மேலும் அறிய
Budget 2024 Highlights : 2024 ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டின் டாப் 20 சிறப்பம்சங்கள்!
Budget 2024 Highlights in Tamil: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த 2024 பட்ஜெட்டின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

டைக்கால பட்ஜெட் 2024
1/8

கர்ப்பப்பை வாய் புற்றுநோயை தடுக்கும் வகையில் 9 முதல் 14 வயதுடைய சிறுமிகளுக்கு தடுப்பூசி போடும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
2/8

ஒரு கோடி வீடுகளுக்கு சோலார் மின் வசதி ஏற்படுத்தி தரப்படும். வீட்டின் மொட்டை மாடியில் சோலார் அமைத்தால் 300 யூனிட் மின்சாரம் இலவசம்.
3/8

அங்கன்வாடி பணியாளர், உதவியாளர்களுக்கு ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம். சுற்றுலாத்துறையில் ஆன்மீக சுற்றுலாவுக்கு பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும். மாநிலங்களுக்கு வட்டியில்லா கடனாக ரூ.1.3 லட்சம் கோடி வழங்கப்படும்.
4/8

விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்படும். பால் உற்பத்தியை அதிகரிக்க திட்டங்கள் செயல்படுத்தப்படும். தொழில் தொடங்க வட்டியில்லா கடன் வழங்குவதற்காக ரூ. 1 லட்சம் கோடியில் புதிய நிதியம் அமைக்கப்படும்.
5/8

பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் அடுத்த 5 ஆண்டுகளுக்கு கிராமப்புறங்களில் 2 கோடி வீடுகள் புதிதாக கட்டித்தரப்படும்.
6/8

40,000 சாதாரண ரயில் பெட்டிகள் வந்தே பாரத் ரயில் பெட்டிகளாக தரம் உயர்த்தப்படும். உள்நாட்டு சுற்றுலா மேம்படுத்தவும், வேலைவாய்ப்பை அதிகரிக்கவும் முன்னுரிமை அளிக்கப்படும். துறைமுகங்கள் மற்றும் தொழிற்சாலைகளை இணைக்கும் வகையில் 3 முக்கிய ரயில்வே பெரு வழித்தடங்கள் அமைக்கப்படும்.பெருநகரங்களில் மெட்ரோ ரயில் சேவையை விரிவுப்படுத்த முன்னுரிமை அளிக்கப்படும்.
7/8

உதான் திட்டத்தின் கீழ் புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும்.புதிய சாலை, ரயில் துறைமுகங்களுக்கான வழித்தடங்கள் ஏற்படுத்தப்படும்.
8/8

3 கோடி பெண் லட்சாதிபதிகளை உருவாக்க மத்திய அரசு இலக்கு. நேரடி மற்றும் மறைமுக வரி விதிப்பில் எந்த மாற்றமும் இல்லை. பழைய நிலையே தொடரும். ஏற்கனவே உள்ள மருத்துவமனைகளில் புதிதாக மருத்துவக்கல்லூரிகள் அமைக்கப்படும்.
Published at : 01 Feb 2024 04:03 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
பொழுதுபோக்கு
ஐபிஎல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion