்மதி.! அடுத்த 3 நாட்கள் தாக்குதல் நடத்த வேண்டாம் என புதின் உத்தரவு; ஏன் தெரியுமா.?
Donald Trump New Warning: ஈரானின் பிக்காக்ஸ் மலையை குறி வைத்த ட்ரம்ப்; கொடிய தாக்குதல் நடத்தப்படும் என எச்சரிக்கை; அதிகரிக்கும் பதற்றம்
ஈரானின் பிக்காக்ஸ் மலையை குறி வைத்த ட்ரம்ப்; கொடிய தாக்குதல் நடத்தப்படும் என எச்சரிக்கை; அதிகரிக்கும் பதற்றம்
பாலியல் புகார் சர்ச்சையில் புதிய திருப்பம்... ஸ்வாகதா குறிப்பிடும் அந்த இசையமைப்பாளரா இவர்?
பாலியல் புகார் சர்ச்சையில் புதிய திருப்பம்... ஸ்வாகதா குறிப்பிடும் அந்த இசையமைப்பாளரா இவர்?
EV Scooter Sales August: சாதித்த டிவிஎஸ், சறுக்கிய ஓலா.! ஆகஸ்ட் மாசம் அடிச்சுத் தூக்கிய மின்சார ஸ்கூட்டர் பிராண்ட் எது.?
சாதித்த டிவிஎஸ், சறுக்கிய ஓலா.! ஆகஸ்ட் மாசம் அடிச்சுத் தூக்கிய மின்சார ஸ்கூட்டர் பிராண்ட் எது.?
Gen Z பணியாளர்கள்: நெட்வொர்க்கிங் தயக்கம்...தொழில் வாய்ப்புகளை இழக்கிறார்களா?
Gen Z பணியாளர்கள்: நெட்வொர்க்கிங் தயக்கம்...தொழில் வாய்ப்புகளை இழக்கிறார்களா?
பிரதமர் மோடி ஆசிரியர்களுக்கு அறிவுரை: மொபைல், போதைப்பொருள் விழிப்புணர்வு அவசியம்!
பிரதமர் மோடி ஆசிரியர்களுக்கு அறிவுரை: மொபைல், போதைப்பொருள் விழிப்புணர்வு அவசியம்!
Embed widget